பிச்சைப் பாத்திரத்தை
நிறைப்பவள்
சின்னஞ்சிறு
குழந்தையொன்று
என்னைச்
சிநேகிதியாய் ஏற்றுக் கொண்டு
பிரியம் காட்டத் தொடங்கிய
அற்புத நொடியில்தான்,
குழந்தையிடம்
அட்சயப் பாத்திரத்தையும்
என்னிடம்
பிச்சைப் பாத்திரத்தையும்
புன்னகையோடு
வழங்கிச் சென்றிருந்தார் கடவுள்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.