ரோசா மல்லி முல்லை
இப்படித்தான்
நினைவுபடுத்திச் சொல்லுவேன்
அதற்குள் மறைந்துவிடும்

பாட்டியைத் தொடர்ந்து
அம்மாவும் சொல்லுவாள்
அப்படித்தான் சொல்லனும் என்று

விழும்போதெல்லாம்
மூன்று பூ பெயரைச்
சொல்லிவிடுகிறேன்
அல்லது
அப்படி சொல்லனும் என்கிறேன்
ஞாபகம் வளர

ஒரு நாள் சொல்லி முடித்ததும்
நகர்ந்து கொண்டேயிருந்தது
நட்சத்திரம்

More articles by செந்தில்பாலா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.