1

என்னவளும்
உன்னவளும்
அருகிருக்கையில்
சிலவேளைகளில்
சின்னப் பார்வைகளிலேயே
நீண்ட விசாரிப்புகளை
பகிர்ந்துகொண்டு
பிரிகிறோம்
நாம்

2

முப்பது
வருடங்களுக்கு
முன்னான நிகழ்வுகளை
அசைபோடும்
மிச்சத்தின் எச்சமாய்
தளர்ந்து கிடக்கின்றன
என் தேகமும்,
நினைவு தப்பும்
நம் தோழமையும்

3

தொலைவிலிருக்கிற
உன்னைப் பற்றிய
நினைவுகள்
வரும்போதெல்லாம்
வைரமாய்க்
காட்சியளிக்கிறது
பள்ளியின் மற்ற
மாணவர்களோடு சேர்ந்து
நாம் எடுத்துக் கொண்ட
புகைப்படம்

- ஏகலைவன், சேலம்.

Pin It