ஒரு போதும் முடியாது என்னால்

ஒரு தனிமையை விரட்டியடிக்க
ஒரு பொம்மையோடு சயனிக்க

ஒரு மௌனத்தைத் தக்கவைக்க
நிசப்தம் துடைத்து கடக்கும்
ஒரு வார்த்தையைக் கொலை செய்ய

அந்தகார இருளிலும்
ஒளியை எழுதும்
பிரியத்தின் கதகதப்பை
விலக்கிப் போக

வட்டங்களுக்குள்ளிருந்து
விட்டம் வெறிக்க

யதார்த்தத்தின் வெம்மை கடக்க
கனவின் நிழலில்
பதுங்குகையில்
வேலி தாண்டியபடி
வளரும் செடியில்
மழைக்குப் பிறகான
வெயிலென மலர்கிறது
வாழக்கிடைத்த ஒரு கணம்

- அதங்கோடு அனிஷ்குமார்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.