புத்தகத்தில்
மயிலிறகுகளை
சேமித்திருந்தாள் சிறுமி பிரியா
யாராவது ஏதாவது சொன்னால்
மயிலிடம் சொல்லிவிடுவேனென
மிரட்டுவாள்
புத்தகத்தை
இறுகிப் பிடித்தே தூங்குவாள்

திடீரென ஒரு நாள்
காணாமல் போனது
மயிலிறகு புத்தகம்
அம்மாவிடம் சொல்லி
அழுது கொண்டே இருந்தாள்
மயில் அச்சடித்த
சேலை உடுத்தி
எதிரே நின்ற அம்மாவை
கட்டியணைத்து
முத்தம் கொடுத்தாள்
கண்ணீரைத்
துடைத்துக் கொண்டிருந்தது
மயில்...

 - பாரிமேகம்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.