கொத்துக் கொத்தாய்
தரையில் இதயம் கிடக்கிறது
அதிலிருந்து கசியும் குருதி
அலையலையாய் நீண்டு
பிருஷ்டம் தாண்டி
யெவன கர்வத்தில்
கருமுகிலாய்
ஆலிங்கனத்தில் கரியநிற
அரவங்களாய் சுருண்டிருந்தன
அவன் விரல்களுக்குள்
மெல்லிய புதர்க்காடாய்
என் உயிர்க் கொடிகளாய்
இரவாய் ஆண் நுகர்வின் வாசனையாய்
கலவியின் அர்த்தம் தரும் நீள் வரிகளாய்
மோக வாக்கியங்களின் நீட்சியாய்
நீளமேயான அக்கூந்தலை
குறுக்கிட்டேன்
உதிர்ந்து கிடந்த மயிர்க்கற்றைகளில்
என் கண்களும் வாடிக்கிடக்கின்றன.

- உமாசக்தி

Pin It