இரண்டாயிரத்து ஒன்பது மே மாதம் பதினெட்டாம் தேதியோடு ஈழத்தமிழர்களின் ஆயுதம் தாங்கிய போராட்டம் அடக்கி ஒடுக்கப்பட்டது. 1956 - 1982 வரையிலான ஈழத்தமிழர்களின் போராட்டம், 1983 - 2009 ஈழத்தமிழர்களின் போராட்டம் என்று இரு தன்மைகளாகப் பிரித்துப் பார்க்கலாம். சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் ஈழத்தமிழர்கள் போரோடு வாழ்ந்தனர். போர் இப்போது நிறுத்தப்பட்டு விட்டது. இந்தப் போர் மூலம் ஏற்பட்ட விளைவுகளை மக்கள் அநுபவித்து வருகிறார்கள். அதிலிருந்தும் அவர்களுக்கு விடுதலை தேவை. இந்த இதழில் உள்ள பதிவுகள் மூலம் போர் முடிந்த பின்பும் மக்கள் புதிய வகையான துன்பங்களுக்கு ஆளாக்கப் படுவதும் சிங்களப் பேரினவாதம் சர்வாதிகாரமாக உருப்பெற்று வருவதையும் அறிய முடிகிறது.

இவ்விதழுக்கு அழைப்பாசிரியராக செயல்பட்டுள்ள நண்பர் தெ. சுகுமாரன் அவர்களுக்கு எங்களது நன்றி.

Pin It