‘சென்னை  வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்குச்  செல்லும் பறக் கும் தொடர் வண்டிப் பாதையில் பய ணித்தால் கீழே துர்நாற்றம் மிக்க கால்வாய் ஒன்று தென்படும். அது தான் பக்கிங்காம் கால்வாய். தொடர் வண்டிப்  பாதையே பக்கிங்காம் கால் வாய் மீது தான் அமைக்கப் பட்டுள் ளது எனலாம்.அதாவது மைய்ய அரசின் இரயில்வேத் துறையே பக்கிங்காம் கால் வாயின் பெருவாரியான பகுதிகளை ஆக்ரமிப்பு செய்துள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நாட்டின் போக் குவரத்துக்கு உயிர் நாடி யாய்த் திகழ்ந்த இக் கால்வாய் இன்று ஆக்கிர மிப்புக்களாலும்  அசுத்தங்களா லும் ஜீவனற்று சீரழிந்து  கிடக்கிறது.

கால்வா  யின் இரு புறமும் வீடுகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட் டுள்ளது. அது மட்டுமின்றி தொழிற்சாலைகள், உணவு விடுதிகள் மற்றும் வீடுகளி லிருந்து வெளி யேறும் கழிவு நீர் கால்வாயில் கலந்து விடப்படுகின்றது. இடிக்கும் கட்டடங்களிலிருந்து கொண்டு வரும்  கற்களையும், காரைகளையும் மருத்துவ  மனைகளிலிருந்து கொண்டு வரும் கழிவு களையும்  கழிவுத் தொட்டிகளில் சேக ரிக்கப்படும் கழிவு நீரையும்,  இக்கால்  வாயில் கொண்டு சேர்க்கிறார்கள்.

போக்குவரத்துக்கு என்று இந்த கால்வாய் வெட்டப்பட்டாலும்  வறுமையைப்  போக்குவது என்பதும் இதன் நோக்கமாக இருந் திருக்கிறது,  ஆங்கிலேயர் ஆட்சியில் அப்போது ஏற்பட்ட பஞ்சத்தின்  காரணமாக வறுமையில் வாடிய மக்களுக்கு வேலை கொடுப்பதற்காகவும், நீர் வழிப் போக்கு வரத்தை மேம் படுத் துவதாகவும் ஆங்கிலேய கவர்னர் பக்கிங்காம் காலத்தில்  ஆந்திராவிலி ருந்து சென்னை வழியாக மரக்காணம் வரை இக் கால்வாய் வெட்டப் பட் டது. பின்னர் இக்கால்வாய்க்கு அவர்  பெயரே சூட்டப்பட்டது.

1876ஆம் ஆண்டு தொடங்கி அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமைக்கப்பட்ட இக் கால்வாயின் மொத்த நீளம் 420 கி.மீட்டர். ஆந்திராவில் 250 கி.மீ. நீளமும், தமிழ்நாட்டில் 170 கி.மீ. நீளமும்  உள்ள இதற்கு அந்நாளில்  30 லட்சம் ரூபாய் செலவாகியிருக்கிறது. இந்தக் கால்வாய் சென்னைக்கு வடக்கே பழவேற்காடு, நெல்லூர், ஓங்கோல், மசூலிப்பட்டணம், விஜயவாடா, காக்கிநாடா, போல வரம், வாசிராபாத் ஆகிய பகுதிக ளையும்  தெற்கே  திருவான்மியூர் திருப்போரூர் மாமல்ல புரம், ஆகிய பகுதிகளையும்  இணைக் கிறது.

கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு அரிசி, காய்கறிகள், பால், உப்பு, தேங்காய், மீன், கருவாடு, ஆடு, கோழி, இறைச்சி, விறகு, வைக்கோல்  முதலான பொருட்களை இக்கால்வாய் வழி யாகக் கொண்டு சென் றார்கள். இந்தக் கால் வாய் போக்குவரத்து 1950 ஆண்டு வரை நீடித்திருக்கிறது . பிறகு  தொடர் வண்டிப் பாதைகளின்  வளர்ச்சி  இதன் முக்கியத் துவத்தை இழக்கச் செய்திருக்கிறது.

அதன் பின்பு ஆட்சிக்கு வந்தவர்கள் இக்கால்வாயைக் கண்டு கொள்ள வில்லை.  ஆட்சியா ளர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளின் அலட் சியத் தால் இது நாள டைவில் கவனிப்பா ரின்றி தூர்ந்து போயுள் ளது.

உலகில் வளர்ச்சி யடைந்த நாடுகளான அமெரிக்கா, சீனா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில், நீர் வழிப் போக்குவரத்தை சிறப்பாக செயல் படுத்தி வருகின்றனர். குறிப்பாக அமெரிக்கா 21 விழுக்காடு சரக்குகளை நீர்வழியாகக் கொண்டு செல்கிறது. ஆனால், இந்தியவோ 0.1. விழுக்காடு சரக்குகளை மட்டுமே நீர் வழியில் பயன்படுத்துகிறது. அதிகமாக ஆறுகளை கொண்ட இந்தியாவில் நீர் வழிப் போக்குவரத்து முறையாகப் பயன் படுத்தப்படாமலேயே உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு   நீர் வழிப் போக்குவரத்தை மேம்படுத்த,   இந் தியா, உள்நாட்டு நீர் வழி ஆணையம் என்ற அமைப்பை கடந்த 1986ஆம் உத்திரப் பிரதேசத்தில் உள்ள நொய் டாவை தலைமையகமாக கொண்டு தொடங்கியது. இதுவே இந்தியாவில் நீர் போக்குவரத்துக்கென சட்டப்படி அமைக்கப்பட்ட ஆணையமாகும்.

இந்த ஆணையம்  நாட்டில் உள்ள ஆறுகள் கால்வாய்கள் ஆகிய வற்றை ஆய்வு செய்து ஆறு புதிய நீர் வழிப் போக்குவரத்து திட்டங்களை வடிவமைத்துள்ளது.

இதில் பெட்டிச் செய்தியில் குறிப்பிட்ட தேசிய நீர் வழிப் பாதை  4இன் கீழ் தீட்டப்பட்டுள்ள காக்கிநாடா - புதுச்சேரி நீர் வழித் போக்குவரத்துத் திட்டமே பக்கிங்காம் கால்வாயை உள்ளடக்குவதாகும்

இத்திட்டத்தின் கீழ் ஆந்தி ராவில் ஓடும் கோதாவரி, கிருஷ்ணா, ஆறுகள்  காகி நாடாவிலிருந்து புதுச் சேரி வரை கால்வாய்கள் மூலம் இணைக்கப்படும் அப்போது பக்கிங் காம்  கால்வாய் மீண்டும் புத்துயிர் பெறும்.

இக்கால்வாயின்  மொத்த நீளம் ஆயிரத்து 27 கி.மீ. இதில் ஆற்றுப்பகுதி 328 கி.மீ. கால்வாய் பாசனப்பகுதி 32கி.மீ. உப்பு நீர் கால்வாய் பகுதி 397 கி.மீட்டராகும்.

இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ஆயிரத்து 515 கோடி.இதில் முதல் நிலைக்கு 609 கோடி ரூபாயும், இரண்டாம் நிலைக்கு 906 கோடி ரூபாயும் செலவிடப்பட உள்ளது.

வடக்கு பக்கிங்காம் கால்வாய் மற்றும் தெற்கு பக்கிங்காம் கால்வாய், கம்மாமூர் கால்வாய் மற்றும் கழுவேலி குளம் ஆகிய பகுதிகளில் கால்வாய் அமைக்க 906 கோடிரூபாய் செலவாகும். இத்திட்டம் நிறைவடைய ஏழு ஆண்டுகளாகும் எனப்படுகிறது

இந்த திட்டத்திற்காக தேவைப் படும் நிலங்கள் தமிழகத் திலிருந்து 300 எக்டேரும், ஆந்திராவில் 380 எக் டேரும் புதுச்சேரியில் 27 எக்டேரும் கையகப்படுத்த வேண்டும். இதற்காக 391 கோடியும், கால்வாய் அமைக்க 333 கோடியும்  செலவாகும் என மதிப்பிடப்படுகிறது.

இந்த திட்டத்தின் நோக்கம் நிறைவேறும் பட்சத்தில் கோதாவரி ஆற்று வழியாக நிலக்கரியும், கிருஷ்ணா ஆறு வழியாக சிமிட்டியும், கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆறு களின் வழியாக அரிசியும் ஆக,  ஆண்டுக்கு ஒரு கோடியே 10 லட்சம் டன் சரக்குகளை கையாள    முடியும் எனகின்றனர்

இது மட்டுமின்றி பக்கிங்காம் கால்வாய் வழியாக ஆந்திரா, தமிழ் நாடு, புதுச்சேரி இடையே சிறப்பான பயணிகள் போக்குவரத்து நடை பெறும். சுற்றுலாத்துறையும் வளர்ச்சி பெற்று பொருளாதார முன்னேற்றம் அடையும் எனப்படுகிறது

தவிர,இந்த நீர்வழியில் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதால் உள்நாட்டு சுமையுந்துகள் மூலம் எடுத்துச்செல்லும் பொருட்களை கப்பல் மூலம் கொண்டு செல்லலாம். இதன் மூலம் 90 விழுக்காடு வரை எரிப்பொருளை சேமிக்க முடியும். மிச்சமாகும் எரி பொருளை பயன் படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் சுற்றுச் சூழலையும் பாது காக்க முடியும்.

மேலும். தேசிய நீர் வழித் தடங்களில் ஆங்காங்கே மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து, மின் உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம் ஆண்டுக்கு 65 ஆயிரம் கோடி ரூபாய் எண்ணெய் செலவு குறையும். இதனால் அன்னிய செலவாணி மிச்சமாகும்.

நீர் வழிகளில் மின் உற்பத்தி மூலம் 60 ஆயிரம் மெகாவாட் மின் சாரம் உற்பத்தி செய்ய முடியம். இது ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் எனவும் துறைசார்ந்த வல்லுநர்கள் கூறு கிறார்கள்.

மழைக்காலங்களில் பெருக் கெடுத்து ஓடி வரும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி, இக்கால்வாய் களில் விடுவதின் மூலம் மழையால் எற்படும் பாதிப்பை தடுக்க முடியும். மேலும் ஒவ்வொரு பருவமழையின் போதோ, புயல் மழையின் போதும் ஏற்படும் வெள்ள சேதத்திற்காக வெள்ள நிவாரணம் வேண்டி திரு வோடு ஏந்தி தில்லிக்கு பயணம் செய்ய வேண்டிய தில்லை

வட தமிழக மக்கள் விவ சாயத்திற்கும், குடிநீருக்கும்  நம்பியுள்ள  பாலாறும் பாலைவனமாகி வருகிற இந்த மோசமான சூழ்நிலையில் உள் நாட்டு நீர் வழி திட்டத்தை செயல் படுத்தினால் குடிநீர் பிரச்சனையும் பெருமளவு தீரும்.

மோலும் 15 கோடி ஏக்கர் நிலம் கூடுதலாக  பாசன வசதி பெற்று, விவசாயம் செழித்தோங்கி, ஆண்டிற்கு 50 கோடி டன் உணவு உற்பத்தி செய்ய முடியும். உணவு பொருட்களின் ஏற்று மதிபெருகி அன்னியசெலாவணி ஈட்ட   முடியும். என்றும் குறிப்பிடுகின் றனர்.

இவ்வளவு சிறப்பும் கொண்ட உள் நாடடு நீர் வழி போக்குவரத்துத் திட்டங்களுக்கு, திட்டக் கமிஷன்  அனுமதி அளித்தாலும் தில்லி அரசு இத்திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் கை விரித்து விட்டதனாலும் இத்திட்டங்களைக் கப்பால். போக்குவரத்து துறையால் செயல்படுத்த முடியவில்லை.

அதே நேரத்தில் ‘கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் தங்க நாற்கரச். சாலை திட்டத்தின் கீழ் ஆறு வழி சாலைகள் மற்றும் நான்கு வழி சாலைகள் திட்டங்களுக்குக்  கோடி கணக்கில் செலவழிக்கப்படுகிறது.

இத்துடன் தொடர் வண்டிப் போக்கு வரத்தை மேம்படுத்தும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் உள் நாட்டு நீர் வழி போக்குவரத்திற்கு உரிய  உதவி செய் யாமல் உதாசீனம் செய்து வருகிறது. தில்லி அரசு. சாலை போக்குவரத்து துறையில் பேருந்துகள்,  சுமையுந்துகள் கனரக ஊர்திகள், இவற்றின்  உதிரி பாகங்கள், மற்றும் டயர் போன்ற இதர பொருட்களை உற்பத்தி செய்வதிலும், அகலமான நீண்ட நெடிய சாலைகளை அமைப்பதற்கு மேம்பாலங்களை கட்டுவதற்கும், தொடர்வண்டி இருப்புபாதைகள் அமைப்பதற்கும் தேவை யான அதிக ஆற்றல் கொண்ட     போன்ற நவீன இயந்திரங்களை தயாரிப்பதிலும், இவற்றுக்குத்  தேவையான உதிரிபாகங்களை தயா ரிப்பதிலும், இங்கு பெரு முதலாளிய உள்ளநாட்டு மற்றும், பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இவர்களின் தொழில் தங்கு தடையின்றி நடைபெற வேண்டுமா னால், உள் நாட்டு சாலைகளை மேம்ப டுத்துவது அவசியமாகிறது, இதன் கார ணமாக தில்லிஅரசு இவர்களுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுக் கிறது.

மேற்கண்ட நிறுவனங்களுக்கு தேவைப்படும் மூலப்பொருட்களை கொண்டு வருவதற்கும், உற்பத்தி செய்த பொருளை கொண்டு செல்வ தற்கும் தொடர் வண்டித் போக்கு வரத்தை மேம்படுத்துவதில் அக்கறை காட்டுகிறது.

நீர் வழிப் போக்கு வரத்தை அதிகரிக்கச் செய்து அவற்றை மேம்ப டுத்தினால் இவர்களது மேற்கண்ட தொழில்களுக்கு போதுமான சந்தை யிலுக்காது அல்லது சந்தை வாய்ப்பு பெருமளவு குறையும் எனவேதான் தில்லி ஆட்சியாளர்கள் இதில் அக்கறை காட்டாது இருக்கிறார்கள்

தில்லிஆட்சியாளர்களுக்கோ, மாநிலத்தில் ஆளும் கட்சிகளுக்கோ  மக்களை பற்றிக்கவலை இல்லை. அவர்களின் கரிசனம் எல்லாம் பெரு முதலாளிகளையும், பன்னாட்டு நிறு வனங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதே. .இதனால்தான்இந்தியப் பெருமுதலாளிகள், ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும.மீண்டும் இவர்களே அதிகாரத்திற்கு வருவதற்கும் தேர் தல் காலங்களில் கோடிக் கணக்கான ரூபாய்களை கொடுத்தும். இந்த அரசு களைப் பாதுகாத்து வருகிறார்கள்.

எனவே மாநில அரசுகள் தில்லி அரசுக்கு சலாம் போட்டு தலை யாட்டிக் கொண்டிருக்காமல், தங்கள் மாநில நலனைக் கருத்தில் கொண்டு, மைய அரசுக்கு நெருக்கடி  கொடுத்து, மேற்குறிப்பிட்ட நீர்வழிப் போக்கு வரத்துத் திட்டங்களை செயல்படுத்த நிர்ப்பந்திக்க வேண்டும், மற்றபிற அமைப்புகளும், மக்களும் பிரச்சனை களை மையப்படுத்தி ஒன்று திரண்டு மாநில உரிமைகளை விட்டு கொடுக் காமல் போராடி, கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டும்

 

திட்டமிடப்பட்டுள்ள புதிய நீர்வழித் தடங்கள்

இந்திய உள்நாட்டு நீர் வழி ஆணையம், நாட்டில் உள்ள கால்வாய்கள். ஆறுகள், உப்பளங்கள், நீரோடைகள், ஆகியவற்றை ஆய்வு செய்து ஆறு புதிய நீர் வழித்தட போக்குவரத்து திட்டங்களை  உருவாக்கியுள்ளது.

தடம்1  இது அலகாபாத் ஹால்டா இடையே கங்கை, பாகீரதி, ஹ¨க்ளி ஆகிய ஆறுகளிடையேயான ஆயிரத்து 620 கி.மீட்டர் நீளத்திற்கான திட்டம்.

தடம்2. இது சாடியா துப்ரி இடையே பிரம்மபுத்திரா நதியின் 891 கி.மீ. நீளத்திற்கான திட்டம்.

தடம்3   கோட்டபுரம் கொல்லம் இடையே மேற்கு கடற்கரை கால்வாய், சாம்பகரா கால்வாய் மற்றும் உத்யோக் மண்டல் கால்வாய். ஆகியவற்றை இணைத்த திட்டம் இது 205  கி.மீ நீளமாகும்

தடம்4  காகிநாடா புதுச்சேரி இடையேயான கால்வாய், கழுவேலி குளம், பத்ராசலம், ராஜ முந்திரி, இடையே கோதாவரி ஆ. வாசிராபாத்  விஜயவாடா இடையே கிருஷ்ணா ஆறு ஆகியவற்றை இந்த நீர் வழித்திட்டம் இணைக்கிறது. இதன் மொத்த நீளம் 1,095 கி.மீட்டராகும்.

தடம்5  தலைச்சேரி தாம்ரா இடையே பிராமானி ஆறு, கிழக்கு கடற்கரை ஓரம் ஜியோன்காலிசார்பாடியா இடையேயான கால்வாய், சார்பாடியா தாம்ரா இடையே மாடை ஆறு, மான்கால் காடிபாரதீப் இடையே மகாநதி டெல்டா ஆகியவற்றை இணைக்கிறது. இதன் நீளம் 623 கி.மீட்டராகும்.

தடம்6 லாகிபூர் பாங்கா இடையே பராக் ஆற்றில் 12 கி.மீட்டர் நீளமாகும்

Pin It