"உத்தரப் பிரதேசத்தில் அரசுத் திட்டத்தின் கீழ் பசு மாட்டுச் சாணம் மற்றும் கோமியம் (மூத்திரம்) கொள்முதல் செய்யும் அல்லது பயன்படுத்தும் விநியோகத்தில், சிலர் பசு மாட்டிற்குப் பதிலாக எருமை மாட்டின் மூத்திரத்தை கலப்படம் செய்து வழங்கியதாகக் கூறப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரப் பிரதேச அரசு ‘புனிதமான’ பசு மாடுகளின் கழிவுகளான சாணம் மற்றும் கோமியத்தை விவசாயிகளிடமிருந்து வாங்கும் திட்டங்களையும் கூட்டுறவு அமைப்பு வழியாக செயல்படுத்தி வருகிறது.

பசு மாட்டுக் கோமியத்திற்கு அரசாங்கத்திடமிருந்தோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட இயற்கை விவசாயக் கொள்முதல் மய்யங்களிலிருந்தோ நல்ல விலை கிடைப்பதைப் பயன்படுத்தி, சிலர் அதிகளவில் எருமை மாட்டு மூத்திரத்தை பசு மாட்டு கோமியத்துடன் கலந்து விநியோகம் செய்தது கண்டறியப்பட்டது. எருமை மாடுகள் அதிகளவில் சிறுநீர் வெளியேற்றுவதால், குறுகிய காலத்தில் அதிக அளவு கோமியத்தைச் சேகரித்து முறைகேடாகப் பணம் சம்பாதிக்க இந்த முறைகேடு செய்யப்பட்டுள்ளது.

ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் கோமியத்தின் அடர்த்தி, நிறம் மற்றும் இரசாயன அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளில், விநியோகிக்கப்பட்ட கோமியத்தில் எருமை மாட்டின் மூத்திரம் பெருமளவில் கலக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக இட்டா, மீரட், ஜல்னோர் மற்றும் உ.பி முதலமைச்சரின் சொந்த மாவட்டமான கோரக்பூரில் உள்ள பசு சிறுநீர் கொள்முதல் மய்யங்களில் இந்த மோசடி நடந்துள்ளது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த ஏமாற்று வேலையில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் போலி விநியோகஸ்தர்கள் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்ததுடன், கொள்முதல் மய்யங்களில் கோமியத்தின் தரத்தைப் பரிசோதிக்கச் சிறப்பு வழிகாட்டுதல்களையும் வெளியிட்டனர்.

உத்தரப் பிரதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ள முன்னோடித் திட்டத்தின் கீழ், பசுமாட்டுக் கோமியம் லிட்டருக்கு ரூ.10 என்ற விலையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறதாம். குறிப்பாக நாட்டுப்பசு இறக்குமதிப்பசு கலப்பட இனப்பசு என மூன்று ரகம் இந்தியாவில் உள்ளதால் எந்தப்பசுவின் மூத்திரம் வாங்கவேண்டும் என்ற சரியான வழிகாட்டுதல் இல்லை, ஆகையால் கால்நடை உரிமையாளர்கள் எருமை மூத்திரத்தையும் கலந்து கொடுத்துவிடுகின்றனர். மேலும் கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை, ஆகவே அவர்களும் கொண்டுவரும் மூத்திரம் எல்லாம் பசு மூத்திரம் என்று நம்பி வாங்கி அதற்கான தொகையைக் கொடுத்து வருகின்றனர்.’’

அறிவியல் மருத்துவம் என்ன கூறுகிறது?

பசுமாட்டு கோமியத்தில் பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் இருப்பது அறிவியல் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. முக்கியப் பாக்டீரியாக்கள் & கிருமிகள்

  • எஸ்செரிச்சியா கோலை (Escherichia coli – E. coli): வயிற்றுப்போக்கு, குடல் தொற்றுகள் மற்றும் சிறுநீரகப் பாதை தொற்றுகளை (UTI) ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியா.
  • புரூசெல்லா (Brucella species): ‘புரூசெல்லோசிஸ்’ (Brucellosis) என்ற காய்ச்சலை உண்டாக்கக்கூடியது. இது மாடுகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய ஆபத்து கொண்டது.
  • லெப்டோஸ்பைரா (Leptospira): எலிக்காய்ச்சல்/மாட்டுக்காய்ச்சல் (Leptospirosis) போன்ற தீவிரமான தொற்றுகளை உருவாக்கும் கிருமி.
  • சால்மோனெல்லா (Salmonella): கடுமையான வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் உணவு நஞ்சாதல் (Food Poisoning) போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
  • ஸ்டேஃபிளோகோக்கஸ் aureus (Staphylococcus aureus): பிடித்தலை உண்டாக்கக்கூடிய பாக்டீரியா
  • கிளெப்ச iella (Klebsiella) & புரோட்டீயஸ் (Proteus): சுவாசப் பாதை மற்றும் சிறுநீரகப் பாதையில் அழற்சியை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள்.

இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் (IVRI – Indian Veterinary Research Institute) ஆய்வுகளின்படி, புதிய மற்றும் பதப்படுத்தப்படாத பசுவின் சிறுநீரில் மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 14 வகையான பாக்டீரியாக்கள் வரை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, சுத்திகரிக்கப்படாத மாட்டு மூத்திரத்தை நேரடியாகப் பயன்படுத்துவது அல்லது அருந்துவது தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதைச் சொன்னால் கோமாதா பக்தர்கள் மனம் புண்படுகிறது என்று கூக்குரலிடுவார்கள்.

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.