cockroach janatha partyஅவமதிப்பு வழக்குகள் நீதிமன்றம் வரும்போது ‘நான் அப்படி அந்த அர்த்தத்தில் பேசவில்லை’ என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் விளக்கம் தருவது வாடிக்கை; அதை நீதிபதிகள் கேட்டுக் கொண்டு இருப்பார்கள். இப்போது நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. “நான் கரப்பான் பூச்சி என்று வேலை தேடும் இளைஞர்களை கூறவில்லை; போலி வழக்கறிஞர்களைத் தான் குறிப்பிட்டேன்” என்று ஒரு நீதிபதியே தன்னிலை விளக்கம் கூறிய நிலை வந்துவிட்டது. அதுவும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் சூரியகாந்த்.

இளைஞர்கள் கொதித்தெழுந்து விட்டார்கள். இணையத்தில் ’கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை’ அபிஜீத் திப்கே என்ற அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் தொடங்கினார். இவர் ஆம்ஆத்மி கட்சியில் சேர்ந்து பிறகு விலகியவர்.2 கோடிக்கு அதிகமான இளைஞர்கள் உறுப்பினர்களாகி விட்டார்கள். கரப்பான் பூச்சி படையால் பதறிப் போன மோடி ஆட்சி அவர்களது முகநூல் பக்கத்தை முடக்கி தேசவிரோதிகள் என்று முத்திரை குத்துகிறது.

கரப்பான் பூச்சி கட்சி தனது கொள்கையாக 5 அம்சங்களை தெரிவித்திருக்கிறது.

  • ஓய்வு பெறும் நீதிபதிளுக்கு எம்.பி பதவி தரக்கூடாது.
  • ஓட்டு மோசடி நடந்தால் தேர்தல் ஆணையத் தலைவரை ’உபா’ சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
  • பெண்களுக்கு 50% விழுக்காடு இட ஒதுக்கீடு வேண்டும்
  • அம்பானி, அதானி பிடியில் இருந்து ஊடகங்களை விடுவிக்க வேண்டும். என்பதே இவர்களுடைய 5 அம்ச கொள்கைகள்

கரப்பான் பூச்சி கட்சி சென்னையிலும், மதுரையிலும் தனது ஆர்ப்பாட்டங்களை இடதுசாரிகள் ஆதரவுடன் நடத்தி இருக்கிறது. ஒன்றிய உயர்கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வீட்டிற்குமுன் திரண்டு நீட் முறைகேடுகளை கண்டித்து ஆர்பாட்ட்டம் நடத்தியிருக்கிறார்கள். இளைஞர்களுடைய எழுச்சி ஒன்றிய மோடி ஆட்சிக்கு எதிராக திரும்பி இருக்கிறது. வேலை இல்லா திண்டாட்டத்தை அனுமதித்தவர்கள். இன்றைக்கு இந்த போராட்டத்தைக் கண்டு நடுங்கிப் போகிறார்கள்.

- விடுதலை இராசேந்திரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.