“அனைத்து ஜாதி இந்துக்களும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற சட்டத்தை அமல்படுத்தி இந்து சமூகத்தின் தன்மானத்தை மீட்டது திராவிட மாடல் ஆட்சி. ஆனால் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிராமணர் அல்லாத இந்து அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்து பிராமணர்கள் மட்டுமே' அர்ச்சகராக இருக்க முடியும் என்று தீர்ப்பு அளித்தார். பார்ப்பனரல்லாத சூத்திர, பஞ்சம இந்துக்களை இப்படி நீதிமன்றம் அவமதித்த போது பாஜகவும் இந்து முன்னணியும் எங்கே போயின?.. இந்துக்களின் தன்மானத்துக்காக அரசு கொண்டுவந்த சட்டத்தை நீதிமன்றம் அவமதிக்கலாமா என்று அண்ணாமலைகள் பொங்கினார்களா?..
பார்ப்பனியம் சக இந்துக்களை அவமதிக்கும் போது வெட்கம், மானம் இன்றி மண்டியிட்டுக் கிடப்பார்கள்: அதுதான் ஆகமம் என்று நியாயம் பேசுவார்கள். திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயிலுக்குள் தீப விளக்கு ஏற்ற வேண்டும் என்பதுதான் ஆகமம் என்று அந்த கோயிலின் அர்ச்சகர்களே கூறுகிறார்கள். ஆனாலும் கூட தர்காவுக்கு அருகில் உள்ள எல்லைக்கல்லை தீபத்தூண் என்று கூறி அதில்தான் விளக்கேற்ற வேண்டும் என்று நீதிமன்றத் தீர்ப்பையும் தங்களுக்கு சாதகமாக பெற்றிருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பைத் தூண்ட ஆகமங்களை மீறலாம் தவறில்லை என்கிறார்கள்.
இந்து மதம் என்ற வேத தர்மம் ஆகமத்தைக் காட்டி சூத்திர பஞ்சமர்களை அவமதிக்கிறது; புண்படுத்துகிறது இந்துத்துவ அரசியல் இஸ்லாமியர்கள் எதிர்ப்புக்காக ஆகமத்தை மீறுகிறது. இதற்கு சூத்திர பஞ்சமர்களை தனக்கு அடியாட்களாக அழைக்கிறது. அர்ச்சகர் நியமனத்தில் ஆகமத்தை வலியுறுத்தும் நீதிமன்றம், விளக்கேற்றும் பிரச்சனையில் ஆகமத்திற்கு எதிராக தீர்ப்பளிக்கிறது. இந்த நிலையில் இந்துக்களின் தன்மானத்திற்கும் இஸ்லாமியர்களின் உரிமைக்கும் பாதுகாப்புக்கும் அரணாக நிற்கிறது தமிழ்நாடு அரசு. பார்ப்பனிய "பாதம் தாங்கி"கள் இந்து விரோத ஆட்சி என்று கூக்குரலிடுகிறார்கள்."
- விடுதலை இராசேந்திரன்