தொடர்புடைய படைப்புகள்

modi with multiple hands 626ஊழல் ஊழல் என்று கூப்பாடு போடும் பாஜக ஊழல் ஒழிப்பு உத்தமர்களின் ஊழல் பட்டியல் இதோ:

  • ஜார்கண்ட் மாநில நிலக்கரி ஊழலில் வாஜ்பாய் அமைச்சரவையில் இணை அமைச்சராக இருந்த திலீப் ராய் 3 ஆண்டுகள் சிறை தண்டனை.
  • கர்நாடகத்தில் டெண்டர் முறைகேட்டில் கர்நாடக பாஜக அமைச்சர் நேரு கெலேகர் 2 ஆண்டுகள் சிறை.
  • 2013 வியாபம் ஊழலில் உச்ச நீதிமன்றம் சி.பி.அய் விசாரணைக்கு உத்தரவிட்டது. ம.பி பாஜக அமைச்சர் லஷ்மிகாந்த் சர்மா 18 மாதம் சிறை.
  • 1 கோடி 37 லட்சம் ரூபாய் ஊழல் வழக்கில் மிசோரம் பாஜக எம்.எல்.ஏ புத்த தன்சக்மா உட்பட 12 பாஜகவினருக்கு 1 ஆண்டு சிறை.
  • 2001-ல் பாதுகாப்புத்துறை தளவாடங்கள் வாங்கும் ஊழலில் பாஜக தலைவர் பங்காரு லஷ்மணனுக்கு 7 ஆண்டு சிறை.
  • பெங்களூர் மெகா சிட்டி ஊழலில் கர்நாடக பாஜக அமைச்சர் யோகேஸ்வரர் மீதான ஊழல் வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
  • ஒரு கோடி ரூபாய் மீன்வள ஒப்பந்த மோசடி வழக்கில் மோடி அமைச்சரவையில் அமைச்சராக இருந்த குஜராத் அமைச்சர்கள் பர்ஷோத்தம்பாய் ஓதவ்ஜிபாய் சோலங்கி, திலீப் சங்கனி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க குஜராத் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • 103 கோடி வங்கி மோசடி வழக்கில் மகாராஷ்டிரா பாஜக தலைவர் மோஹித் கம்போஜ் மீது சிபிஅய் விசாரணை நடைபெற்று வருகிறது.
  • 40 லட்சம் லஞ்சம் வழக்கில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ குருபரக்க்ஷாவுக்கு சிறை.
  • 18 கோடி சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் ஜனார்த்தன ரெட்டி சிறை.
  • பணி நியமன மோசடி வழக்கில் வங்காளத்தை சேர்ந்த யுவ மோர்ஷா (இளைஞரணி) மற்றும் உள்ளூர் தலைவர் சௌரவ் சவுத்ரிக்கு சிறை
  • அஸ்ஸாம் காவல்துறை தேர்வு ஊழல் வழக்கில் பாஜக தலைவர் தீபன்தேகாவுக்கு சிறை
  • மேற்கு வங்காளத்தில் கேஸ் டீலர் ஊழல் வழக்கில் பாஜக தலைவர் ரஞ்சித் பஜுந்தாருக்கு சிறை.
  • தமிழ்நாட்டில் 2438 கோடி ஆருத்ரா நிதி மோசடி வழக்கில் பாஜக உறுப்பினர்கள் ஹரிஷ் மற்றும் ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் வழக்கு விசாரணையில் உள்ளனர்.
  • 5000 கோடி நியோ மேக்ஸ் நிதி மோசடி வழக்கில் மதுரை பாஜக உறுப்பினர் வீரசக்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
  • விக்ராந்த் போர்க்கப்பல் மீது 57 கோடி ஊழலில் மகாராஷ்டிரா பாஜக தலைவர் கிரி சோமையா கைது.
  • கர்நாடக காவல்துறை தேர்வு ஊழல் வழக்கில் பாஜக எம்.எல்.ஏ திவ்யா சிறை
  • பண மோசடியில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ குமரசாமிக்கு 4 ஆண்டுகள் சிறை.
  • பீகாரில் சுதாபுரி மாவட்டத்தில் கலவரத்தை தூண்டியதாக பாஜக எம்.எல்.ஏ ராம் நரேஷ் யாதவ் 10 ஆண்டு சிறை. இந்தக் கலவரத்தில் 5 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.
  • உ.பி உனாவ் சிறுமி வன்கொடுமை மற்றும் தந்தை கொலை வழக்கில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் 10 ஆண்டு சிறை.
  • சிறுமி பாலியல் வழக்கில் உத்தரப்பிரதேச பாஜக எம்.எல்.ஏ ராம் துலேவுக்கு 25 ஆண்டுகள் சிறை.
  • கிரிமினல் வழக்கில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராம் சங்கர் கட்டாரியா 2 ஆண்டுகள் சிறை.
  • பல்வேறு ஊழல் மோசடி வழக்கில் சிக்கி உள்ள கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தற்போது பிணையில் உள்ளார்.
  • சி.ஏ.ஜி அறிக்கை மோடி ஆட்சியில் பல லட்சம் கோடி ஊழல் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளது.
  • இப்படி ஊழல் ஒருபுறம், கிரிமினல் வழக்குகள் ஒருபுறம், நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை விற்பனை செய்வது, நாட்டின் இயற்கை வளங்களை தனியாருக்கு தாரைவார்ப்பது என்று இந்தியாவை சிதைத்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு. இதையெல்லாம் மறைப்பதற்கு மதவாத அரசியலை பயன்படுத்துகிறார்கள்.

 - மனோ தங்கராஜ் (தி.மு.க)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.