Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

1.

மருந்துச் சந்தையின் பணம் காய்க்கும் மரமாக இருப்பது தடுப்பூசி. அவற்றைப்பற்றி இப்போதாவது மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்ற டாக்டர்.புகழேந்தியின் குரல் தமிழ்நாட்டு பத்திரிக்கைகளில் அவ்வப்போது ஒலித்து அடங்கும். எப்போதெல்லாம் சொட்டு மருந்தாலோ, தடுப்பூசியாலோ குழந்தைகள் இறந்ததாக புகார் எழுகிறதோ அப்போதெல்லாம் தடுப்பூசிகளை எதிர்க்கும் ஒரு சில மருத்துவர்களின் கருத்துக்கள் மேலோட்டமாக தமிழகத்தில் எதிரொலிப்பது வழக்கம். உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் தடுப்பூசிகள் பற்றிய ஆய்வுகளையோ, மேலை நாடுகளில் தடுப்பூசி எதிர்ப்பு பற்றிய செய்திகளையோ நம் நாட்டில் கேட்கவே முடியாது. 1880 களில் துவங்கி உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் தடுப்பூசி எதிர்ப்புச் சங்கம் (Anti vaccination leaque)கனடாவில் தடுப்பூசிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களால் துவக்கப்பட்ட தடுப்பூசிகள் விழிப்புணர்வு அமைப்பு (VRAN)1980 களில் அமெரிக்காவில் தோற்று விக்கப்பட்ட தடுப்பூசி வழக்குகள் நீதிமன்றம் ( U.S. Vaccine court ) என தடுப்பு மருந்துகள் பற்றிய சர்ச்சை உலகமெங்கும் விவாதிக்கப்படும் போது இங்கே எந்தவிதமான எதிர்கேள்விகளும் இன்றி அறிவிக்கப்படாத கட்டாயத் தடுப்பூசிச்சட்டம் அமுலில் உள்ளது. தமிழகத்தின் மருத்துவ விழிப்புணர் விற்கு உதாரணமாக 2008 போலியோ தடுப்பு மருந்தால் இறந்ததாகக் கூறப்பட்ட குழந்தைகளின் மரணத்தையே எடுத்துக்கொள்ளலாம்.

2008 மே மாதத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கப் பட்டுக் கொண்டிருந்தபோது 7 மாவட்டங் களில் 10 குழந்தைகள் இறந்தன. ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் தடுப்பு மருந்தின் பக்கம் திரும்பிய போது - அச்சம்பவத்தை ஆராய மத்தியக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. மருந்துகள் வைக்கப்பட்ட இடம், அவற்றை பராமரிக்கும் வசதிகள், அவை குழந்தை களுக்கு வழங்கப்பட்ட முறை என்று அனைத்தையும் விசாரித்த அக்குழு நடைமுறையில் தவறுகள் ஏதுமில்லை, வழங்கப்பட்ட மருந்துகளைத் தான் பரிசோதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மருந்துகள் இமாசலப் பிரதேசத்தின் கசவுலி ஆய்வுமையத்திற்கு அனுப்பப்பட்டன. பரபரப்பு குறைந்த அடுத்த பத்துநாட்களில் அந்த ஆய்வு முடிவும் வெளியானது மருந்துகளில் தவறு எதுவும் இல்லை என்று. வழங்கப்பட்ட மருந்துகளி லும் பிரச்சினை இல்லை, வழங்கப்பட்ட முறையிலும் தவறுகள் இல்லை என்றால் இறப்பிற்குக் காரணம் என்ன? எல்லா தடுப்பூசி இறப்புக்களுக் கும் சொல்லப்படும்- அக்குழந்தைகள் தடுப்பூசியினால் இறக்கவில்லை, வேறுநோய்கள் ஏற்கனவே இருந்திருக்கலாம் என்ற அதே காரணம் மீண்டும் சொல்லப்பட்டது. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் இப்படி யான மரணங்கள் எங்கு நிகழ்ந்தாலும் வழக்கமான இதே வரியோடு அவைகள் மறக்கப்படுகின்றன. தடுப்பூசி விற்பனையில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இவ்வ ளவு எளிமையாக குழந்தை மரணங் களை மறக்கடித்துவிட முடியாது.

ஆரோக்கியம் தரும் என்று நம்பி, அரசு கொடுக்கிற அனைத்தையும் நாம் கேள்வி கணக்கின்றி குழந்தை களுக்கு கொடுக்கிறோம். யார் பரிந்து ரைத்தாலும் அவற்றைப் பற்றிய தெளிவின்றி நம் குழந்தைகளுக்குக் கொடுப்பது அவர்களுக்கு எதிரான வன்முறையாகும்.

2

முதன்முதலில் அம்மை நோய்க்கான தடுப்பூசியை 1796ல் எட்வர்ட் ஜென் னர் என்பவர் கண்டறிந்தார். தன்னு டைய மகனுக்கு அத்தடுப்பூசியைச் செலுத்தி சோதித்ததன் மூலம் முதல் தடுப்பு மருந்தை நிரூபித்தார். அனைத்து மருத்துவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு சில வரு டங்களில் அத்தடுப்பூசி முதன்முதலில் போடப்பட்ட ஜென்னருடைய மகனும், இன்னும் சிலரும் மருந்தின் வீரியத்தால் இறந்தனர். தன்னுடைய இரண்டாவது மகனுக்கு ஜென்னர் தடுப்பூசியைப் பயன்படுத்தவில்லை. இப்படி கண்டுபிடிக்கப்பட்ட காலம் முதல் தடுப்பூசிக்கு எதிராக உலகம் எங்கும் ஆங்கில மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 1853இல் இங்கிலாந்தில் அம்மைத்தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் இணைந்து உலக தடுப்பூசி எதிர்ப்புச்சங்கத்தை தோற்றுவித்தனர். 1880ல் பாரீஸில் நடைபெற்ற தடுப்பூசி எதிர்ப்பு மாநாட்டில் அரசுகளுக்கு பல பரிந்துரைகள் அளிக்கப் பட்டன. இங்கிலாந்தில் தடுப்பூசிகளால் ஏற்பட்ட விளைவுகளை ஆராய 1889இல் ராயல் கமிஷன் அமைக்கப்பட்டது. 1896இல் வெளியான ராயல் கமிஷனின் அறிக்கையின் பேரில் கட்டாயத்தடுப்பூசிச்சட்டம் கைவிடப்பட்டது. உலகம் முழுவதும் இவ்வாறான தடுப்பூசிக்கு எதிரான வரலாறு தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 1989ல் அமெரிக்கப் பள்ளிக்குழந்தைகள் அனைவருக்கும் அம்மைத் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தடுப்பூசி போடப்பட்ட பிறகு அமெரிக்க அரசின் நோய்த்தடுப்பு மையம் (Center for Disease Control ) நடத்திய ஆய்வில் அமெரிக்கக் குழந்தைகளில் 98% பேருக்கு அம்மை நோய் தாக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஊசி போடுவதற்கு முன்பிருந்த அளவை விட மிக அதிகம். இந்நிலை அமெரிக்காவில் மட்டுமல்ல; உலகின் பலநாடுகளில் இதே நிலைதான். அமெரிக்காவில் 1990களில் மஞ்சள் காமாலைக்கான தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. பின்னர் தடுப்பூசிகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வுகளில் இவற்றைப் பயன்படுத்தும் குழந்தை களுக்கு 13 விதமான நோய்கள் ஏற்படுவதாக அறிந்து 1997ல் கட்டாயத்த்டுப்பூசிச் சட்டம் நீக்கப்பட்டது. தடுப்பூசி வியாபாரம் அமெரிக்க உபயோகமின்றி தேங்கிய நிலையில்தான் உலகப் பணக்காரர் பில்கேட்ஸ் தனது தொண்டு நிறுவனம் மூலமாக இந்தியாவில் 4.5 மில்லியன் குழந்தைகளுக்கு இலவசமாக மஞ்சள் காமலை தடுப்பூசி போட்டார். இப்போது அதே தடுப்பூசிகள் இந்தியா முழுவதும் பல்வேறு தொண்டு நிறுவனங்களா லும், அரசு அமைப்புக்களாலும் அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது.

3

தடுப்பூசி குறித்த வெளிப்புறத் தகவல் களைக் கண்டோம். தடுப்பூசி என்பது என்ன? அது ஏன் இவ்வளவு விளைவு களை ஏற்படுத்துகிறது? என்பதற்கான அகக்காரணிகளை அறிவோம். தடுப்பூசி மருந்துகள் கிருமிகளால் வரும் நோய்கள் பரவாமல் தற்காத்துக் கொள்ளப் பயன்படுவதாக விஞ்ஞானி கள் கூறுகின்றனர். கிருமிகளின் தோற் றம் குறித்த ஆய்வுகளில் கடந்த 150 வருடங்களாக இறுதியான முடிவு எதுவும் எட்டப்படாமல் அதன் ஒரு பகுதி ஆய்வு முடிவுகளைக் கொண்டு கிருமிகளுக்கான மருந்துகள் பரிந்துரைக்கப்படு கின்றன. இப்படியான கிருமிகளுக்கு எதிரான மருந்துகளைத்தான் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் என்று அழைக்கிறோம். இந்த நுண்ணியிர்க்கொல்லி மருந்துகள் புழக்கத்திற்கு வந்த பிறகுதான் புதிய பல மருந்துகளால் வரும் நோய்கள் தோன்றின. (இவை தான் பக்க விளைவுகள் என்று செல்லமாக அழைக்கப்படுகின்றன). இக்கிருமிகள் நோய் வந்த பிறகு மனித உடலிலேயே தோன்றுகின்றன என்று கூறும் பிளியோமார்ப்பிச ஆய்வுகள் இன்றளவும் நிரூபிக்கப்பட்டு வந்துள்ளன. என்றாலும், கிருமிகளின் மீதான கரிசனமும், அதன் பின்னாலுள்ள பல ஆயிரம் கோடி மதிப்புள்ள மருந்து வர்த்தகமும் இன்றைய மருத்துவ உலகின் பிரச்சாரத்தை தீர்மானிக்கின்றன. முடிவே இல்லாமல் தொடரும் கிருமிகளைப் பரவாமல் கட்டுப்படுத்தும் மருந்தாகத்தான் தடுப்பூசி மருந்துகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த தடுப்பூசி மருந்துகளில் அப்படி என்னதான் இருக்கிறது? நோயை ஏற் படுத்தும் என்று நம்பப்படுகிற கிருமிகள் தான் மருந்தாகக் கொடுக்கப் படுகிறது. அது மட்டுமல்ல; இந்த தடுப்பு மருந்தின் தன்மையைப் பாது காக்க பாதரசம் (Mercury)கலக்கப்படுகிறது. கிருமிகள் பரவிய பிறகு ஏற்படுவதாகச் சொல்லப்படுகிற பல நோய்களுக்கு கட்டுப்படுத்தும் மருந்துகளே இல்லாத நிலையில், நோய் ஏற்படும் முன்பே பாதுகாக்கும் தடுப்பு மருந்துகள் என்பவை கேலிக்கூத்தானவை. டாக்டர்.வில்லியம் ட்ரெப்பிங் 2000 ஆண்டில் எழுதி வெளிவந்த  “Good bye germ theory” என்னும் தடுப்பூசி குறித்த ஆய்வு நூல் 2006க்குள் ஆறு பதிப்புகள் வெளியாகி பலலட்சம் பிரதிகள் விற்பனை யாகின. அமெரிக்காவின் கட்டாயத்தடுப்பூசிச்சட்டம் இப்போது நடை முறையில் உள்ளபோது இந்நூல் வெளியாகி தடுப்பூசி எதிர்ப்பாளர் களுக்கு புதுவேகத்தை அளித்துள்ளது. அந்நூலில் இருந்து சில குறிப்புகள்:

# அமெரிக்க குழந்தைகளுக்கு அரிதாக ஏற்படும் மூளை வளர்ச்சிக் குறைபாடு ((Autism) தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த பிறகு 3000 மடங்கு அதிகரித்துள்ளது. பாதரசம் மற்றும் பிற ரசாயனங்கள் கலந்த தடுப்பூசிகளைத்தவிர இந்நோய் இவ்வளவு அதிகரிப்பதற்கு வேறெந்த காரணமும் இல்லை.
# கட்டாய தடுப்பூசியின் விளைவாக நியூ ஜெர்ஸி பகுதியில் 149 பேரில் ஒரு குழந்தைக்கு மூளைக்கோளாறு ஏற்பட்டுள்ளது. மேரிலேண்ட் பகுதியில் 1993-98 இல் மட்டும் மூளைக்கோளாறு 513 சதம் அதிகமானது.
# தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் கூறும் மிக மோசமான விளைவுகளை கண்டு கொள்ள வேண்டாம் என்று அமெரிக்க மருத்துவர்கள் சங்கம் (AMA)தன் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
#அமெரிக்க குழந்தைகளில் வாரத்திற்கு மூன்றுபேர் தடுப்பூசி யினால் மரணமடைகிறார்கள் என்று பெடரல் கவர்ன்மெண்ட் அறிக்கை கூறுகிறது.
# போலியோ சொட்டு மருந்து கண்டுபிடித்த ஜோனஸ் சால்க் கூறு கிறார்- 1966 முதல் 1976 வரை ஏற்பட்ட போலியோவில் மூன்றில் இரண்டு பங்கு தன் கண்டுபிடிப்பால் ஏற்பட்டது என்று.
 # 1975களிலிருந்து ஐரோப்பிய நாடுகளிலும், ஜப்பானிலும் DPT தடுப்பூசி தடைசெய்யப்பட்டுள்ளது. கொடிய நஞ்சுள்ள இந்த ஊசி இன்னும் அமெரிக்காவில் (இந்தியாவிலும்) பயன் படுத்தப்படுகிறது.
# சாதாரணநிலையில் கக்குவான் இருமலால் இறப்பவர்கள் ஆண்டிற்கு 10பேர்தான். கக்குவான் இருமலுக்கான தடுப் பூசிக்குப் பிறகு ஆண்டிற்கு 950 பேர் கக்குவான் இருமலால் இறக்கிறார்கள்.
# அமெரிக்க மத்தியஅரசு FDA அறிக்கையின் படி 90% டாக்டர்கள் தடுப்பூசி சம்பந்தமான மோசமான விளைவுகளை அறிவிப்பதில்லை.
# அமெரிக்க அரசாங்கம் மக்களுடைய வரிப்பணத்திலிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை தடுப்பூசியின் மோசமான விளைவுகளுக்கு நஷ்டஈடாக வழங்கிக்கொண்டிருக்கிறது.
# தடுப்பூசி போட்டவர்களை விட , தடுப்பூசி போடாதவர்கள் மிகவும் ஆரோக்கியமாக எவ்வித நீடித்த நோயுமின்றி வாழ்வதை உலகத்தின் எந்த அரசு இயந்திரமும் ஆய்வு செய்வதில்லை.
# நான்கு கிலோ எடையுள்ள ஒரு குழந்தைக்கு ஒரு நாளில் ஒரு தடுப்பூசி போடுவது என்பது 40 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 40 தடுப்பூசி போடுவதற்கு சமம்.

. . . இன்னும் ஏராளமான விபரங்களை தன் நூலில் தந்துள்ள டாக்டர். ட்ரெப்பிங் மக்கள் கருத்தரங்குகளில் பங்கேற்று தடுப்பூசியின் விளைவு கள் பற்றி உரையாற்றி வருகிறார். கட்டாயத் தடுப்பூசிச்சட்டம் என்பது எந்த நாட்டில் அமுலில் இருந்தாலும் சரி அது மனித உரிமைக்கும், அந் நாட்டின் இறையாண்மைக்கும் எதிரான வன்முறை என்று கூறும் அந்நூல் தரும் கடைசித் தகவல் மிகவும் அதிர்ச்சிகரமானது. அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) ஓர் கொள்ளை நோய் கண்டுபிடிப்பு சேவை மையம். நாடு முழுவதும் அலைந்து நோய்க்கான அறிகுறி களைத் தேடி அதை லாபமாக்கத் திட்டமிடுகிறது. (CDC) க்கு ஒரு ஆலோ சனைக்குழு உள்ளது. இந்தக் குழுவில் யார் யார் உறுப்பினர்கள் தெரி யுமா? மருந்து வியாபாரிகள், மருந்து தயாரிப்போர் ஆகியோர்தான்.

4

சரி, தடுப்பூசி மோசமானது தான். முன்பெல்லாம் கொள்ளை நோய்கள் மக்களைக் கூட்டம் கூட்டமாகத் தாக்கியதே. ஆனால் தடுப்பூசி வந்த தற்குப் பின்னால் கொள்ளைநோய்கள் கட்டுக்குள் வந்துள்ளதல்லவா? - இதுதான் தடுப்பூசியை ஆதரிக்கும் மனநிலையில் ஆங்கில மருத்துவத்தால் தயாரிக்கப்பட்ட சராசரி மனிதரின் கேள்வியாக இருக்கும். காந்தி எழுதிய சத்தியசோதனை நூலில் கூட காலரா நோய் ஏற்பட்ட காலத்தில் தன்னுடைய அனுபவத்தை பதிவு செய்திருப்பார். அதுவே ஒரு பெரிய மருத்துவ ஆவணம்தான். என்றாலும் கூட நாம் நிகழ்காலத்தின் ஆதாரங்களை பார்க்கலாம்.

2009 ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து உலகம் முழுக்க சார்ஸ் (பறவைக்காய்ச்சல்) பரவுவதாகக் கூறப்பட்டது. சீனாவில் ஏராளமான மக்கள் ஒருவகைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். சார்ஸ் என்னும் சளிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்தவோ அல்லது பரவாமல் தடுக்கவோ எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் ஓரிரு வாரங்களில் தானாகவே குறைந்த அக்காய்ச்சல் படிப்படியாக மறைந்தது. அதே போல இந்தியாவில் ஏற்பட்ட சிக்குன் குனியா என்ற பெயர் சூட்டப்பட்ட காய்ச்சல் - எந்த ஒரு மருந்தும் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே தானா கவே காணாமல் போனது. எந்த ஒரு நோயானாலும் மக்களில் உடல் நிலையைப் பொறுத்து அது தானாகவே ஏற்படுகிறது. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தானாகவே மறையவும் செய்கிறது. உலகத்தின் எல்லா அரசாங்கங்களும் இயற்கையாய் தோன்றி மறையும் எல்லா நோய் களையும் கட்டுப்படுத்தியது தங்கள் சுகாதாரத்துறை என்று மார்தட்டிக் கொள்கிறது.

மருத்துவ வரலாற்றின் பழைய பக்கங்களை நினைவுகூர்வது இங்கு பொருத்தமாக இருக்கும். இங்கிலாந்தில் 1950களில் போலியோ நோயின் தாக்கம் 40 மில்லியன்களாக இருந்தது. அப்போது போலியோ விற்கென எந்த மருந்தும் பிரயோகிக்கப்படவில்லை. ஆனால் நோயின் தாக்கம் 1952 இல் 19 மில்லியன்களாகக் குறைந்தது. பின்பு, 1954 இல் 8 மில்லியன்களாக வும், 1956இல் 10 மில்லி யன்களாகவும் எவ்வித மருந்துகளும் இல்லாமல் ஏற்ற இறக்கத்தோடு இருந் தது. 1956க்குப் பின் தடுப் பூசி பயன்படுத்தப்பட்டது. போலியோ வெற்றிகர மாக அழிக்கப்பட்டதாக அரசு அறிவிக்கிறது. பின்பு 1960களிலிருந்து மீண்டும் போலியோவின் தாக்கம் இங்கிலாந்தில் இருந்துவருகிறது. அதேபோல, 186ற்கும் முன்பிருந்து சின்னம்மை வருவதும், பின் குறைவது மாக 200 மில்லியன் களுக்குள் இருந்து வந் தது. 1860ல் தடுப்பூசி போடப்பட்டதற்குப் பின்னால் 400 மில்லியன் களுக்கும் மேலாக அதன் பாதிப்பு உயர்ந்தது. இன்று வரை தொடர்ந்து வருகிறது. இப்படி தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட நோய்கள் மீண்டும் மீண்டும் வருவதை 150 ஆண்டு கால சுகாதார வரைபடம் விளக்குகிறது. ஆனால் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத டைபாய்டு காய்ச்சல் 1910 களில் 500 மில்லியன்களுக்கும் மேல் பாதிப்பு ஏற்படுத்தியிருந்தது. தடுப்பூசி பயன்படுத்தாத நிலையில் படிப்படியாகக் குறைந்து 1920 களில் 200 மில்லியன்களாகவும், 1930களில் 100 மில்லியன்களாக வும் பின்பு அங்கொன்றும், இங்கொன்றுமாக முற்றிலும் குறைந்திருக்கி றது. இதேபோல இன்னும் ஏராளமான நோய்கள் மக்களின் உடல் நிலையைப் பொறுத்து, தானே தோன்றி மறைந்த வரலாற்றை மருத்துவம் மறந்து விடுவது நல்லதல்ல.

மலேரியாக்காய்ச்சல் என்ற நோயை எல்லா நாட்டு வரலாற்றிலும் காணமுடியும். 1600களில் இருந்து மீண்டும் மீண்டும் மருத்துவ வரலாற்றில் குறிப்பிடப்படும் காய்ச்சலாக அது இருந்து வந்துள்ளது. மலேரியாவிற்குக் காரணம் ஒருவகைக் கிருமிகள் என்றும், அவை கொசுக்கள் மூலமாக பரவுகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது. பல நூற்றாண்டுகளாக உலகத்தின் பெரும்பாலான அரசாங்கங்கள் கொசுவை ஒழிக்க என்று பல ஆயிரம் கோடிகளை செலவிட்டு வருகிறது. இன்றுவரை பல நோய்களைப் பரப்பும் எமனாக சித்தரிக்கப்படும் கொசுக்கள் உலகம் செலவழித்த டாலர்களையும், ரூபாய்களையும், யூரோக்களையும் ஏப்பம் விட்டு விட்டு பல்கிப்பெருகி உலாவருவதை நிரூபிக்க எந்த ஒரு ஆவணமும் தேவையில்லை தானே? இப்படித்தான் கிருமிகளை அழிக்க என்று உலக அரசுகள் செலவழிக்கும் தொகை அவ்வளவும் மருந்துக்கம்பெனிகளின் கையில் அகப்பட்டுக் கிடக்கின்றன. வெகுவேகமாகப் பரவும் எந்த ஒரு நோயும் ஒரு ஊரில் எல்லா மக்களை யுமோ, ஒருவீட்டில் எல்லா ரையுமோ பாதிப்பதில்லை. ஏன் இப்படி கிருமிகள் ஓர வஞ்சனை செய்கின்றன? காற்றில், நீரில், கொசு வில், பறவையில், பன்றி யில்... என பாகுபாடின்றிப் பரவும் கிருமிகள் மனிதர் களை மட்டும் ரகம் பிரித்து தாக்குகின்றனவா? இந்தக் கேள்விக்கு உலகம் முழு வதும் ஒரே ஒரு பதில்தான் சொல்லப்படுகிறது. கிருமிகளின் தாக்கம் என் பது ஒவ்வொரு உடலின் எதிர்ப்புச்சக்தியைப் பொறுத்து மாறுபடும். ஒவ்வொரு மனிதனின் எதிர்ப்புச்சக்தியும் கிருமி களை எதிர்த்து அழிக்கப் போதுமானவை என்றால், அதை வளர்ப்பதை விட்டு விட்டு கொசுவிற்கு ஆயிரம் கோடி, கிருமிக்கு ஆயிரம் கோடி, தடுப்பூசிக்கு ஆயிரம் கோடி, தடுப்பூசியின் பாதிப்பிற்கு நஷ்ட ஈடாக ஆயிரம் கோடி என்று மக்கள் வரிப்பணத்தை மருந்துக் கம்பெனிகளுக்கு வாரி இறைக்க உலகின் எந்த ஒரு அரசாங்கத்திற்கும் உரிமையில்லை. கிருமிகள், தடுப்பூசிகள் என்று தடம் புரளும் வீணான ஆய்வுகளை விட்டு விட்டு, தனி மனித எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் ஆரோக்கியமான உணவை ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைக்கும்படி செய்வதே உலக அரசுகளின் அடிப்படைக் கடமையாகும்.

***

மரு.அ.உமர்பாரூக்

குறிப்புகள் மொழியாக்க உதவி : மருத்துவர்.இரா.ஞானமூர்த்தி

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 durai ilamurugu 2010-03-23 04:54
ayya yaar intha umar farook / thavaRana thakavalkalai kondu ariviyal kantupitippukal i pazi sollum palr aankila maruthavarkalil um undu . ivary-utayavath ankal anaithum sothai , pukalenthi enthamaruthuvam urayuil doctor? ammainoyai ozithalthan aids vanthathu enrU oru muRai ezuthiyavar . thavarana ariviyalukku ethiranaseythik alai veluta ventaam .maruthuam enbathu vilaiyattu illai
melum velinattil muttalkal illai enpathu illai 7 mavattankalil pathu kuzathaikal iranthana enpathu sari aannaal ethunai uirkal kakkapattana enru yarukku theriyum> polio nooy thakkuthal inththiyaavil aravey ozinthullathu enpathai unarattum . tetanus 50 antukalukku mun ethanai tharpothu euthanai thavarana maruthuva seythikalai veliyutum pothu kavanam thevai cubavilum chiavilum enrum thatuppuusikal potaptaukinRana angu entha kampanikal lapam ettukinRana t
Report to administrator
+1 #2 துரை இளமுருகு 2010-03-23 04:59
அய்யா மருத்துவத்துறை பற்றி த்வறானா தகவல்கல் தருவதை தவிர்க்கவும் இது மனித உயிர்கள் தொடர்புடைய செய்திகள் புகெழேந்தி மருத்துவர் உமர்பாரூக் ஆகியோர் எந்த வகை மருதுவர்கள் என்பது தெரியாமல் அவர்கள் கருத்கள்குரிது பதில் எழுதவிருபவில்லை அதை அவர்கல் தெலிவு படுதினால் மேற்கொண்டு வாதிக்கலாம்
Report to administrator
0 #3 kibs 2010-04-10 06:10
அய்யா துரை முருகா தடுப்பு ஊசி பற்றி மோலும் விபரம் அறிய "தடுப்பு ஊசிகல் ஓர் மாற்று பார்வை " என்ற புத்தகம் படிக்கவும் "தீப பதிப்பகம்" 29/9-a, பழைய ட்ரன்க் ரோடு, சாத்தூர் - 626 203 cell No. 94431 45700 ph No. 04562-263168.பட ித்துவிட்டு கருத்து சொல்ல வேண்டும். (தமிழ் நாடு அரசு தடுப்பு ஊசி பற்றிஆய்வில் மருத்துவர் குழுவின் உருபிநெர் )Dr. புகெழேந்தி M.B.B.S. மருத்துவர், உமர்பாரூக் M.Acu., D.Ed (Acu) (ஹோமியபதி மற்றும் அக்குபஞ்சர்) visit: www.acuhome.org

by kibs, Kodaikanal,
cell : 9171418141
Report to administrator
0 #4 kibs 2010-04-10 13:02
அய்யா துரை முருகா கீழ் உள்ள இந்திய அரசு நிறைவேற்றிய சட்டத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். நன்றகஹா தாய் மொழிஇல் ஒரு முறைகு பல முறை வாசித்து பாருங்கள் மக்கள் சாப்பிடும் மருந்து எல்லாம் போலி

"எல்லாம் மருத்துவமனையுளு ம் கீழ் கண்ட சட்டத்தைப் பற்றியும் பொது மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்" by KIBS

ஆங்கில மருத்துவம் விழி பிதுங்கி நிற்கும் 51 வியாதிகள்
Dr. பஸ்லூர்ரஹ்மான் M.B.B.S., Dr MRSH MD Ph.D(Acu)

ஆங்கில மருந்துகள் எந்தப் பயனும் அற்றவை என்பதையும் பல நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தே இல்லை என்பதையும், அந்த நோய்களைக் குணப்படுத்துவோம ் என்று சொல்லக்கூடாது என்றும் இந்திய அரசு நிறைவேற்றிய சட்டத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

Drugs and Cosmetics Act, 1940, 1945, 1995, ‘Schedule J’ contains a list of 51 disease and ailments (by whatever name described) which a drugh may not purport to prevent or cure or make claims to prevent or cure”.

‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம்’ 1940ல் இயற்றப்பட்டு பின்னர் 1945, 1995ல் திருத்தியமைக்கப ்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் ஷெட்யூல் - ‘J’ என்ற பிரிவின் கீழ் 51 வகை ஆங்கில மருத்துவத்தின் வியாதிகள் எழுதப்பட்டுள்ளன . இந்த வியாதிகள் ஆங்கில மருத்துவத்தின் மருந்துகளைக் கொண்டு குணப்படுத்த முடியும்!’ என்றோ, ‘மருந்துகளைக் கொண்டு குணப்படுத்திக் காட்டுகிறேன்!’ என்றோ கூறுதல் கூடாது என்று எச்சரிக்கிறது.

நோயால் வாடும் மக்களின் நன்மைக்காக, அவர்கள் உயிர்களும், உடமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதற்காக நமது அரசாங்கம், ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத நோய்கள் மொத்தம் 51 என்று மேற்சொன்ன சட்டத்தில் ஷெட்யூல் - Jயில் வலியுறுத்தியுள் ளது. இந்த 51 வியாதிகளையும் ஆங்கில மருத்துவர்கள் எவரும் தங்கள் மருந்துகளால், குணப்படுத்த முடியும் என்றோ, குணப்படுத்திக் காட்டுகிறேன் என்றோ கூறுவது சட்டப்படி குற்றமாகும் என்று எச்சரிக்கிறது.

இந்த 51 நோய்களும் ஆங்கில மருத்துவத்துக்க ு மட்டுமே சொந்தமானவை. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது நோய்கள் இந்த ‘லிஸ்ட்’டில் சேரும் வாய்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. இந்த வகையில் சமீபத்தில் புதிதாக சேர்க்கப்பட்டிர ுக்கும் நோய்கள் ‘எய்ட்ஸ், சார்ஸ்’ ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த ஹெப்படைட்டிஸ் என்ற ஒரு நோயும் இதிலே அடக்கம் செய்யப்பட்டு விட்டது.

இவ்வாறாக, ஆங்கில மருத்துவம், தான் கண்டுபிடித்த நோய்கள் ஒவ்வொன்றையும் ஆதி முதல் அந்தம் வரை ஒவ்வொன்றாக அவற்றைக் குணப்படுத்த மருந்துகள் இல்லை என்பதை தெளிவாக உணர்ந்து அந்த நோய்களை அடக்கம் செய்து கொண்டு வரும் வேளையில் இதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும், அதாவது, ஆங்கில மருந்துகளில் எந்த ஒரு மருந்தும் ஷெட்யூல்-J-யில் பட்டியலிடப்பட்ட ுள்ள ஆங்கில மருத்துவத்தில் நோய்களைக் குணமாக்காது என்பதை அந்த மருத்துவம் சர்வதேச அளவில் ஒப்புக்கொண்டு அதை பகிரங்கமாக அச்சிட்டிருக்கி றது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தவே ண்டும் என்பதற்காகவும், எனவே, ஆங்கில மருத்துவம் பார்க்கும் எந்த ஒரு மருத்துவரும், ஆங்கில மருத்துவத்தில் மருந்து என்பதே கிடையாது என்ற உண்மையான காரணத்தினால் ஷெட்யூல்-Jயில் உள்ள நோய்களுக்கு மருத்துவம் பார்க்கக் கூடாது என்பதற்காகவும்,

ஆங்கில மருத்துவம் இந்த 51 நோய்களுக்கும் குணப்படுத்தவோ தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ மருந்துகள் இருக்கிறது என்று கூறுவது தவறான, ஆபத்தான போக்கு. நோயால் அவதியுறும் மக்களுக்கு பெரும் ஆபத்தாக முடியும் என்பதை எச்சரிப்பதற்காக வும், உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின் பேரில் நமது அரசாங்கமும் தகுந்த எச்சரிக்கையுடன் ஆங்கில மருந்துகளை ‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டத்தின்’, பிடியில் ஷெட்யூல் -J-யில் ஆங்கில மருத்துவம் வைத்தியம் பார்க்கக் கூடாது என்று 51 நோய்கள் அடங்கிய பட்டியலைச் சேர்த்திருக்கிறது.

ஷெட்யூல் J-யில் ஆங்கில மருத்துவம் வைத்தியம் பார்க்கக் கூடாது என்று வரையறுக்கப்பட்ட ுள்ள 51 நோய்களில் விவரம் வருமாறு.

1. எய்ட்ஸ்

2. நெஞ்சுவலி

3. ‘அப்பெண்டிஸைட்ட ிஸ்’ என்னும் குடல் வால் நோய்

4. இருதய இரத்தக் குழாய்களில் அடைப்பு

5. தலை வழுக்கை

6. கண்பார்வை அற்ற நிலை

7. ஆஸ்துமா

8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக புற்றுநோய் வரை

9. கண்புரை

10. தலைமுடி வளர, நரையை அகற்ற

11. கருவில் வளரும் குழந்தையை ஆணாகவோ, பெண்ணாகவோ மாற்றுவோம் என்று கூறுவது.

12. பிறவிக் கோளாறுகள்

13. காது கேளாமை

14. நீரிழிவு நோய்

15. கர்ப்பப் பை சம்பந்தமான அனைத்துக் கோளாறுகள்

16. வலிப்பு நோய் - மன நோய்கள் அனைத்தும்

17. மூளைக்காய்ச்சல்.

18. உடல் நிறம் கருப்பாக இருப்பினும் சிகப்பாக்குதல்.

19. மார்பக வளர்ச்சிக்கு

20. புரையோடிய புண்

21. மரபணு நோய்கள்

22. க்ளாகோமா எனும் கண்வலி நோய்

23. கழுத்து (தைராய்டு) வீக்கம்

24. ஹெர்னியா எனும் குடலிறக்க நோய்

25. அதிக மற்றும் குறைவான இரத்த அழுத்தம்

26. விரை வீக்கம்

27. பைத்தியம்

28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி செய்ய.

29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட.

30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடுகள் கிட்டப்பார்வை, தூரப்பார்வை.

31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்.

32. பற்களை உறுதிப்படுத்த என்று, கால்ஷியம் மருந்துகள் மூலமாக வைத்தியம் பார்ப்பது.

33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (ஹெபடைட்டிஸ்), மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட எந்த நோய்களும்

34. இரத்தப் புற்றுநேரய்.

35. வெண் குஷ்டம்

36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்துதல்.

37. மூளை வளர்ச்சிக்குறைவு.

38. மாரடைப்பு நோய்

39. குண்டான உடம்பு மெலிய

40. பக்க வாதம்

41. உடம்பு முழுவதும் நரம்பு நடுக்க நோய்

42. மூல நோய் மற்றும் பவுத்திரம்

43. வாலிப சக்தியை மீட்க

44. குறைந்த வயதில் முதிர்ச்சியடைந் த தோற்றம்

45. குறைந்த வயதில் தலை நரை

46. ரூமாட்டிக் இருதய நோய்

47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம்

48. கழுத்து வலி, மற்றும் முதுகுத் தண்டில் ஏற்படும் அனைத்து வலிகளும்

49. திக்குவாய்

50. சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள், சிறுநீர்ப் பை கற்கள்

51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைந்து புடைத்துக் காணப்படுதல்.
Report to administrator
+1 #5 Chithra lekha 2010-08-12 01:34
சமீபத்தில் எனது முன்னாள் தோழியின் குழந்தைக்கு தடுப்பூசி போட்டதால் ஆட்டிஸம் வந்தது. அவள் ஒரு கல்லூரி ஆசிரியையாக​ இருப்பதால் தனது குழந்தைக்கு எதனால் இந்நோய் வந்தது என்று கண்டறிந்தாள். இளமுருகு அவர்களின் பார்வைக்கு அவள் எழுதிய​ ப்லாகை இத்துடன் கொடுத்துள்ளேன். படித்துவிட்டு மருத்துவர்களை குறை கூறவும்.
http://blogs.bigadda.com/sav4977613/2009/12/02/2/
Report to administrator
0 #6 Vineeth 2012-05-04 16:08
அய்யா துரை முருகா
Here no one is trying to do any business. Here people are trying to create awareness against Vaccination. Every information given by kibs & மரு.அ.உமர்பாரூக ் was absolutely correct. Except accupunture people no one has the guts to publish the Drugs and Cosmetics Act, 1940, 1945, 1995, ‘Schedule J’ . If you have any doubt regarding this law download it from http://cdsco.nic.in/html/copy%20of%201.%20d&cact121.pdf

Thanks for Mr. Umar Farooq for writing such an awesome book.

Thanks & Regards,
Vineeth.S
http://reghahealthcare.blogspot.in
Report to administrator
0 #7 jegathraman 2013-03-08 12:45
IT'S TRUE. BUT ITS NOT REACH TO THE PEOPLE VERY WELL .TRY

TO REACH THEM VERY EASY METHODS
Report to administrator
0 #8 Guest 2013-03-25 12:05
மிக நல்ல கட்டுரய்
Report to administrator
0 #9 sudarsan 2013-03-30 14:59
இந்த கட்டுரை நல்லா இருக்கு....
Report to administrator
0 #10 sheikdawood 2013-04-22 11:04
இந்த கட்டுரை மிக அவசியமான தகவல்
Report to administrator
0 #11 மீனாட்சி சுந்தரம் 2013-09-24 16:17
இனைய தளம் புண்ணியம் பெற்றுள்ளது
நல்ல அவசியமான கட்டுரை வெளியிட்டுக்கு மிக்க நன்றி
Report to administrator
0 #12 seyon yazhvaendhan 2015-08-25 15:50
கட்டுரையில் சொன்ன தகவல்கள் முற்றிலும் உண்மை. ஜப்பானில் இரண்டு வயது முடியும் வரை குழந்தைகளுக்கு எந்தத் தடுப்பூசியும் போடுவதில்லை என்று தகவல்.
Report to administrator

Add comment


Security code
Refresh