கோழை சிங்கமும் பசித்த புலியும்

- எல்ஃப்ராங்க்பாம்,

தமிழில் கி.ரமேஷ்.

வெளியீடு: றிக்ஷீஷீபீவீரீஹ், சென்னை-18

பக்: 80, ரூ. 25/-

ஆங்கில எழுத்தாளர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் ஃப்ராங்க் பாம். இவர் ஒஸ் என்ற மாய உலகத்தை மையமாக வைத்து பல கதைகளையும் நாவல்களையும் எழுதி உள்ளார். இந்த உலகத்தில் உள்ள விலங்குகள் தாவரங்கள், பொருட்கள் எல்லாமே பேசக்கூடியவை. இந்தத் தொகுப்பில் உள்ள ஐந்து கதைகளும் குழந்தைகளுக்கும் நமக்கும் சுவராசியத்துடன் மாய உலகத்திற்கு கூட்டிச் செல்பவை. இவருடைய கதைகள் பலத்த வரவேற்புடன் பல நூறுமுறை  அமெரிக்காவில் மேடைபேற்றப்பட்டது என்ற கூடுதல் செய்தியுடன் இந்தக் கதைகளை படிக்கும்போது நமக்கு புது அனுபவத்தையும், பரவசத்¬தையும் ஏற்படுத்தும்.

சிறுபான்மையினர் தொடர்பான ஆணையங்கள்

அ.மார்க்ஸ்,

வெளியீடு: முரண்பதிப்பகம்,

சென்னை - 20

பக்: 72, ரூ. 45/-

இந்தப் புத்தகத்தின் எந்தவொரு பகுதியையும் நூலாசிரியரின் எழுத்துப் பூர்வமான முன் அனுமதியில்லாமல் மறு பிரசுரம் செய்வதோ, அச்சு மற்றும் மின்னனு ஊடகங்களில் மறுப்பதிப்பு செய்வதோ. காப்புரிமை சட்டப்படி தடை செய்யப்பட்டதாகும். புத்தக விமர்சனத்துக்கு மட்டும் இந்தப் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டலாம் என்று கூறும் இந்நூலில் இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய பிரிட்டிஷ் ஆட்சியில் அமைக்கப் பட்ட ஹண்டர் கமிஷன் 1871ல் தொடங்கி, இன்றைய ரங்கனாத் மிஸ்ரா ஆணையம் வரை வழங்கியுள்ள பரிந்துரைகள் முதன் முதலாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேலும் இந்நூலில் சமநிலைச் சமுதாயம், விடியல் வெள்ளி ஆகிய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளும் சிறு பிரசுரங்களுக்கான எழுதிய  முன்னுரைகளின் தொகுப்பே இந்நூல்.

அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படி தோன்றின?

-பெ.கருணாகரன்.

வெளியீடு : குன்றம், சென்னை - 33

பக்: 112, ரூ. 45/-

குழந்தைகளுக்காக கதை சொல்வது, எழுதுவது என்பது சிக்கலான விஷயமாக இருந்தாலும் தொடர்ந்து பலர் முயன்று வருகின்றனர். இத் தொகுப்பில் உள்ள பதிமூன்று கதைகளுக்கும், அட்டைப்படமும் குழந்தைகளால் வரையப்பட்டுள்ளன. இந்தக் குழந்தைகளின் ஆசைகளும், கனவுகளும், நம்பிக்கைகளும், பதிவு செய்யப்பட்டுள்ளதை கதையோடும், ஓவியத்தோடும் சேர்த்து வாசிக்கும் போது நமக்கு புதிய வாசலை திறந்து விடுகிறது. அரசு பள்ளிக் குழந்தைகளையும் இதில் சேர்த்து இருந்தால் அந்தக் குழந்தைகளின் அனுபவத்தையும் நாம் பெற்றிருக்க ஒரு வாய்ப்பு அமைந்திருக்கும்.

இன்றும் வாழும் தெருக்கூத்து

- பி.ஜே.அமலதாஸ்,

வெளியீடு- வம்சி, திருவண்ணாம்மலை

பக்: 188, ரூ. 120/-

தெருக்கூத்து தமிழர்களின் பராம் பரியக்  கலையாக இருந்தாலும் தமிழர் களின் ஒட்டு மொத்த கலையாக கூற முடியாது என்கிற சூழல் இருக்கிறது. இந்தச் சூழலில் வந்துள்ள இந்தப் புத்தகத்தில் தெருக்கூத்தைப் பற்றிய அறிமுகமும், அதன் சகல பரிமாணத்தையும் பற்றிக் கூறப்பட்டுள்ளது. மேலும் தெருக்கூத்தைப் பற்றிய ஒரு கதையும், லட்சுமணன் என்ற கூத்து வாத்தியாரின் நேர்முகமும், இந்த நூலாசிரியரின் நேர்முகமும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. தெருக்கூத்தைப் பற்றி தெருக்கூத்து கலைஞர்களும், ஆய்வாளர்களும். சுய விமர்சனத்தோடு வெளிவந்துள்ள இந்நூல் வாசிப்போரை அடுத்தக் கட்டத்திற்கு இட்டுச் செல்லும்.

தமிழியல் தேற்றங்களும் தீர்வுகளும்

க.ப.அறவாணன்,

வெளியீடு: தமிழ்க்கோட்டம்,

சென்னை - 600029

பக்கம்: 188, ரூ. 110/-

தமிழியல் தேற்றங்கள் பற்றிய நூல்கள் குறைவு. மேலும் தமிழியல் தேற்றங்கள் பற்றிய கோட்பாடு முறைகள் என்ன என்பதை பற்றிய விளக்கங்கள் தேவைப்படுகிற காலத்தில் வந்துள்ள இந்தநூலில் வடவேங்கடம், தென்குமரி முதல் யாளி வரை இருப்பத்தியரு கட்டுரைகளும், பொருளடைவும் கொடுக்கப்பட்டுள்ளன. சமயப்போராட்டங்களும் தமிழ் இலக்கிய அழிவுகளும், இலக்கிய வகைப்பாடு, பாடுபொருள் மற்றும் சங்கம் மருவிய காலம் தமிழ்த் தேசிய எழுச்சிக் காலம் போன்ற பல செய்திகளைப் பேசும் பல கட்டுரைகள் சம காலத்தில் இருக்கும் தமிழ் இலக்கியப் பிரச்சனைகளை ஒப்பு நோக்க உதவும்.

Pin It