இந்திய நாட்டு மக்களின் அன்றாட வாழ்வை மிக மோசமாகப் பாதித்துக் கொண்டிருக்கிற பிரச்சினை.விலைவாசிப் பிரச்சினை.வருவாய்க்கும் விலைவாசி உயர்வுக்கும் உள்ள மிகப் பெரிய இடைவெளியை ஈடு செய்துகொள்ள முடியாமல் ஒவ்வொரு நாளும் முச்சுதிணறி ,விழி பிதுங்கி  அளவற்ற துயரத்தில் அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இதுவரை மத்திய,மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு விட வில்லை.சர்க்கரை இல்லாமல் செத்துப் போய் விடுவார்களா?என்று மக்களைப் பார்த்து அதிகார சார்புக் குரல்கள் கேலி பேசுகின்றன.
இதனிடையில் ஏப்பிரல் 8 ஆம் நாள் நாடு தழுவிய அளவில் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தை இடதுசாரிக் கட்சிகள் நடத்தின.ஏராளமாவ்ர் அப்போராட்டங்களில் பங்கேற்றனர்.
மக்களின் எதிர்ப்புணர்வை வெளிப் படுத்தும் வகையில் இத்தகையப் போராட்டங்கள் அவசியமானவையாகவும்,மக்களுக்கு ஆறுதலாகவும் அமைபவை மட்டுமல்ல.இத்தகைய  போராட்டங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு  மத்திய ,மாநில அரசுகள் மக்களுக்கு ஆதரவான நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட தூண்டு கோலாக அமையும் என்பதே மக்களாட்சி நடைமுறையில் மக்களின் எதிர்பார்ப்பு.கடந்த கால வரலாறுகளும் நமக்கு அதைத்தான் உணர்த்துகின்றன.ஆளும் கட்சியினர் எந்தப் பிரச்சினைக்கு முதன்மை கொட்ப்பது என்று புரியாமல் செயலற்று இருக்கும் போது எதிர்க் கட்சிகளின் போராட்டம்தான் அரசைச் செயல் படத் தூண்டும்.
ஆனால்     பஞ்சு உற்பத்தி செய்யும் விவசாயி இடம் "நீ  பஞ்சு உற்பத்தி செய்து விட்டால் போதுமா?உனக்கு ஆடை கிடைத்து விடுமா?"என்று கேட்பது போல நமது மதிப்பிர்ற்குரிய  பிரதமர் அவர்கள்"என்று கூறுகிறார். இடதுசாரிகளின் போராட்டங்களால்  விலை    குறைந்து விடாது" நமக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.முதலமைச்சர்கள் மாநாட்டை கூட்டி விலைஉயர்வு குறித்துப்   பிரதமர் விவாதிக்கிறாரே:அந்தவிவாதத்தால் விலை குறையாது என்று நாம் கருத முடியுமா?பருப்பு விலை இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்று அம்மாநாட்டில்   தமிழகத் துணைமுதல்வர்   கருத்து கூறுகிறாரே!அதனால் என்ன பயன் என்று நாம் கருத முடியுமா?  ஆட்சியில் உள்ளவர்களின் கவனத்தை ஒரு பிரச்சினையின் மீது குவிப்பதற்கான உத்திதானேஎதிர்க்கட்சிகளின் போராட்டம் ஆட்சியில் உள்ளவர்களுக்கு ஒருபிரச்சினை  குறித்த மக்கள் கருத்தை வெளிப்படுத்த எதிர்க் கட்சிகளின் போராட்டம்தானே உதவும்!பிரதமருக்கு இவ்வுண்மை தெரியாது என்று நம்மால் நினைக்க முடிய வில்லை.பின் ஏன் பிரதமர்இப்படிப் பேசுகிறார்?ஆம் அவர் அப்படிதான் பேசுவார்.அதுதான் அவருக்கான நிர்ப்பந்தம்.
இப்போது அதனையும்  தாண்டிப் பாராளுமன்றத்தில்  விலையுயர்வுப் பிரச்சினையில் வெட்டுத் தீர்மானம் வரவுள்ளது.இடதுசாரிகளின் நோக்கம் ஆட்சியைக் கலைப்பதல்ல.மக்களை வாட்டும் விலை உயர்வைக் கட்டுப் படுத்தவேண்டும் என்பதுதான் என்று கூறியுள்ளனர்.ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் வெட்டுத் தீர்மானம் கொண்டு வரட்டும்.நாங்கள் எதிர்கொள்வோம் அரசு கவிழாது என்றுதான் பேசுகிறார்கள்.பிரச்சினையின் ஆழத்தை யோசிக்காமல் பேசுவதால் எப்பயனும் இல்லை.இப்போது அரசு பிழைத்துக் கொள்ளலாம்.அனால் மக்கள்தான்  விலைஉயர்வால் மிகக் கடுமையாகப் பிழைக்க முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
விலைஉயர்வு ஆளும்கட்சி-எதிர்க் கட்சிகளுக்கு இடையிலான  கவுரவப் பிரச்சினை அல்ல.தங்களை அரியணையில் அமர வைத்த ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை.பலகோடி மக்கள் நாளொன்றுக்கு வெறும் இருபது ரூபாய் மட்டுமே சம்பாதிக்கிறார்கள்  என்று அரசுப் புள்ளி விவரங்களே கூறும் நிலையில் உணவுப் பொருட்களின் அபரிமிதமான விலைஉயர்வு எந்த வகையிலும் சமாதானப் படுத்திக் கொள்ளும் பிரச்சினை அல்ல.மத்திய மாநில அரசுகள் உடனடியாக செயற்பட்டாக வெடிய தருணம் இது.அத்தகைய செயற்பாடுகள் பிரதமரில் இருந்து தொடங்கியாக வேண்டு.ம .
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
ந்திய நாட்டு மக்களின் அன்றாட வாழ்வை மிக மோசமாகப் பாதித்துக் கொண்டிருக்கிற பிரச்சினை.விலைவாசிப் பிரச்சினை.வருவாய்க்கும் விலைவாசி உயர்வுக்கும் உள்ள மிகப் பெரிய இடைவெளியை ஈடு செய்துகொள்ள முடியாமல் ஒவ்வொரு நாளும் முச்சுதிணறி ,விழி பிதுங்கி  அளவற்ற துயரத்தில் அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இதுவரை மத்திய,மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு விட வில்லை.சர்க்கரை இல்லாமல் செத்துப் போய் விடுவார்களா?என்று மக்களைப் பார்த்து அதிகார சார்புக் குரல்கள் கேலி பேசுகின்றன.

இதனிடையில் ஏப்பிரல் 8 ஆம் நாள் நாடு தழுவிய அளவில் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தை இடதுசாரிக் கட்சிகள் நடத்தின.ஏராளமாவ்ர் அப்போராட்டங்களில் பங்கேற்றனர்.

மக்களின் எதிர்ப்புணர்வை வெளிப் படுத்தும் வகையில் இத்தகையப் போராட்டங்கள் அவசியமானவையாகவும்,மக்களுக்கு ஆறுதலாகவும் அமைபவை மட்டுமல்ல.இத்தகைய  போராட்டங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு  மத்திய ,மாநில அரசுகள் மக்களுக்கு ஆதரவான நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட தூண்டு கோலாக அமையும் என்பதே மக்களாட்சி நடைமுறையில் மக்களின் எதிர்பார்ப்பு.கடந்த கால வரலாறுகளும் நமக்கு அதைத்தான் உணர்த்துகின்றன.ஆளும் கட்சியினர் எந்தப் பிரச்சினைக்கு முதன்மை கொட்ப்பது என்று புரியாமல் செயலற்று இருக்கும் போது எதிர்க் கட்சிகளின் போராட்டம்தான் அரசைச் செயல் படத் தூண்டும்.

ஆனால் பஞ்சு உற்பத்தி செய்யும் விவசாயி இடம் "நீ  பஞ்சு உற்பத்தி செய்து விட்டால் போதுமா?உனக்கு ஆடை கிடைத்து விடுமா?"என்று கேட்பது போல நமது மதிப்பிர்ற்குரிய  பிரதமர் அவர்கள்"என்று கூறுகிறார். இடதுசாரிகளின் போராட்டங்களால்  விலை    குறைந்து விடாது" நமக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.முதலமைச்சர்கள் மாநாட்டை கூட்டி விலைஉயர்வு குறித்துப்   பிரதமர் விவாதிக்கிறாரே:அந்தவிவாதத்தால் விலை குறையாது என்று நாம் கருத முடியுமா?பருப்பு விலை இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்று அம்மாநாட்டில்   தமிழகத் துணைமுதல்வர்   கருத்து கூறுகிறாரே!அதனால் என்ன பயன் என்று நாம் கருத முடியுமா?  ஆட்சியில் உள்ளவர்களின் கவனத்தை ஒரு பிரச்சினையின் மீது குவிப்பதற்கான உத்திதானேஎதிர்க்கட்சிகளின் போராட்டம் ஆட்சியில் உள்ளவர்களுக்கு ஒருபிரச்சினை  குறித்த மக்கள் கருத்தை வெளிப்படுத்த எதிர்க் கட்சிகளின் போராட்டம்தானே உதவும்!பிரதமருக்கு இவ்வுண்மை தெரியாது என்று நம்மால் நினைக்க முடிய வில்லை.பின் ஏன் பிரதமர்இப்படிப் பேசுகிறார்?ஆம் அவர் அப்படிதான் பேசுவார்.அதுதான் அவருக்கான நிர்ப்பந்தம்.

இப்போது அதனையும்  தாண்டிப் பாராளுமன்றத்தில் விலையுயர்வுப் பிரச்சினையில் வெட்டுத் தீர்மானம் வரவுள்ளது.இடதுசாரிகளின் நோக்கம் ஆட்சியைக் கலைப்பதல்ல.மக்களை வாட்டும் விலை உயர்வைக் கட்டுப் படுத்தவேண்டும் என்பதுதான் என்று கூறியுள்ளனர்.ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் வெட்டுத் தீர்மானம் கொண்டு வரட்டும்.நாங்கள் எதிர்கொள்வோம் அரசு கவிழாது என்றுதான் பேசுகிறார்கள்.பிரச்சினையின் ஆழத்தை யோசிக்காமல் பேசுவதால் எப்பயனும் இல்லை.இப்போது அரசு பிழைத்துக் கொள்ளலாம்.அனால் மக்கள்தான்  விலைஉயர்வால் மிகக் கடுமையாகப் பிழைக்க முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

விலைஉயர்வு ஆளும்கட்சி-எதிர்க் கட்சிகளுக்கு இடையிலான  கவுரவப் பிரச்சினை அல்ல.தங்களை அரியணையில் அமர வைத்த ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை.பலகோடி மக்கள் நாளொன்றுக்கு வெறும் இருபது ரூபாய் மட்டுமே சம்பாதிக்கிறார்கள் என்று அரசுப் புள்ளி விவரங்களே கூறும் நிலையில் உணவுப் பொருட்களின் அபரிமிதமான விலைஉயர்வு எந்த வகையிலும் சமாதானப் படுத்திக் கொள்ளும் பிரச்சினை அல்ல.மத்திய மாநில அரசுகள் உடனடியாக செயற்பட்டாக வெடிய தருணம் இது.அத்தகைய செயற்பாடுகள் பிரதமரில் இருந்து தொடங்கியாக வேண்டு.ம .

-புதுவை ஞானகுமாரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It