தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் குமரிமாவட்டக் கிளையின் சார்பாகக் கடந்த 18.09.2010 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாகர்கோவில் கன்கார்டியா இறைஇயல் கல்லூரிக் கூட்ட அரங்கில் எழுத்தாளர் பொன்னீலனின் ‘மறுபக்கம்Õ நாவலுக்கான விமர்சனக் கருத்தரங்கம் நடைபெற்றது.

முனைவர் எஸ். ஸ்ரீகுமார் நெறியாள்கையில் த.நா.கலை இலக்கியப் பெருமன்ற மாநிலச் செயலாளர் சி.சொக்கலிங்கம் வரவேற்புரையாற்றினார். டாக்டர் அழகு நீலா ஜெயராம் (மறுபக்கம் - என் பார்வையில்) எம். வேதசகாய குமார் (வரலாற்றின் மீதான புனைவுலகின் விசாரணை) கீரனூர் ஜாகிர்ராஜா (ரசனை அடிப்படையில் மறுபக்கம்) பா. ஆனந்தகுமார் (மார்க்சிய அழகியல் வாசிப்பில்) மாற்கு (சாதிக்கலவரமும் மதக்கலவரமும்) அ.ஜகன்னாதன் (சமூகத் தேடல்) ஆகியோர் விமர்சனக் கட்டுரைகள் வாசித்தனர்.

ஆர்.பிரேம்குமார், வி.சிவராமன், எம்.மீரான்மைதீன், நட.சிவகுமார், எஸ்.ஜே.சிவசங்கர், எஸ்.கே.கங்கா இக்கட்டுரைகளின் மீதான எதிர்வினை நிகழ்த்தினர். சமூக ஆர்வலர் கொடிக்கால் அப்துல்லா, கவிஞர் ஹெச்.ஜி.ரசூல், எழுத்தாளர் எஸ்.பாலச்சந்திரன் மற்றும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

நாவலாசிரியர் பொன்னீலன் ஏற்புரையாற்ற பெருமன்ற மாவட்டப் பொருளாளர் எம்.விஜயகுமார் நன்றி கூறினார்.

Pin It