தமிழ்நாட்டிற்கு புதிய இரயில்களை அறிமுகப்படுத்தும் போது, ஊடகங்களும் தமிழக மக்களும் தமிழகத்திற்கு பல இரயில்களை மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது என்று அதனை எண்ணி மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் அந்த இரயில்கள் எத்தனை கி.மீ தூரம் தமிழ்நாட்டிற்குள் ஓடுகின்றன என்று எண்ணிப் பார்க்க மறந்து விடுகிறார்கள். சென்னையில் இருந்து வடநாட்டிற்கு செல்லும் இரயில்கள் அனைத்தும் வெறும் 45 கி.மீ மட்டுமே (கும்மிடிப்பூண்டி வரை) தமிழ்நாட்டில் பயணிக் கின்றன. பல ஆயிரம் கி.மீ மற்ற வடமாநிலங்களில் பயணிக்கின்றன.

மலையாளிகளின் சேட்டையால், சேலம் இரயில் கோட்டம் இன்று வரை சரி வர இயங்கவில்லை. இந்நிலையில் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் இரயில்கள், தப்பித்தவறி தமிழனுக்கு பயன்பட்டு விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளது மலையாளிகளின் பிடியில் உள்ள தெற்கு இரயில் நிர்வாகம்.

திருவனந்தபுரம் மெயில் (12623/12624) என்ற மீ விரைவு இரயில் வண்டியானது, அரக்கோணம், சோலையார்பேட்டை (தற்போது ஜோலார்பேட்டை) மற்றும் கோவை வழியாக, சென்னைக்கும் திருவனந்தபுரத்திற்கும் இடையில் நாள் தோறும் இயக்கப்படு கிறது. சென்னையிலிருந்து மாலை 7:45 கிளம்பும் இந்த இரயில் தமிழகத்தின் முக்கிய சந்திப்பான அரக் கோணம், சோலையார்பேட்டை மற்றும் கோவையில் நிறுத்தப்படுவதில்லை.

மலையாளிகள் மட்டுமே இந்த இரயிலில் ஏற வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காரணத்தை தேடி அலைந்த போது சிலர் சொன்னார்கள், சென்னையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் சாதாரண டிக்கெட்டை எடுத்துக் கொண்டு, நேரடியாக பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறிவிடுவதை தடுக்கவே, மேற்கண்ட இரயில் சந்திப்புகளில் இந்த இரயில் நிறுத்தப்படுவதில்லை என்கிறார்கள். பகலில் மட்டுமே சாதாரண டிக்கெட்டை எடுத்துக் கொண்டு, பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏற முடியும். ஆனால் இரவு நேரத்தில் அவ்வாறு அனுமதிக்கப் படுவதில்லை என்பதே கண்கூடு. நிலைமை இப்படி இருக்கும் போது, தமிழன் சாதாரண பெட்டியில் கூட ஏறி பயன்பெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

railway fare

மேற்கண்ட அட்டவணையை ஆராய்ந்ததில் பல கேள்விகள் நம் மனதில் எழுகின்றன.

1. கேரள மாநிலத்தில் உள்ள சாங்கனாசோரி மற்றும் திருவாலா இவற்றிற்கு இடையில் உள்ள தூரம் 8கிமீ. அதாவது சென்னை புறநகர் பகுதி உள்ள இரண்டு இரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள தூரம். இப்படி கேரளாவில் சாதாரண இரயில் நிலையங்களில் கூட இந்த திருவனந்தபுரம் மெயில் நின்று செல்லும் போது, ஏன் இந்தியாவிலேயே முக்கிய இரயில் சந்திப்புகளான அரக்கோணம், சோலையார் பேட்டையில் (ஜோலார் பேட்டை) மற்றும் கோவையில் நின்று செல்வ தில்லை?

2. புறநகர் இரயிலில் திணீst என்ற மின்சார புறநகர் இரயில்களில் பல இரயிகள்கூட ஆவடியில் நின்று செல்லாத நிலையில் இந்த இரயில் மட்டும் எப்படி நின்று செல்கிறது?

3. அரக்கோணம், சோலை யார்பேட்டையில் (ஜோலார் பேட்டை) மற்றும் கோவை போன்ற முக்கிய சந்திப்பில் நிற்காத திருவனந்தபுரம் மெயில், வரும் போது மட்டும் எப்படி ஆவடியில் நிற்கிறது?

ஏற்காடு இரயில் வண்டி கூட ஆவடியில் நின்று செல்லும் போது ஏன் இந்த திருவனந்தபுரம் மெயில் நிற்பதை மட்டும் பெரிது படுத்து கிறீர்கள் என்று கூட சிலர் கேள்வி எழுப்பலாம். இதனையும் ஆராய வேண்டும். ஏற்காடு இரயிலில் ஏறி ஆவடியில் இறங்க வேண்டிய வர்கள், சென்னை சென்ரல் வரை பயணச்சீட்டு வாங்க வேண்டும். ஆனால் திருவனந்தபுரம் மெயிலில் ஏறி ஆவடியில் இறங்க வேண்டி யவர்கள் ஆவடி வரை மட்டுமே பயணசீட்டை பெற்றால் போதும். ஏனெனில் திருவனந்தபுர மெயிலில் ஆவடி என்பது அங்கீகரிக்கப்பட்ட நிறுத்தம். ஆனால் ஏற்காடு விரைவு இரயிலில் ஆவடி என்பது அங்கீ கரிக்கப்பட்டாத நிறுத்தம். ஆகவே ஆவடியில் இறங்குபவர்கள் சென்னை வரை பயணச்சீட்டைப் பெறவேண்டும்.

அதாவது மலையாளிகள் அனைவரும் மிகச் சரியாக பயணத் தொகையை கட்ட வேண்டும். ஆனால் ஏமாளித் தமிழர்கள், தாங்கள் பயணிக்கும் ஒவ்வொரு பயணச்சீட்டிலும் ரூ. 5/-யை அதிக மாகக் கட்ட வேண்டும். மலை யாளிகளின் நயவஞ்சகத்தை பாருங்கள்!

மலையாளிகளின் இனத் துரோ கத்திற்கு பல உதாரணங்கள் உண்டு. அந்தப் பட்டியலில் மேற்கண்ட துரோகமும் அடங்கும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகையில் 2.76% (3,33,87,677) கேரள மலையாளிகள் 5.96% (7,21,38,958) தமிழர்களை ஏமா ளிகளாக மாற்றியுள்ளார்கள். வீதிக்கு வந்து போராடினால் மட்டுமே, இந்த இனத்துரோகத் திற்கு தீர்வு கிடைக்கும்.

Pin It