காவிரி எழுச்சி மாநட்டில் ஆற்றப்பட்ட உறையின் எழுத்து வடிவம்

minsaram-ulavargal 600

தமிழகம் நீர் பற்றாக்குறை மாநிலம். இங்கு நிலப்பரப்பு நீரை மட்டும் நம்பி பெருகி வரும் விவசாயத் தேவைகளைச் சந்தித்திட முடியாது. நிலத்தடி நீரை இறைப்பது என்பது மின்சாரமின்றி சாத்திய மில்லை.

இன்று விவசாய இணைப்புகளுக்கு மின்சாரம் இரவில் 6 மணி நேரமும் பகலில் 3 மணி நேரமும் வழங்கப்படுகிறது. என்று சொல்லப்படுகிறது. தமிழ கத்தில் இன்று 19.4 இலட்சம் விவசாயி இணைப்புகள் உள்ளன. 104 இலட்சம் குதிரைத்திறன் பயன்படுத்தப் படுவதாக மின்வாரிய புள்ளிவிபரங்கள் சொல்லுகின்றன.

2009--2010 லிருந்து 2012--13 வரையிலான காலத்தில் விவசாயத்திற்கான மின்சாரம் என்பது கிட்டத்தட்ட ஒரே அளவாக 12,000 மில்லியன் யூனிட் (1200 கோடி யூனிட்) என்று சொல்லப் பட்டுள்ளது.

இதன்படி பார்த்தால் மாநில அளவில் விவசாயத் திற்காக மின்சாரம் வழங்குவது என்பது ஒரு நாளைக்கு 4 மணி 7 நிமிடம் என்றே ஆகிறது.

அது மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் 15,000 புதிய விவசாய இணைப்புகள் கூடுகின்ற போதும் மின்சாரப் பயன்பாடு ஒரே அளவில் இருப்பது என்பதிலிருந்து விவசாயத்திற்கு தரப்படும் மின்சாரத்தின் அளவு குறைந்துள்ளது என்பது தெளிவாகும். 2000 ஆம் ஆண்டு வரை மாநிலத்தின் மொத்த மின்சாரப் பயன் பாட்டில் விவசாயத்திற்கான பங்கு என்பது 27 சதமாக இருந்தது. தொழில்களுக்கு 34 -38 சதம் வரை இருந்தது. வணிக நிறுவனங்களின் பயன்பாடு 6 சதமளவுக்கு இருந்தது. வீட்டு உபயோகம் என்பது 18 சதமளவுக்கு இருந்தது.

ஆனால் 20.12.2013 ஆம் ஆண்டில், தொழில்களுக்கான பயன்பாடு அதே 34 சதமாக இருந்த போதும் விவசாயத்திற்கான பயன்பாடு 27லிருந்து 18 சதத்திற்கு சரிந்து போனது. அதே நேரத்தில் வணிகத்திற்கான பயன்பாடு 6 சதத்திலிருந்து 12 சதத்திற்கு உயர்ந்தது. இது எதனைக் காட்டுகிறது. என்றால், வணிகப் பயன்பாட்டு வளர்ச்சி விவசாயத்திற்கான மின்சாரத்தை தன தாக்கிக் கொண்டது என்பதனைத்தான்.

விவசாயத்திற்கு அளிக்கப்படும் இலவச மின்சாரத் திற்காக மாநில அரசு 2010--11 இல் 269 கோடியை மின்கட்டன மானியமாக மின் வாரியத்திற்கு தந்தது. ஆனால் 30.3.2012 இல் வந்த கட்டண உயர்வுக்குபின் இந்த மானியத்தின் அளவு 1880 கோடியாக ஒரே ஆண்டில் உயர்ந்தது. மீண்டும் 2013 ஆம் ஆண்டு கட்டண உயர்வு, அரசு அளிக்க வேண்டிய விவசாயத்திற்கான மின் கட்டண மானியம் 2690 கோடியாக உயர்ந்து விட்டது. விவசாயத்திற்கு இலவசம் என்பது மாறாவிட்டாலும் அரசு அளிக்க வேண்டிய மானியம் இரண்டே ஆண்டுகளில் பத்து மடங்கு உயர்ந்து போனது.

இந்நிலையில்தான் விவசாயத்திற்கான பயன்பாடு என்பது நிலையாக வைக்கப்பட்டு இருக் கிறது. இதுவும் உயர்ந்து போய் 27 சதத்தி லேயே இருந்திருக்கு மேயானால் அரசு அளிக்க வேண்டிய, மானியம், மேலும் ஐந்து மடங்கு கூடியிருக்கும் இது எதிர் காலத்தில், விவசாயத்திற்கான மின்சார வழங்கல் எப்படியிருக்கும் என்பதனை சுட்டிக் காட்டுகிறது.

விவசாயத்தில் மின்சாரம் என்றால், அது தண்ணீரின் தேவையைச் சொல்லும். இந்திய அரசின் தண்ணீர் கொள்கை விவசாயத்திற்கான மின்சாரம் பற்றிய தனது கொள்கையை  தெளிவாக சொல்லி விட்டது. மத்திய அரசின் தண்ணீர் கொள்கை பற்றிய வரைவு அறிக்கை 7.5.5. பத்தியில் சொல்லுகிறது.  “விவ சாயத்திற்கு அளிக்கப்படும் மானிய விலை மின்சாரம், தண்ணீரையும், மின்சாரத்தையும் வீணடிக்கிறது’’ என்று நம் மாநில அரசு இதுவரை இக்கொள்கையை விமர்சிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை. ஆக மாநில அரசுக்கும் இதே கொள்கை தான் என்பதனை நாம் உணர முடியும்.

சுதந்திர இந்தியாவில் அரசியல் நிர்ணயம் செய்யப்பட்ட பொழுது டாக்டர் அம்பேத்கர் “மின்சாரம் நாட்டின் அனைத்துப் பகுதிக்கும் பரவ வேண்டும் என்று கனவுகண்டார். இது அனைத்துத் தரப்பு மக்க ளையும் எட்ட வேண்டுமென்றும் திட்டமிட்டார். ஏனெனில் அவர் தான் இந்தியாவின் முதல் மின் துறை அமைச்சர். அதன்படி வலியவர்களிடம் அதிக கட்டணத்தைப் பெற்று எளியவருக்கு குறைந்த விலையில் மின்சாரம் என்ற இடை மானியம் (cross sublimentry)  என்ற திட்டத்தினை 1948 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தில் கொண்டு வந்தார். அதனால் தான் மின்சாரத் திற்கு இன்று பல விலைகள் இருக் கின்றன. ஓரிடத்தில் யூனிட் பத்து என்றால் மற்றவர்களுக்கு இது ஐந்து,  என்றும் வேறு சிலருக்கு இலவசம் என்றும் இன்னுமிருக் கிறது.

1991 இல் நமது பிரதமர், நிதிய மைச்சராக கொண்டு வந்த புதிய பொருளாதார கொள்கையில், மின் சாரம் தனியாருக்குத் தரப் பட்டது. மின்சாரம் உரிமை என்பதி லிருந்து “தேவை” என்று வகைப்படுத்தப் பட்டு வணிகப் பொருளானது.

ஒன்று உரிமை என்றால், அரசு அதனை அனைவருக்கும் பங்கீட்டளிக்க வேண்டும் அனைத்து மக்களுக்கும் அது பரவ வேண்டும் அது அரசின் கடமையாகும். ஆனால், தேவையென்று வந்து விட்டால் அது வணிகப் பொருளாகி விடும். அவரவர் பொருளாதார நிலைக் கேற்ப வாங்கிக் கொள்ள வேண் டும். அல்லது வாங்க முடியாமலும் போகலாம். 19 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட மாற்றம்தான் மின்சாரம் என்பது உரிமையல்ல தேவை.

இன்று மின் வாரியம், தமிழகத் தின் தேவையில் மூன்றில் ஒருபங் கைத்தான் உற்பத்தி செய்கிறது. மத்தியத் தொகுப்பிலிருந்து மேலும் மூன்றில் ஒரு பங்கு வருகிறது. எஞ்சிய மூன்றில் ஒரு பகுதியைத் தனியாரிடம் கொள்முதல் செய் கிறது. மத்தியத் தொகுப்பு மின்சாரம் ரூ.1.75 என்று இருந்தாலும் தனியாரிடமிருந்து ஒரு யூனிட் 6 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை யுலுமான விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரே பொருளுக்கு இப்பொழுது உற்பத்தி முனை விலை பலதரமானதாகி விட்டது.

இந்தக்காலகட்டத்தில் வளர்ந்த வணிக உபயோகம் மின்சாரத்தினை முழுமையாக ஆக்கிரமிக்கிறது. மூன்றிலிருந்து ஐந்தடுக்கு வணிக வளாகம், முழுமையாக குளிரூட்டப் பட்டு, பட்ட பகலிலேயே மின் விளக்கு வெளிச்சத்தில் வணிகம் செய்கின்றன.

இங்கு விற்கப்படும் பொருள்கள் என்பது பீட்டர் இங்கிலாந்து லூயீ பிலிப், வான்ஹீசன் போன்ற நீரி போக்காலனி, KFC கோழிக்கறி, இது தவிர நகைக் கடைகள், விளையாட்டு நிறுவனங்கள் மூன்றிலிருந்து ஐந்து மெகாவாட் மின்சாரம் எடுத்துக் கொள்கின்றன.

ஒருமெகாவாட் மின்சாரம், இன்று சிறுதொழில்களுக்கு வழங்கப்பட்டால் 133 சிறு தொழில்களுக்கு போதுமானது. ஒவ்வொரு தொழில் நிறுவனத்திலும், மூவர் வேலை செய்தாலும், 400 குடும்பங்கள் பிழைக்கும். மூன்று மெகா வாட் உபயோகிக்கும் வணிகவளாக மின்சாரத்தில் 400 சிறு தொழில்களும் 1200 பேருக்கு வேலைவாய்ப்பும் எட்டும். தமிழ கத்தில் இது போன்று முழுமையாக குளிரூட்டப்பட்ட பெரிய நிறுவ னங்கள் 192 இருக்கின்றன. இவை 500 மெகாவாட் மின்சாரத்தை பயன்படுத்துகின்றன. இந்த மின் சாரத்தை விவசாயத்திற்கு மட்டும் தருவீர்களானால், கூடுதலாக இரண்டு மணி நேரம் மின்சாரம் வழங்க முடியும்.

கடந்த ஆட்சியில் ஒன்றரைக் கோடி தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டன. ஏற்கெனவே 50 இலட்சம் தொலைக் காட்சிப் பெட்டிகள் இருந்தன என்று கொண்டால் மொத்தம் தமிழகத்தில் 2 கோடி தொலைக்காட்சி பெட்டிகள். இவற்றில் ஒரு கோடி பெட்டிகள் மட்டும் 1000 மெகாவாட் மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும். இந்த தொலைக்காட்சிகளை முடக்கினால் இன்றைய மின்சாரப் பற்றாகுறையான 4000 மெகாவாட்டில் கால் பகுதியை குறைத்து விடலாம்.

இந்த தொலைக்காட்சிகளில் வருகின்ற மெகா சீரியல்கள்தான் ஒரு குடும்பத்தை சீரழிப்பது என்று சொல்லித்தருகின்றன. வீட்டில் பல பிரச்சினைகளுக்கு காரணமே இந்த பெட்டிகள்தாம். இந்த தொலைக் காட்சிகளை முடக்கினால் நாடும் நன்றாகி விடும். வீடும் நன்றாக இருக்கும்.

சென்னையைச் சுற்றி பன்னாட்டு நிறுவனங்கள் 31 நிறுவனங்கள் இருக்கின்றன. இவைகளுக்கு 245 மெகாவாட் மின்சாரம் எடுத்துக் கொள்கின்றன. இவர்களுக்கு 24 மணி நேரத் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்நிறுவனங்கள் அனைத்துமே வாகன தயாரிப்பு நிறுவனங்கள்.

ஓர் உண்மை தெரியுமா! 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த வளர்ந்த நாட்டிலும், வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் கிடையாது. ஏனெனில் 2000 ஆம் ஆண்டில் உலக தண்ணீர் முகமை (world water council) தண்ணீரை வணிகப் பொருளென்றாக்கியது. தண்ணீர் மனிதனின் உரிமையல்ல; தேவையென்றாக்கியது.

1.1.டன் எடையுள்ள ஒரு வாகனம் உற்பத்தி ஆவதற்கு 3 இலட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொள்ளும் காரில் தண்ணீர் தெரியாது. ஒருகாரை இறக்குமதி செய்யும் நாடு காருடன் மூன்று இலட்சம் தண்ணீரையும் இறக்குமதி செய்து கொள்ளும் சென்னையைச் சுற்றி ஆண்டுக்கு மூன்று இலட்சம் கார்கள் உற்பத்தி யானால் இவைகள் 5.28 டி,எம்,சி நீரை எடுத்துக் கொள்ளும் இதற்கு மறை நீர் (virtual water) என்று பெயர்.

1.2. ஒரு கோழி முட்டை உற்பத்திக்கு 26 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இஸ்ரேல் மக்கள் விரும்பி உண்ணும் ஆரஞ்சு பழத்திற்கு 50 லிட்டர் தண்ணீர் தேவை. இஸ்ரேல் ஆரஞ்சு ஏற்றுமதி செய்வதில்லை. நாம் தலைகீழாக இருக்கிறோம்.

தண்ணீர் எப்படி வணிகப் பொருளாக முடியும் மின்சாரமா வது தொழிற்சாலைகளில் உற்பத்திச் செய்ய வேண்டும். எந்த தொழிற் சாலையிலாவது ஒரு சொட்டுத் தண்ணீரை உற்பத்தி செய்துவிட முடியுமா! மின்சாரமில்லாமல் மனிதன் இருக்க முடியும் தண்ணீர் இல்லாமல் இருக்க முடியுமா? மின் சாரம் மனிதனுக்கு மட்டும் தான் தேவை தண்ணீர் அனைத்து உயிர னங்களுக்கும் தேவையில்லையா! இயற்கை தரும் நீரை விற்க யார் இவர்கள்!

தமிழக அரசு குப்பித் தண்ணீர் பத்து ரூபாய் என்று விற்கிறது. உடனே “ஆக குறைந்த விலையில் குப்பித் தண்ணீர் என்றார்கள். அரசு நினைத்திருந்தால், தனியார் விற்கும் அத்தனை குப்பித் தண்ணீ ரும் பத்து ரூபாய்க்கு மேல் விற்க கூடாது என்று உத்தரவிட்டிருக்க முடியாதா! கொக்ககோலாவையும், பெப்சியையும் எதிர்க்க அரசு மன மில்லையா! விலை ஒழுங்கு படுத்து வதுதான் அரசின் வேலை. தண் ணீர் விற்பதா வேலை? தண்ணீர் நாட்டின் வளமல்லவா!

உலகில் மனிதனுக்கு மட்டும் தான் வெளி ஆற்றல் தேவை. மற்ற எல்லா உயிரினங்களும் அதன் உடல் ஆற்றலை மட்டும்தான் நம்பி வாழுகின்றன. வெளிஆற்றலின் எளிய வடிவம்தான் மின்சாரம். மின்சாரம் நாட்டின் வளம் எரிக் காற்று, நிலக்கரி, எண்ணெய் எல்லாமே வெளி ஆற்றல் தேவையின் பிற வடிவங்கள்.

ஒரு நிகழ்ச்சியை விவசாயப் பல்கலைகழக பேராசிரியர் எழுதியுள்ளார் ஐரோப்பாக் கண்டத்திலேயே மிக வளர்ந்த செல்வமிக்க நாடு ஜெர்மனி நாட்டிற்கு ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தார். இவர்களுக்கு உணவருந்த வேண்டும். உணவகத்திற்குச் சென்றார்கள். அது கிட்டத்தட்ட காலி யாகவே இருந்தது. ஒரே ஒரு இணைமட்டும் ஒரே ஒரு உணவையும், பானத்தையும் மட்டும் வாங்கி வைத்துக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இவ்வளவு கஞ்சனாக இருக்கிறானே. இவனை எப்படி இந்த பெண் காதலிப்பாள் என்று நினைத்தார். உணவருந்திக் கொண்டிருந்த பொழுது வயதான இரு பெண் மணிகள் வந்தனர் அவர்களும் ஆளுக்கு ஒரே ஒரு உணவுப் பொருளை மட்டும் வாங்கிக் கொண்டு சிறிது சிறிதாக சாப்பிட்டார்கள்.

நாங்கள் முதல் உணவு வகைகள் தின்ற பிறகு மேலும் வாங்கினோம். ஆனால் அதில் பாதிக்கு மேல் மீந்து விட்டது. நேரமாகிவிட்ட படியால் பணம் செலுத்திவிட்டு புறப்படத் தயாரானோம். அப் பொழுது வயதான ஒரு பெண்மணி பணம் பெறுபவரிடம் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தார். அது என்னவென்று தெரியாவிட்டாலும் அது எங்களைப் பற்றியதுதான் என்பது புரிந்தது. நாங்கள் என்ன வென்று விசாரித்தோம். அந்த பெண்மணி எப்படி இவ்வளவு உணவை வீணாக்கலாம் என்று கேட்டார்.

உடனே நாங்கள் அதற்கு பணம் செலுத்திவிட்டோம் உங்கள் வேலையைப் பாருங்கள் என்று சொன்னோம். உடனே அந்த பெண்மணிக்கு படுகோபம் வந்து விட்டது. அவசரமாக போனை எடுத்து போன் செய்தார். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அங்கு ஒரு அதிகாரி வந்தார். சமூக மேற்பார் வையாளர் (social supervisor) என்ற அந்த அதிகாரி விபரங்களை கேட்டு விட்டு சொன்னார். “பணம் உங்களு டையதுதான். ஆனால், உணவு நாட்டினுடைய வளம்.உங்களுக்கு தேவையான உணவை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் வீணடிக்க உங்களுக்கு உரிமை யில்லை’’ என்று சொல்லி வீணாக் கப்பட்ட உணவுக் காக 50 மார்க் தண்டனை விதித்தார்.

ஆக நாட்டின் வளம் மக்களின் பொது சொத்து. அது அனைவருக்கும் பங்கிடப்பட வேண்டும். நமது அரசே சொல்லுகிறது 53,000 டன் அரிசி மட்டும்தான் வீணாக போய் விட்டது.!

மின்சாரமோ, தண்ணீரோ, இரும்போவேறு கனிமங்களோ அவை மக்களின் சொத்து இதே தஞ்சை மாவட்டம் பக்கத்தில் குத்தாலம் அருகில் எரிக்காற்று எடுக்கப் படுகிறது., இந்தியாவில் நிலப் படுகையில் எரிக்காற்று இராஜஸ் தானிலும், காவிரிப்படுகையிலும், வைகைப்படுகையான இராமநாத புரம் வழுதூரிலும் கிடைக்கிறது. நிதவளம் ஐந்து தனியார் நிறுவனங்களுக்கு 173 மெகாவாட் உற்பத்திக்கு தரப்படுள்ளன. மின்வாரியத் தின் எரிக்காற்று மின்சாரம், யூனிட் ரூ 2.90 என்று இருககும் பொழுது, இந்த தனியார் நிறுவனங்கள் மின் வாரியத்திற்கு யூனிட் ரூ 6.40 க்கு விற்கின்றன. ஒரு தனியாரின் இலாபம் உள்ளடங்கிய மின்சாரத்தின் விலை யூனிட் ரூ. 3.40 தாக இருக்கும் பொழுது மற்றத் தனியார்களிடம் ரூ. 6.40 க்கு மின் வாரியம் வாங்குகிறது.

கடந்தாண்டில் 683 கோடி யூனிட்கள் ரூ. 5.50 க்கு கொள்முதல் செய்யப்பட்டன. ஒரு யூனிட்டுக்கு இரண்டு ரூபாய் கூடுதல் இலாபம். ஒவ்வொரு நாளும் 4 கோடி ரூபாய் கூடுதல் இலாபம்.

ஆக மின்சாரமானாலும், தண்ணீரானாலும் அரசின் கொள்கை மாறாமல் இந்த துயரங்களுக்கு தீர்வு காண முடியாது. மக்களின் நலன் பாராட்ட அரசு தயாரில்லை. 1923 ஆம் ஆண்டில்  உலகின் மக்கள் தொகை 300 கோடி. இன்று 710 கோடி. இவர்களில் விவசாயிகள் மீனவர்கள், பழங்குடிகள், ஏழைகள், இவர்களை வறுமையில் வாடவிடுவதுதான் உலகமயமாக்கல் கொள்கையின் நோக்கம். அப்படி நடந்ததால்தான் உலகின் வளத்தை பணம் வைத்திருப்ப வர்கள் மட்டும் அனுபவிக்க முடியும். இந்த கொள்கை மாறாதவரை, மாற்றப்படாத வரை தீர்வுகாண முடியாது.

Pin It