tamildesam 3501990 ஆண்டு பிப்ரவரி 25 ஆம் நாள் சென்னைப் பெரியார் திடலில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் (அன்றைய எம்.சி.பி.ஐ.) தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு நடத்தி, பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை தமிழ்நாட்டிற்கு வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியதற்காக தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் மீது பிரிவினைத் தடைச் சட்டத்தை ஏவி சென்னை நடுவண் சிறையில் அடைத் தார்கள்.

அன்றிலிருந்து தமிழ்த் தேசியப் பேரியக்கம், தமிழர்களின் அரசியல், பொருளியல், மொழி உள் ளிட்ட பண்பியல் கூறுகளின் கொள்கலனாக கூர்மைப் படுத்தப்பட்ட இலட்சியமாகத் தமிழ்த் தேசியத்தை வளர்த்து வருகிறது. அந்நாளை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 25 ஆம் நாளை தமிழ்த் தேசிய நாளாக தமிழ்த் தேசியப் பேரியக்கம் கடைபிடிக்கிறது. இவ் ஆண்டு, தமிழ்த் தேசிய நாள், தமிழகமெங்கும் எழுச்சியுடன் நினைவு கூரப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் - வாலிகண்டபுரத்தில், 25.2.2015 மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியநாள் பொதுக் கூட்டத்திற்கு, கிளைச் செயலாளர் தோழர் இரா. கோகுலகிருட்டிணன் தலைமையேற்றார். தோழர் சு.சதீசு வரவேற்புரையாற்றார்.

முன்னதாக, சாத்துக்குடல் தே. இளநிலா குழுவினரின் தப்பாட்டம், சிதம்பரம் தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி மாணவர்களின் சிலாம் பாட் டம் - - சுருளாட்ட நிகழ்வு கள் சிறப்புடன் நிகழ்ந்தேறின.

நிகழ்வில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ.பால்ராசு, தோழர் அ.ஆனந்தன், தோழர் க.முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் மூ.த.கவித்துவன், தோழர் இராசாரகுநாதன், தோழர் சி. ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

விழா மேடை தழல் ஈகி அப்துல் ரவூப் பெயரில் அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்வில் கலந்துகொண்ட அப்துல் ரவூப்பின் தந்தையார் திரு சு. அசன் முகமது அவர்கள், தமிழ்த் தேசியமே இன்றையத் தேவை என வலியுறுத்தி நெகிழ்ச்சி உரையாற்றினார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன், த.தே.பே. கொடியை ஏற்றி வைத்து, எழுச்சியுரையாற்றினார். நிகழ்வில் பங்கேற்று தமிழ்த் தேசிய உணர்வுக் கருத்துகளைப் பேசிய சிறுமியருக்கு பரிசளிக்கப்பட்டது.

tamil desam 350பூதலூர் ஒன்றியம்

பூதலூர் ஒன்றியத்தில், காலை 8.30 மணியிலிருந்து மாலை வரை, பூதலூர் தொடங்கி  வில்வராயன்பட்டி, மு.வீ.கண்டியன்பட்டி, நந்தவனப்பட்டி, புதுப்பட்டி, மனையேறிப்பட்டி, வெண்டையம்பட்டி, காமாட்சி புரம், புதுக்குடி முதன்மைச்சாலை, புதுக்குடி, மேலத் திருவிழாப்பட்டி, சமத்துவபுரம், வன்னியம்பட்டி, ஆச்சாம்பட்டி, கொசுவப்பட்டி, பாலையப்பட்டி, நண்டம் பட்டி, காதாட்டிப்பட்டி, வளம்பக்குடி, கக்கனூர், செங்கிப்பட்டி, சாணூரப்பட்டி ஆகிய இடங் களில் த.தே.பே. கொடியேற்ற நிகழ்வுகள் நடை பெற்றன.

நிகழ்வுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமை யேற்றார். டி.பி. சானிடோரியம் - செங்கிப்பட்டி பகுதி களில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன், த.தே.பே. கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றினார். பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் அ.தேவதாசு, மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் தோழர் ரெ.கருணாநிதி, தோழர் ச.காமராசு, தோழர் க.காமராசு, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் தட்சிணாமூர்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினர் தோழர் அருள்தாஸ், மூத்த தோழர் கு.சுப்பிரமணியன், தோழர் ஆரோக்கியசாமி உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் இதில் கலந்து கொண்டனர். 

சென்னை

சென்னையில், தலைமை அலுவலகம் அமைந் துள்ள க.க.நகர் பகுதி முதல் தெருவில் காலை 9 மணிய ளவிலும், தியாகராயர் நகர் பசனை கோயில் வீதி சந்திப்பில் காலை 10 மணிக்கும், தமிழ்த் தேசிய நாள் கொடியேற்ற நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வுக்கு, த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் தோழர் வி.கோவேந்தன் தலைமையேற்றார். மூத்த தோழர் தமிழ்ச்சமரன், த.தே.பே. கொடியினை ஏற்றி வைத்தார். பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ. நல். ஆறுமுகம், தாம்பரம் த.இ.மு. செயலாளர் தோழர் வெற்றித்தமிழன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி முழக்கங்கள் எழுப்பினார். நிகழ்வில், திரளான த.தே.பே. தோழர்கள் கலந்து கொண்டனர். 

சிதம்பரம்

சிதம்பரம் காசுக்கடைத் தெருவில் த.தே. பேரியக்க மூத்த உறுப்பினர் தோழர் மு.முருகவேல் அவர்கள் தலைமையில் தமிழ்த் தேசியப் பேரியக்கக் கொடியை பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட் ராமன் ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். முன்ன தாக த.தே.பே சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் தமிழ்த் தேசிய நாள் குறித்து விளக்கிப் பேசினார். நிகழ்வில், தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி அமைப் பாளர் தோழர் வே.சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் கலந்து கொண்டனர்.

முருகன்குடி

பெண்ணாடம் வட்டம் முருகன்குடியில், மாலை நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கக் கிளைச் செயலாளர் தோழர் அரா.கனகசபை தலைமையேற்று கொடியேற்றி வைத்து உரையாற் றினார். த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.முருகன், த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி.பிரகாசு, த.மா.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் மா.மணிமாறன், சாத்துக்குடல் த.இ.மு. செய லாளர் தோழர் தே. இளநிலா, மகளிர் ஆயம் தோழர் கள் மு. வித்யா உள்ளிட்ட த.தே.பே. தோழர்களும், திருவள்ளுவர் தமிழர் மன்றத் தோழர்களும் இதில் திரளாகக் கலந்து கொண்டனர்.

erode thamildesam 350ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசிய நாள் - கொடியேற்ற நிகழ்வுக்கு, த.தே.பே. தோழர் குமரேசன் தலைமையேற்றார். த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெ. இளங்கோவன், த.தே.பே. கொடியினை ஏற்றி வைத்தார். தோழர் சரவணன், தமிழ்த் தேசிய நாள் குறித்து உரையாற்ற, த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் மாவீரன் நன்றி கூறி னார்.

குடந்தை

குடந்தையில் நடைபெற்ற தமிழ்த் தேசிய நாள் - கொடியேற்ற நிகழ்வில், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் விடுதலைச்சுடர், த.தே.பே. கொடியினை ஏற்றி வைத்தார். த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் தேழார் தீந்தமிழன், த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச.செந்தமிழன் உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

தேவராயன்பேட்டை

பாபநாசம் வட்டம் - தேவராயன்பேட்டையில் நடை பெற்ற தமிழ்த் தேசிய நாள் - கொடியேற்ற நிகழ்வில், தமிழக இளைஞர் முன்னணி கிளைச் செயலாளர் தோழர் இரா.பிரபாகரன், த.தே.பே. கொடியினை ஏற்றி வைத்தார். த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் விடுதலைச்சுடர், த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச.செந்தமிழன் உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

சாமிமலை

சாமிமலை கடைவீதியில் நடைபெற்ற தமிழ்த் தேசிய நாள் - கொடியேற்ற நிகழ்வுக்கு, கிளைச் செயலா ளர் தோழர் முரளி தலைமையேற்றார். த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் விடுதலைச் சுடர், த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழன், த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச.செந்தமிழன் உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

tamil desam meeting 350மதுரை

மதுரை செல்லூர் தாகூர் நகர் பகுதியில், தமிழ்த் தேசிய நாள் -கொடியேற்ற நிகழ்வுக்கு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.இராசு தலைமை யேற்றார். பொதுக்குழு உறுப்பினர் தோழர் மேரி, த.தே.பே. கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றினார். தோழர்கள் கதிர்நிலவன், கருப்பையா, புருசோத்தமன், செரபினா, சிவா உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் பங்கேற்றனர்.

திருச்சி

திருச்சி இராமச்சந்திரா நகரில் தமிழ்த் தேசிய நாள் கொடியேற்ற நிகழ்வில், பொதுக்குழு உறுப்பினர் தோழர் மூ.த.கவித்துவன் த.தே.பே. கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் தோழர் இராசாரகுநாதன், பைந்தமிழ் இயக்கம் திரு. தமிழாதன், ஆகியோர், தமிழ்த் தேசிய நாள் குறித்து விளக்கிப் பேசினர். இதில், மனுவேல், மாதேவன், இனியன் உள்ளிட்டத் தோழர்கள் பங்கேற்றனர்.

தஞ்சை நகரம்

தஞ்சை நகரத்தில், தமிழ்த் தேசிய நாள் - கொடி யேற்ற நிகழ்வு சிறப்புற நடைபெற்றது. கட்சி அலுவலகம், பூக்கார லாயம், அண்ணா நகர் முதல் தெரு, அண்ணா நகர் ஏழாம் தெரு, ரெங்கநாதபுரம், கலைஞர் நகர், வடக்குவாசல் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், மாநகரச் செயலாளர் தோழர் லெ.இராமசாமி, பொதுக்குழு உறுப்பினர், தோழர் இரா.சு.முனியாண்டி, நகரச் செயற்குழு உறுப்பினர்  தோழர் சிவராசு உள்ளிட்டோர் கொடியேற்றினர். மாவட்டச் செயற்குழு தோழர் குண சேகரன், தோழர் காந்திமதி உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி கடை வீதியில் தமிழ்த் தேசிய நாள் பொதுக்கூட்டம் 25.2.2015 மாலை சிறப்புற நடைபெற்றது. நிகழ்வுக்கு, கிளைச் செயலாளர் தோழா கா.சித்திரைச் செல்வன் தலைமையேற்றார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, மூத்த தோழர் இரா. கோவிந்தசாமி, ஒன்றியச் செயலாளர் தோழர் தனபாலன், ஒன்றியக் குழு உறுப்பினர் தோழர் இரமேசு, பொதுக்குழு உறுப்பினர் தோழர் ப. சிவவடிவேல் ஆகியோர் உரையாற்றினர். நிறைவில், தோழர் பாரதி ராஜா நன்றி கூறினார்.

Pin It