எதையோ பேசுவதாய் நினைத்து,
வேறெதையோ பேசுகிறேன்
பேசி முடிக்கும் முன்பாகவே
வேறொன்றாய்ப் புரிந்து கொள்கிறாய்.

மகிழ்விற்கான தருணங்களில்கூட
கனத்த மௌனமே
நம் இருவருக்கிடையில்...

புரிந்து கொள்ள முடியாமலே
பறிபோய்க் கொண்டிருக்கிறது
காலமும்
சந்தோசங்களும்...

- நந்தன், திருப்பூர்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.