women_250புது மருமகள்
நகைப்பெட்டி நனைந்தது
போலிருந்தது...
தன் குடும்பத்தின் வியர்வையும்
கண்ணீரும்
இப்படித்தான் - விடாது
சுரப்பதாகச் சொன்னாள்...
தனித்தனி அடையாளம்
இல்லாவிடினும்
ஒவ்வொன்றுக்குள்ளும்
அவர்கள்
உண்ணாத பண்டங்கள்
உடுத்தாத துணி வகைகள்
போகாத சுற்றுலாக்கள்
கிராம்
கிராமாய்க் குடியிருந்து
குரல் கொடுப்பதாகவும்
குறிப்பிட்டாள்..!
சலிப்போ
வெறுப்போ இல்லாது
ஒலித்த
அவள் குரல்தான்
உண்மையாக அச்சமூட்டியது!

- உமா மோகன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.