ஈசன் பிரம்படி பட்டும்
இன்னும் திருந்தவில்லை
மதுரை.
----------------------------------------
இரண்டாவது முறையாக
எரிந்தது மதுரை.
வெண்கொற்றக்குடை
வெட்கப்படவில்லை
இப்போது.
----------------------------------------
ஆந்தைக்கு மட்டுமல்ல
ஆர்க்காட்டாரின்
புண்ணியம்
காரிருளிலும்
கண் தெரிகிறது எங்களுக்கு.
---------------------------------------------
பெயர் தான்
தாழ்தளப்பேருந்து
குறையவில்லை கட்டணம்.
-------------------------------------------------
இடைத்தேர்தல்
எடைத்தேர்தலாம். . .
எவ்வளவு
செலவழித்தோமென
பார்த்தீர்களா?
-------------------------------------------------
குண்டோதரன்
கை வைத்த
வைகையில்
கால் கூட வைக்கமுடியவில்லை.
---------------------------------------------------
வீதிகளில்
வன்முறை தாண்டவமாட
வீட்டுக்குள்ளோ
மானும், மயிலும் ஆட.
------------------------------------------------------
முக்கண் இருந்தும்
விட்டுவிட்டானே
கருவறை சேட்டையை.
---------------------------------------------------------
பணக்காரர்களைப் போலிருக்கிறார்கள்
பிச்சைக்காரர்கள்.
எப்போதும்
இல்லையென்றே கூறுகிறார்கள்.
------------------------------------------------------------
- ப.கவிதா குமார்
செம்மலர் - மார்ச் 2010
அங்கத கவிதைகள் ஒன்பது
- விவரங்கள்
- ப.கவிதா குமார்
- பிரிவு: செம்மலர் - மார்ச் 2010
More articles by ப.கவிதா குமார்
- தெம்மாங்கு டிகேஎஸ்.நடராஜன் (02 ஜன 2018)
- இயக்குநர் பாலா படங்களில் போலீஸ் (15 டிச 2017)
- என்ன செய்யப்போகிறது நடிகர் சங்கம்? (12 டிச 2017)
- மறக்கப்பட்ட புரட்சிதாசன் (29 நவ 2017)
- சிவகங்கை சீமையில் தொடரும் தீண்டாமை - உண்மை அறியும் குழுவிடம் கதறிய தலித் மக்கள் (09 பிப் 2015)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.