மேற்கு வங்கத்தில் லால்கார் பகுதியில் மாவோயிஸ்ட்டுகளின் கொலைவெறித்தாக்குதல் தொடர்கிறது. மத்திய - மாநில போலீசாரின் தேடல்களுக்கிடையே ஜார்க்கண்ட்டிலிருந்து மாவோயிஸ்ட்டுகள் திடீர் திடீரென ஊருக்குள் புகுந்து சிபிஎம் ஊழியர்களை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி விடுகின்றனர். கடந்த ஜூலை 13 அன்று பெரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிபிஎம் மாவட்டத் தலைவர்களையும், ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயதுச் சிறுவனையும் கூட சுட்டுக் கொலை செய்துள்ளனர். இதற்கான திட்டத்தை அங்குள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் வகுத்துக் கொடுத்துள்ளனர். மாவோயிஸ்ட் - மம்தா கூட்டணி தொடர்கிறது.

ஜார்க்கண்ட், ஒரிசா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகள் பலம் சமீபகாலத்தில் அதிகரித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் பெரும்பகுதி மாவோயிஸ்ட் ஆதிக்கத்தில் உள்ளது. கடந்த ஓராண்டில் முதலாளிகளிடம் ரூ.360 கோடி அங்கு பணம் பெற்றுள்ளனர். நவீன ஆயுதங்களைப் பெறுள்ளனர். சிபிஎம் போன்ற அமைப்பு ரீதியில் இயங்கம் கம்யூனிஸ்ட் கட்சிகளை அழிப்பதற்காக ஆட்சியாளர்கள் ரகசியமாய் மாவோயிஸ்ட்டுகளை வளர்த்து விடுகின்றனர். இதற்கு முதலாளித்துவக் கட்சிகளும் உடன்பட்டுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கட்சி மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட்டு அராஜகங்களை மக்களைத் திரட்டி போராட முடிவு செய்து களமிறங்கியுள்ளது. சிபிஎம் வென்றே தீரும்.

 

Pin It