கர்நாடாகாவை சேர்ந்த 7 அமைச்சர்கள் உட்பட 14 பா.ஜ.க எம்.எல்.ஏ க்களும், 5 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் அமைச்சர் ரேணுகாச்சார்யா தலைமையில் இரண்டு, மூன்று நாட்கள் கோவா விற்கும், மும்பைக்கும், கொச்சிக்கும், சென்னைக்கும் அயறாது பயணித்தனர். அமைச்சர் தலைமையிலான இக்குழு ஏதோ மக்கள் நலத் திட்டங்கள் மேற் கண்ட பகுதிகளிளெல்லாம் எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்து அந்த அனுபவத்தை தங்கள் மாநிலத்தில் எடுத்துச்செல்ல பயணித்த குழு கிடையாது. இது ஒரு “குழு’’ நாகரிகமாக சொல்ல வேண்டுமானால் எடியூரப்பாவுக்கு எதிர் கோஷ்டி.

கோஷ்டிகளும், கோஷ்டி மோதலும் அந்த மாநிலத்திற்கு புதிய விஷயம் கிடையாது. கர்நாட காவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் தென் மாநி லத்தில் முதல் பா.ஜ.க அரசு. இது மேலும், விரி வடையும் என்றெல்லாம் பேசினர். ஆனால், அது விரிவடையாமல் விரிசல் அடைந்ததுதான் நிஜம்.

முதல்வர் எடியூரப்பாவின் சக அமைச்சர் ஷோபாவை நீக்கிட வேண்டுமென அமைச்சர் களாய் உள்ள ரெட்டி சகோதரர்கள் ஏற்படுத்திய பிரச்சனை அதைத் தொடர்ந்த நிகழ்வுகள் சில விரிசல்களை உருவாக்கியது. ஒரு இடத்தில் ஓட்டு போடுவதற்கு முன்பு ஆங்காங்கே விரிசல் விழிந்து கொண்டே உள்ளது.

கடந்த 29 மாத கால பா.ஜ.க ஆட்சியில் அக் டோபர் 14ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக் கெடுப்பு மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட நம் பிக்கை வாக்கெடுப்பாகும். நம்பிக்கை வாக்கெடுப் பெல்லாம், நம்பகத்தன்மையற்று போய்விட்டது. ஒரு அரசு ஆட்சியில் நீடிக்க தனது ஆட்சி பெரும்பான்மையோடுதான் இருக்கிறது என்பதை அவை யில் நிருபிக்க வேண்டும் என்று எஸ்.ஆர். பொம்மை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் வழக்கப் பட்ட தீர்ப்பின் அடிப்படையிலேயே இது நிகழ்கிறது.

ஜனநாயகத்தன்மையோடு இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவேண்டும் என்பதுதான் எல்லா சாரசரி குடிமகனின் விருப்பமும். ஆனால், பெரும்பான்மையான நம்பிக்கை வாக்கெடுப்புகள் அப்படி நடைபெறுவதில்லை என்பதே வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. கோடி கோடியாய் பணம் அதை இதை தருவதாக ஆசை வார்த்தைகள், பதவி போன்ற நம்பிக்கைகளை எம்.எல்.ஏ, எம்.பி களுக்கு ஏற்படுத்தாமல் எந்த நம்பிக்கை வாக்கெடுப்புகளும் நடைபெறுவதில்லை.

பா.ஜ.க.வும் காங்கிரசும் இதுபோன்ற குதிரைபேரம் பேசுவதில் ஒன்றுக்கொன்று சளைத் தவர்கள் கிடையாது. முன்புபோல் பெரும்பாலான மாநிலங்களில் தனிப் பெரும்பான்மையோடு காங்கிரசோ, பா.ஜ.க வோ ஆட்சி செய்ய இயல வில்லை. மாநில கட்சிகளோடும், சுயேட்சை எம்.எல்.ஏ களை யும் இணைத்துக் கொண்டே ஆட்சி அதிகாரத்தை பிடிக்கின்றனர். 5 ஆண்டுகள் முடிப்பதற்குள் பல வகையான பேரங்கள் இல்லாமல் எதுவும் நடை பெறுவதில்லை. காங்கிரஸ், பா.ஜ.கவும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி இந்த குதிரை பேரத்தை செய்வதாக குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். ஆனால் இரு கட்சிகளும் இதை சளைக்காமல் செய்து கொண்டே இருக்கின்றனர்.

கடந்த ஐ.மு.கூ அரசும் தன்து பெரும்பான்மையை நிருபிக்க கோடி கோடியாய் பணத்தை செலவு செய்து கீழ்த்தனமான பல்வேறு பேரங்களில் ஈடுபட்டே வெற்றி பெற்றது. பெரு முதலாளிகளை நம்பியே ஆட்சி செய்யும் பா.ஜ.கவும், காங்கிரசும் இப்படி இல்லாமல் வேறு எப்படி செயல் படுவார்கள்?

முன்பெல்லாம் ஆட்சியை பிடிப்பதற்காக மாற்று கட்சியினரை விலைக்கு வாங்கி வந்தனர். இதை தடுக்க இவர்களே கட்சித்தாவல் தடை சட்டத்தை கொண்டு வந்தனர். ஆனால் இன்று அவர்கள் கட்சிக்குள் உள்ளவர்களே ஆட்சிக்கு எதிராக செயல்படுவதும், அவர்களை தாஜா செய்வதும் தான் கர்நாடகாவில் நடந்தேறியுள்ளது.

ஆகவேதான் இடதுசாரிகள் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்று கூறிவரு கின்றனர். தேர்தல்களில் பணபலத்தையும், அடியாள் பலத்தையும் கொண்டு செயல்படுவதையும், பணம் கொடுத்து செய்தி வெளியிடுவது போன்றவை களையும் தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியமான ஒன்றாகும். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சொல்வதுபோல், பகுதியளவிலான பட்டியலைக் கொண்டு விகிதாசார பிரிதிநிதித்துவம் கொண்டு வருவதே தேர்தலில் பணபலத்தை ஒரளவிற்கு குறைப்பதற்காவது செய்ய வேண்டிய முக்கிய விஷயமாகும். தேர்தலில் பணபலம் போன்றவை அரசியல் அமைப்பு முழுவதையும் ஊழல் நிறைந்தவையாக மாற்றிவிடுகிறது.

கர்நாடாகாவில் நடைபெற்ற நம்பிக்கை வாக் கெடுப்பு கோஷ்டி மோதல் போன்றவைகளிலும் பெரு முதலாளிகளின் ஊழல் பணம் முக்கிய ஆயுத மாக பயன்பட்டுள்ளது. கர்நாடகாவிலும், ஆந்தி ராவிலும் சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலில் ஈடுபடுவர்கள் (ரெட்டி சகோதர்கள்) போன்றார், அமைச்சரவையிலும் பங்கேற்று நாட்டை கொள்ளையடிக்கின்றனர்.

“வருமான வரித்துறை, சுங்கத்துறை, விற்பனை வரித்துறை, போன்றவை லஞ்சம் வாங்குவதில் புகழ் பெற்று விளங்குகின்றன. ஒவ்வொரு வேலைக்கும் எவ்வளவு லஞ்சம் என்ற மத்திய அரசே நிர்ணயம் செய்து அறிவித்துவிட்டால், எவ்வளவு செலவாகும் என்று மக்களுக்கு தெரியும், இதன்மூலம் வேவையற்ற பேரம் பேசுதலையும் தவிர்க்கலாம்’’ என்று வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கிய வழக் கின் விசாரணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜி. டி.எஸ். தாகூர் ஆகியோர் தேசத்தில் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ள ஊழலை சுட்டிக்காட்டி ஏகடியம் செய்துள்ளனர்.

ஆனாலும் அரசு ஊழல் மயக்கத்திலிருந்து விடுபட்டபாடில்லை. 70 ஆயிரம் கோடி செலவில் நடைபெற்ற காமன் வெல்த் போட்டி ஊழல் தேசத்தை தலைகுனிய வைத்துள்ளது. ஊழலும், பணபலமும் ஜனநாயகத்தை சீரழிக்கிறது மக்கள் பிரச்சனையை விவாதிக்க வேண்டிய நாடாளு மன்றமும், சட்டமன்றங்களும் மல்யுத்தம் நடைபெறும் களமாக மாறியுள்ளது. இந்த அவைகளி லெல்லாம் கிரிமினல் எண்ணிக்கை அதிகமானால் அதுதானே நடக்கும்.

அரசியல் நாகரீகத்தோடு, கொள்கைகளை முன்வைத்து மக்களுக்காக மக்கள் கோரிக்கை களுக்கான போராடும் ஜனநாயக சக்திகளை வலுப் படுத்தாமல் ஒரு சரியான மாற்றை நோக்கி பயணிக்க முடியாது.

கேரளா, மேற்குவங்கும், திரிபுரா என ஊழல் கறைபடியாமல் அரசியல் மூலம் மக்களுக்கு நேர்மை யான முறையில் ஆட்சி செய்துவரும் இடதுசாரி அரசியலை இதர முற்போக்கு சக்திகளையும் ஜனநாயக இயக்கங்களையும் இணைத்துக்கொண்டு முன்னெடுத்து செய்வது காலத்தின் தேவையாகும்.

Pin It