தமிழகத்தின் இளைஞர்களின் மிகப்பெரும் பிரச்சனை வேலைவாய்ப்பு என்பது தொடர்ந்து நிடித்து வருகிறது. தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளாக தவறாமல் தரப்பபடுவதும், ஆட்சிக்கு வந்த பின்பும் மறப்பதும் வாடிக்கையாய் போன சூழலில் தமிழக இளைஞர்களின் இதயக்குமுறலை வெளிப்படுத்தி போராடி வருவது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.

கடந்த டிசம்பர் 18 அன்று அரசானை 170 ஒய்வு பெற்றவர்களை பணிநியமனம் செய்வதற்காகவோ, என பிரத்யோகமாக வெளிபிடப்பட்டது. இந்த அரசானயை டி.ஒய்.எப்.ஐ கடும் கண்டணத்தை வெளிப்படுத்திய போது தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் தன்னுடைய கேள்வி பதிலில் இது ஒரு தற்காலிக ஏற்பாடு என்று விளித்து இருந்தார்.

2003ம் ஆண்டு அரசு ஊழியர் போராட்டம் நடத்திய போது 10,000 பேரை ஒரு வாரத்தில் உடனடியாக பணியமர்தியது அரசு இயந்திரம். ஒரே வாரத்தில் 10,000 பேர் பணியமர்த்த அரசு இயந்திரத்தினால் முடியும் என்றால் 2,88,000 பணியிடங்களை நிரப்பிட 29 வாரம் போதாதா?

2006 ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு தன்னுடைய 176 வாரத்திற்கும் மேற்பட்ட ஆட்சிக் காலத்தில் 66 ஆயிரம் பணியிடம் மட்டுமே பூர்த்தி செய்வது தமிழக மக்களின் எதிர்பார்பை நிறைவு செய்யவில்லை. நிரப்பிட வேண்டிய காலிபணியிடங்கள் 2,88,000 இருப்பதும் தொடர்ந்து ஒய்வு பெற்று வரக்கூடிய ஊழியர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளதால் உடனடியான பணி நியமனம் அவசியமாகிறது.

தற்காலிகமான ஏற்பாடு என்று சொல்லி இளைஞர் வாழ்வை இருட்டாக்கும் அரசின் முயற்சி எதிராக பிப்ரவரி 3 அன்று கலெக்டர் அலுவலகம் நோக்கி கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலம் ஆர்ப்பாட்டத்தை டி.ஒய்.எப்.ஐ அறிவித்தது. தமிழகம் முழுவதும் 29 மாவட்டங்களில் இப்போராட்டம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று எழுச்சியுடன் நடைபெற்றது.

மக்களின் கோரிக்கைகளை தானே யோசித்து நிறைவேற்றுவதாக கூறும் அரசாங்கம் 16 பெண்கள் உள்ளிட்ட 600 பேரை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்தது. எஸ்.எப்.ஐ மாநிலச் செயலாளர் கே.எஸ். கனகராஜ் டி.ஒய்.எப்.ஐ மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், அ.ர.பாபு, குணசுந்தரி இதில் அடங்குவர்.

இக்கொடுஞ்செயலுக்கு எதிராக மறுநாள் துவங்கி தமிழகம் முழுவதும் சென்னை துவங்கி குமரி வரை 85க்கும் மேற்பட்ட மையங்களில் பல்லாயிரக்கனக்கான இளைஞர்களும், இளம் பெண்களும் பங்கேற்று தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.

தமிழகத்தில் உள்ள கடைசி காலிப்பணியிடமும் இளைஞர்களால் நிரப்பப்படும் வரை இந்த போராட்டம் தொடரும்.

-ச.லெனின்

Pin It