நெய்வேலிக்கு அருகேயுள்ள குறிஞ்சிப் பாடியில் இருந்து வெளிவரும் ‘திசை எட்டும்’ மொழியாக்கக் காலாண்டிதழின் 2014 ஜனவரி-மார்ச் இதழ் உலகச் சுற்றுச்சூழல் இலக்கிய சிறப்பிதழாகக் கொண்டுவந்துள்ளது. 2003ஆம் ஆண்டிலிருந்து வெளிவரும் இவ்விதழ், கடந்த பத்தாண்டுகளில் சிறந்த மொழியாக்கச் சிறப்பிதழ்களைத் தமிழ்ச் சமூகத்திற்கு அளித்துள்ளது. அந்த வகையில், ‘திசை எட்டும்’- இதழின் சூழலியல் சிறப்பிதழ், தமிழ்ச் சிற்றிதழ் வரலாற்றில் மைல்கல்லாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Thisaiettum‘இயற்கையை நேசிப்போம்’ தலையங்கமே தனிக் கட்டுரையாக விரிகிறது. தமிழில் பசுமை இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, தொளிணிவு, மீண்டு எழுந்துள்ள இன்றைய நிலைகுறித்து நக்கீரன், ஏ.சண்முகானந்தம் தெளிப்படப் பேசியுள்ளனர். தமிழில் ஒவ்வொரு பதின் ஆண்டுக்கும் ஒருமுறை தலித்தியம், பெண்ணியம் என மலர்ச்சி ஏற்படுவது போல எதிர்வரும் பதின்ஆண்டினை பசுமை இலக்கியத்துக்கானதாகக் கணித்துள்ளது பொருத்தமாகவே உள்ளது. இன்றைய பசுமை இலக்கி-யம் இளைஞர்களின் முக்கியமானதாக அவதானிக்கப்படுகிறது. தமிழின் மற்ற துறைகளில் பயன்படுத்தாத அழகிய கலைச்சொற்கள் சூழலியலில் பயன்படுத்துப்-படுவது சிறப்புக்குரியதாகும்.

சிறந்த மொழிபெயர்ப்புகள், அழிவின் விளிம்பிலுள்ள காட்டுயிர்களைக் காப்பாற்றுவதில் எடுக்க வேண்டிய முறைகள், கவிதைகள் என பல்வேறு சூழலியல் சிறப்பு அம்சங்களையும், கவனத்திற்குரிய முன்னெடுப்புகளையும் திசை எட்டும் கொண்டுள்ளது.

தென் அமெரிக்கக் கண்டத்திலிருந்து 1000 கிலோ மீட்டர் தொலைவில், கிழக்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள கலாபகஸ் தீவுக்கூட்டத்தின் நில அமைப்பு தனித்துவமானது. உலகின் பெரும்பாலான இடங்களில் காண முடியாத கடல்வாழ், நிலவாழ் உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன.இத்தீவுகளின் தனித்தன்மைக்கு கடலும், தட்பவெப்பநிலையும் காரணம். இத்தீவுகளில், மனிதனின் காலடி படாத 16ம் நூற்றாண்டு வரை 2,50,000 கலாபகாஸ் பேராமைகள் சுதந்திரமாக வாழ்ந்திருந்தன. மனிதன் அந்தத் தீவுகளுக்குச் செல்ல ஆரம்பித்து, தங்கள் உணவுத் தேவைகளுக்காக கலாபகாஸ் பேராமைகளை வேட்டையாட ஆரம்பித்த பின், 1974ல் நடத்திய கணக்கெடுப்பில் வெறும் 3000 பேராமைகளே இருந்துள்ளன. கலாபகாஸ் பேராமைகள் அழித்-தொழிக்கப்பட்ட சோக வரலாற்றையும், மிஞ்சியுள்ள ஆமைகளைக் காப்பாற்றுவதற்கு சூழலியலாளர்கள் எடுத்த பெரு முயற்சிகளையும் தேவிகாபுரம் சிவாவின்,‘கலாபகாஸ் தீவு பேராமைகள்’ பேசிச் செல்கிறது. அறிவியலையும் எளிய மக்களுக்குக் கொண்டு செல்வதில் கட்டுரையாளர் வெற்றி பெற்றுள்ளார். அறிவியலை அன்னிய மொழியான ஆங்கிலத்தில் மனப்பாடம் செளிணிது படித்து அச்சப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக மாணவர்கள் மத்தியில் பரப்பப்பட வேண்டிய சிறப்புக்குரிய எழுத்துக்கள்.

சர்வதேச அளவில், மனிதனால் அழிக்கப்பட்டு, அழிவின் விளிம்பில் நின்ற பேராமைகளை, அதே மனிதன் காப்பாற்றியதைப் படித்து முடிக்கும் போதே, தமிழகத்திலும் அதே நிலையில் பாறு என்றழைக்கப்படும் கழுகுகள் இருப்பதை தோழர் பாரதிதாசனின் ‘பாறு (கழுகு) குஞ்சொன்று கண்டோம்’கட்டுரை வெளிச்சமிட்டுக் காட்டியது. அழிவின் விளிம்பிலுள்ள கழுகை (பாறு) காக்க பாரதிதாசனும் அவரது தோழர்களும் எடுத்த முயற்சிகள் நம்பிக்கையின் ஒளிக்கீற்றை மனதில் பரவவிடுகிறது.

உயிரினம் குறிப்பாகப் பறவைகளின் குஞ்சுகள் கூட்டிலிருந்து விழுந்தால் பிழைப்பது அரிதிலும் அரிது. கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தமிழகம் முழுக்க பரவியிருந்த கழுகுகள், இன்று மேற்குத் தொடர்ச்சி மலையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதற்கான காரணத்தையும் பாரதிதாசன் அழகாக விவரிக்கிறார். சில நூறு எண்ணிக்கையிலுள்ள பிணந்தின்னிக் கழுகின் கூட்டிலிருந்து விழுந்த குஞ்சு, மிக மிக முக்கியமானதாக அவதானிக்கப்படுகிறது. சிறியூரில், கூட்டிலிருந்து தவறி வீழ்ந்துவிட்ட பாறு குஞ்சொன்றை மீட்டு, அதற்கு உணவளித்து, அதன் உடல் தேறும் வரை பாதுகாத்து, வெண் பஞ்சு மேகங்களுக்கிடையே பறக்க விட்டதை அழகிய நடையில் கூறியுள்ளார். கட்டுரை முழுவதிலும் பாறுகளின் (கழுகுகளின்) நடத்தையியல் எளிமையாக விவரிக்கப்பட்டுள்ளது. கூட்டிலிருந்து தவறி விழும் குஞ்சுகளை மீட்டால், எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. அக்குஞ் சைக் காக்கப் பாரதிதாசனும், தோழர்களும் எடுத்த முயற்சி தமிழகக் காட்டுயிர் வரலாற்றில் பொன் னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். எளிய எழுத்து நடையும், கலைச்சொற்களை மீட்டெ டுத்தலும் கட்டுரையாசிரியருக்குப் பக்கபலமாக அமைந்துள்ளது. காட்டுயிர், பறவைகளின் மேல் ஈடுபாடுள்ளவர்கள், காலபகாஸ் தீவு பேராமைகளையும், “பாறு (கழுகு) குஞ்சொன்று கண்டோம்” கட்டுரை யையும் வாசிக்க வேண்டும்.

பூச்சிகள் என்றாலே அருவருப்புடன் பார்ப்பது 21ஆம் நூற்றாண்டில்கூட நிகழ்வாக இருக்கும்போது, சார்லஸ் டார்வினின் கடல் பயணத்திற்குச் சற்றேறக் குறைய நூறாண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்மணி பூச்சிகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்தார் என்று கூறினால் நம்ப முடிகிறதா? மரியா சிபெல்லா மேரியான் என்ற பெண்மணிதான் அவர் என்று வரலாறு சுட்டிக் காட்டுகிறது. வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்நிலைகளை, தென்னாப்பிரிக்க காடுகளில் அலைந்து திரிந்து ஓவியமாகத் தீட்டி பொதுவெளிக்கு கொண்டு வரும்போது ஆணாதிக்கச் சிந்தனை கொண்ட அறிவியலுலகம் எள்ளி நகையாடியது. அனைத்து வேதனைகளையும் மனதில் தாங்கிக்கொண்டு, தன் முயற்சியில் மாபெரும் வெற்றியடைந்தார் மரியா. தமிழின் பசுமை இலக்கியத்திற்கு மரியா என்கிற சாதனைப் பெண்மணியை அருண் நெடுஞ்செழியனும், பேராமைகளை, தேவிகாபுரம் சிவாவும் சிறப்பான முறையில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண்மணியாக மரியா இருந்தார் என்றால், வேதியியல் உரங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை அதிபர்களின் ‘மாபெரும் எதிரி’யாக, ரேச்சல் கார்சன், 1960களில் இருந்துள்ளார். அவர் எழுதிய மௌன வசந்தம் (SILENT SPRING)நூல் உலகள வில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு உந்துசக்தியாக உள்ளது. மௌன வசந்தம் வெளிவந்த 50ஆம் ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிற வேளையில், வேதியியல் உரங்களின் தாக்கத்தால் மண்வளம் பாழா வதுடன், பறவைகளின் அழிவிற்கு வித்திடுகிறது என்ற எச்சரிக்கை இன்று வரை தொடரவே செய்கிறது. அத் தாக்கத்தை இன்றளவும் மூன்றாம் உலக நாடுகளிலுள்ள உழைக்கும் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்க வேளாண் காடுகளின் மீது டி.டி.ட்டி (DDT என்பது டை குளோரோடை ஃபினைல் டிரைக் குளோரோ ஈத்தேன் என்ற வேதிப்பொருளின் சுருக்கம்) உள்ளிட்ட நச்சுத்தன்மையுள்ள இரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தெளிப்பதால் அப்பகுதிகளில் வாழும் மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் ஏற்படும் நோய்களையும், பாதிப்புகளையும் ‘மௌன வசந்தம்’ தெளிவாக எடுத்துரைக்கிறது. பூச்சிகளைக் கட்டுப்படுத்த இரசாயனப்பூச்சிக்கொல்லி தெளிப் பான்கள் மட்டுமே தீர்வல்ல என்பதையும் மாற்று முறைகளையும் பேசுகிறது.

வேதியியல் தொழிற்சாலை பிரதிநிதிகளும், கொச்சை சூழல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் இந் நூலைப்பற்றி வறட்டு வாதங்களை ஏற்படுத்தி, இந் நூலைத் தடுக்கப் பெரு முயற்சி எடுத்த நிலையில், ரேச்சல் கார்சன் அமெரிக்கத் தொலைக்காட்சி களிலும், அமெரிக்க செனட் சபையின் துணைக்குழுவின் முன்நின்றும் சூழலியல் மாசுகளுக்கு எதிராக சட்டரீதி யான சீர்த்திருத்தங்களை வலியுறுத்தி வெற்றிபெற்றார். கட்டுரையின் இறுதியில் மௌன வசந்தம் நூலோடு, இந்தியச் சூழலையும் தொடர்புப்படுத்தி அமிதா எழுதி இருப்பதை கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டிய தருணம் இது.

“எங்கே போயின எங்கள் நதிகள்?” கட்டுரையில் நீர் அரசியல் பற்றியும், நீர் மேலாண்மை என்ற பெயரில் நடக்கும் சுரண்டல்களையும் மிகத்தெளிவாக எடுத்து ரைக்கிறார் கோவை சதாசிவம். இக்கட்டுரையின் ஓரிடத்தில், “இந்தியாவில் கேரளா, ஆந்திரா, மகாராஷ் டிரா மாநிலங்களில் உள்ள ஆறுகளில் மணல் எடுக்கத் தடைச்சட்டம் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் காவிரி, தாமிரவருணி, பாலாறு ஆறுகளில் மணல் வரம்புக்கு மீறிய வகையில் வெளிமாநிலத்திற்கு சுமையுந்துகளிலும், வெளிநாடுகளுக்குக் கப்பல்களிலும் கொள்ளை போகிறது” கூறப்பட்டிருக்கும் உண்மை களைப் படிக்கையில் மனம் கொந்தளிக்கிறது.

ஆப்பிரிக்காவின் ஜூலு இன மக்களின் வாய்மொழிக் கதைகள், ரஸ்கின் பாண்டின் சூழலியல் சிறுகதைகள் சிறப்பிதழுக்கு அழகு சேர்ப்பதாக அமைந்துள்ளது.இப் பூவுலகில் உயிரினங்களின் தோற்றமும், பரிணாம வளர்ச்சியும் எவ்வாறு நிகழ்ந்தன என்பதைப் பற்றி “புவியின் சூழலியல்” கட்டுரை சுருக்கமாகப் பேசினாலும், உயிரினங்கள் வசிக்கத் தகுந்த புவி அழிவின் பாதையில் சென்றுகொண்டிருப்பதை எச்சரிக்கையுடன் சுட்டிக் காட்டுகிறது.

சென்னையில் முதலைப் பண்ணையையும் பாம்புப் பண்ணையையும் அமைத்த ரோமுலஸ் விட்டேகரின் நேர்காணல் ஆய்வு மாணவர்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.ஆங்கிலத்தில் வெளியான முக்கிய சுற்றுச்சூழல் நூல்கள் குறித்த அறிமுகமும் சூழலியல் பாதைக்கு பலரை ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழகத்தின் வணிக இதழ்கள், சிற்றிதழ்களுக்கு முன்மாதிரியாக, சிறந்த முன்னெடுப்பாக சூழலியல் சிறப்பிதழை திசை எட்டும் கொண்டு வந்துள்ளது. திசை எட்டும் இதழின் முயற்சி,தமிழக பசுமை இலக்கிய வரலாற்றில் புதிய தடத்தை ஏற்படுத்தும். சூழலியல் பற்றிய அவசியத்தையும் கரிசனத்தையும் தமிழகம் எதிர் கொண்டுள்ள சூழலியல் ஆபத்தையும்நூல் வாசிப்பாள ரிடம் ஏற்படுத்தும். இன்று தமிழகம் சந்திக்கும் சூழலி யல் ஆபத்துக்கள், அடுத்த தலைமுறையைப் பாதிக்கும் என்பதை திசை எட்டும் நூல் வாசிப்பு உறுதி செய்கிறது.

திசை எட்டும் எடுத்துள்ள அரிய முயற்சி பலப்பல புதிய தடங்களுக்கும் புதிய வாசகர்களையும் சென்ற டைவது மட்டுமின்றி, சூழலைக் காக்கும் போராட்டத்தில் புதிய பாதையை ஏற்படுத்தும்.

திசைஎட்டும் இதழ் தொடர்புக்கு: குறிஞ்சிவேலன்,

(ஆசிரியர்), தொலைபேசி: 04142258314, 9443043583.

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It