கடலூர் சிப்காட்டில் நிலத்தடிநீரின் தரம், தமிழ் நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் ஆய்வு, நிலத்தடிநீரின் மாதிரி ஆய்வு முடிவுகள் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பு, அதர் மீடியா மற்றும் சிப்காட் பகுதி சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பின் சார்பாக 17 செப்டம்பர் 2014 அன்று கடலூரில் வெளியிடப்பட்ட அறிக்கை.

பின்னணி:

கடலூரில் உள்ள சிப்காட் நிறுவனங்கள் 1980களின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்டதால், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குப் போதுமான அளவு அல்லது பொருத்தமான உள்கட்டமைப்பு இல்லாமல் இயங்கின. அந்தப் பகுதியின் குடியிருப்புவாசிகள் குறைந்துவரும் தண்ணீர் வரத்து மற்றும் தொடர்ந்து அதிகரித்து வரும் நீரின் தரத்தாழ்வு பற்றி புகார் கூறி வந்தனர். முன்பு வெறும் 30 அடியிலேயே தண்ணீர் கிடைத்து வந்த நிலை மாறி, இப்போது 800 அடி ஆழத்தில் மட்டுமே கிடைக்கிறது. பாதிக்கப்படக்கூடிய கடலோர நீர்வள ஆதாரங்களிலிருந்து தொழிற்சாலைகளுக்காக நிலத்தடிநீர் பெருமளவில் உறிஞ்சப்படுவதால், நிலத்தடிநீர் உப்புத்தன்மை கொண்டதாக மாறும் அபாயம் உள்ளது. இன்னொரு பக்கம், தொழிற்சாலைகளிலிருந்து கண்மூடித்தனமாக வெளியேற்றப்படும் திட மற்றும் திரவக்கழிவுகள் காரணமாக நிலத்தடிநீரில் நச்சுத்தன்மை கலக்கிறது.

இன்றும்கூட சிப்காட் நிறுவனங்கள் தங்கள் திடக் கழிவுகளையும் நச்சுத்தன்மை வாய்ந்த திரவக் கழிவுகளையும் நிறுவனத்திற்குள் உள்ள நிலத்திலோ அல்லது தங்கள் நிறுவன வளாகங்களுக்கு வெளியே உள்ள நிலங்களிலோ கொட்டுவது வாடிக்கையாகவே உள்ளது. பல வருடங்களாகத் தொடரும் இதனால், சிப்காட்டைச் சுற்றியுள்ள கிராமங்களின் நிலத்தடிநீர் மாசடைந்துவிட்டது. இந்தப் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்தப் பகுதி மாசடைந்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து 1998லிருந்து பிரச்சினை எழுப்பப்பட்டது. ஓய்வுபெற்ற நிதிபதி நைனார் சுந்தரம் தலைமையிலான மாநில மனித உரிமை ஆணையம், கடலூர் சிப்காட் பகுதிகளில் சுற்றுச்சூழல் தொடர்பான மனித உரிமைகள் மீறப்படுவது குறித்து இந்தப் பகுதி மக்களின் புகார்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டது. விரிவான ஆய்வுக்குப் பின் நீதிபதி சுந்தரம், தனது அறிக்கையில், கடலூர் சிப்காட் பகுதி மிக அதிகளவில் மாசடைந்துவிட்டது, அந்தப் பகுதி மக்களின் ஆரோக்கியம் மற்றும் உள்ளூர் சுற்றுச்சூழல் நிலவரம் இனிமேலும் புதிதாக தொழிற்சாலை இரசாயனக் கழிவுகளைத் தாக்குப்பிடிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டது என்று தெளிவுபடுத்தியுள்ளர்.

சிப்காட் பகுதி சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பு (SACEM) (எஸ்.ஏ.சி.இ.எம்.) 2004 முதல் இந்தப் பகுதியைத் தொடர்ந்து கண்காணித்து வந்து மோசமடைந்து கொண்டே வரும் நிலத்தடி நீரின் தரத்தைக் குறித்து அதிகாரிகளுக்கு அறிக்கை அளித்து வருகிறது. இந்தப் பகுதி மக்களுக்கு சிப்காட் தொழிற்சாலைகள் தங்கள் செலவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மாசடைந்த நிலத்தடி நீரை சரிசெய்ய மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் (SACEM)) எஸ்.ஏ.சி.இ.எம். அமைப்பு கோருகிறது.

2013 -14ல் நிலத்தடிநீரின் தர நிலவரம்:

எஸ்.ஏ.சி.இ.எம். அமைப்பு தமிழ்நாடு மாசுக்கட்டப்பாடு வாரியத்திற்கு தகவல் அறியும் உரிமையின் பேரில் விவரங்கள் கேட்டு விண்ணப்பித்தது. அதற்கு அவ்வாரியம் கடலூர் சிப்காட பகுதியைச் சுற்றிலும் 2013 பிப்ரவரி முதல் 2014 ஏப்ரல் வரை 11 இடங்களில் நிலத்தடிநீரின் 41 மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுசெய்ததாக பதில் அனுப்பியது. அவ்வறிக்கையின் விவரங்கள்:

மாதிரிகள் எடுக்கப்பட்ட இடங்கள் :

மாதிரிகள் சேகரிக்கப்பட்ட இடங்கள் பெரும் பாலும் ஆழ்துளைக் கிணறு மற்றும் குடிநீர் ஆதாரங்களான மேல்நிலைத் தொட்டிகள்.

11 இடங்களில் 9 இடங்கள், பல்வேறு சிப்காட் தொழிற்சாலை வளாகங்களின் உள்ளே இருப்பவை. அவை:

1. சிப்காட் திட்ட அலுவலகம்

2. டாக்ரோஸ் நிறுவன வளாகத்தின் (ஹெச்.டபிள்யு. ஸ்டோரேஜ் ஷெட் அருகில்) உட்பகுதி.

3. கெம்ப்பிளாஸ்ட் சான்மர் வி.சி.எம். டாங்க் அருகில் ஆழ்துளைக் கிணற்று நீர்.

4. டாக்ரோஸ் நிறுவன வளாகத்தின் (வி.டி.எஃப்.டி. இன்லெட் அருகில்) உட்பகுதி.

5. ஸ்பிக் நிறுவன வளாகத்தின் உட்பகுதி.

6. எஸ்.எல்.எஃப். ஈஸ்ட், கெம்ப்ளாஸ்ட் நிறுவனத்தின் உட்பகுதி.

7. ஹெச்.டபிள்யு. ஸ்டோரேஜ் ஷெட் ஈஸ்ட், கெம்ப்ளாஸ்ட் நிறுவனத்தின் உட்பகுதி.

8. இ.டி.பி. வெஸ்ட், கெம்ப்ளாஸ்ட் நிறுவனத்தின் உட்பகுதி.

9. வி.சி.எம். கிழக்கு ஸ்டோரேஜ் ஷெட் ஈஸ்ட், கெம்ப்ளாஸ்ட் நிறுவனத்தின் உட்பகுதி.

மேற்கூறப்பட்ட இடங்கள் அனைத்தும் சிப்காட் வளாகத்தினுள் உள்ளவை.

தொழிற்சாலைகளுக்கு வெளியே இரண்டு நீர் ஆதார இடங்களிலிருந்து மட்டுமே மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவை:

1. குடிகாடு மேல்நிலைத் தொட்டி. (இதன் நீர் ஆதாரம் குடிகாடு பஞ்சாயத்து எல்லைகளில் உள்ள 110 அடி ஆழ்துளைக் கிணறு).

2. ஜே.கே. ஃபார்மாவின் எதிரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போடப்பட்டிருந்த அடி குழாய். (இது பயன்படுத்தப்பட முடியாத நிலையில் இருந்ததால் 2014ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே உடைத்தெறியப்பட்டு விட்டது.)

மாதிரி முடிவுகள் பகுப்பாய்வு:

சிப்காட் பகுதி சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பு அனைத்து முடிவுகளையும் “இந்திய தர நிர்ணயம் 10500, 1991 ஆர். 1993 முதல் திருத்தத்தின் படி இந்திய தர நிர்ணய அமைப்பு நிர்ணயித்துள்ள (குடிநீர்) தர மாதிரிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தது.

மாதிரிகளின் பகுப்பாய்வின் முடிவுகளிலிருந்து, சிப்காட் தொழிற்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள நிலத்தடி நீர் புற்று நோய் உண்டாக்கக்கூடிய கார்சினோஜென்ஸ் உட்பட பல நச்சுத் தன்மை களால் மிகக் கடுமையாக மாசடைந்துள்ளது. இந்த நீர் குடிப்பதற்கோ மற்ற விஷயங்களுக்கோ மனிதர் களுக்கோ கால்நடைகளுக்காகவோ பயன்படுத்தத் தகுதியில்லை என்பது தெளிவாகியது.

11 மாதிரி இடங்களில் 10 இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாதிரிகளின் சோதனையின் முடிவுகளில் கீழ்கண்டவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விஷயங்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகப் பதிவாகியிருந்தன.

அ) மொத்த கரைந்துள்ள திடப்பொருள்கள் (டி.டி.எஸ்.)

ஆ) மொத்த கடினத்தன்மை

இ) மாக்னீஷியம்

ஈ) கால்ஷியம்

உ) சல்பேட்டுகள்

ஊ) குளோரைடுகள்

எ) பி.ஹெச்

ஏ) கலங்கல்

இது, அந்தப் பகுதியில் தண்ணீர் கடினமாகவும் அதிக உவர்ப்புத்தன்மையாகவும் குடிநீருக்காகப் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய குடிகாடு மேல் நிலைத் தொட்டி மற்றும் ஜே.கே. ஃபார்மா எதிரில் இருக்கும் அடி குழாய் இவ்விரண்டு இடங் களில் இருக்கும் நீர் ஆதாரங்களில் உள்ள நீர், மேல் குறிப்பிட்ட அளவுகோல்களைவிட ஒன்று அல்லது அதற்குமேல் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக அளவில் உள்ளன என்று மாதிரி பகுப்பாய்வுகள் தெரிவித்துள்ளன என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

குடிகாடு கிராமத்திற்கு தண்ணீர் விநியோகிக்கும் குடிநீர் மேல்நிலைத் தொட்டி உட்பட நான்கு இடங் களில் மிக அதிக அளவிலான தகரம் மற்றும் குரோ மியம் மற்றும் பிற ஈயம், இரும்பு போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த கனரக உலோகங்கள் போன்ற கார்சி ஜென்ஸ்கள் உள்ளன என்பதைக் காட்டின. இந்த இடங்கள் பகுப்பாய்வு காலகட்டம் முழுவதும் முறை யான இடைவெளிகளில் கண்காணிக்கப்பட்டு வந்தன.

சிப்காட் திட்ட அலுவலகத்திலிருந்து சேகரிக்கப் பட்ட மாதிரிகளில் காட்மியத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவுகளைவிட 5 முதல் 128 மடங்கு அதிகமாக இருந்தது. குடிகாடு மேல்நிலைத் தொட்டியிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுகளைவிட 3 முதல் 125 மடங்கு அதிகமாக இருந்தது. டாக்ரஸ் நிறுவனம் மற்றும் செம்பிளாஸ்ட் சன்மர் நிறுவன வளாகங் களிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் இந்த அளவு முறையே 3 முதல் 130 மடங்கு மற்றும் 3 முதல் 128 மடங்கும் அதிகமாக இருந்தது.

மொத்த குரோமியத்தின் அளவு சிப்காட் பிராஜக்ட் அலுவலகத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட முதல் 2.5 மடங்கு அதிகமாகவும்; குடிகாடு மேல் நிலைத் தொட்டிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் 1 முதல் 2.4 மடங்கு அதிகமாகவும்; அனுமதிக்கப்பட்ட அளவைவிட டாக்ரஸ் நிறுவனம் மற்றும் செம்பிளாஸ்ட் சன்மர் நிறுவன வளாகங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் இந்த அளவு முறையே 1.3 முதல் 6.6 மடங்கு அதிகமாகவும் 1.86 முதல் 1.88 மடங்கு அதிகமாகவும் இருந்தன.

ஈயம் அளவு சிப்காட் பிராஜக்ட் அலுவலகம், டாக்ரஸ் நிறுவனம் மற்றும் செம்பிளாஸ்ட் சன்மர் நிறுவன வளாகங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட முதல் 2.5 மடங்கு அதிகமாகவும் இருந்தது.

மாதிரிகளில் கண்டறியப்பட்ட சில ரசாயனங்களால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள்:

காட்மியம்: காட்மியத்தை கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் நமது உடல் சேமித்து வைக்கிறது. இவை மெல்ல மெல்ல நம் சிறுநீர் வழியாக வெளி யேற்றப்படுகின்றன. காட்மியம் அதிக அளவில் உள்ள உணவு அல்லது பானங்கள் அருந்துவதால் அடிவயிற்று வலி, மயக்கம், வாந்தி மற்றும் குடல் ரத்தக் கசிவு ஏற்படும். குறைந்த அளவில் பல ஆண்டுகள் சேரும் காட்மியம் சிறுநீரகங்கள், எலும்புகள், நுரையீரல்கள், குடல் மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றைப் பாதித்து பல்வேறு வகையான புற்றுநோயை உண்டாக்கக்கூடும். பல வருடங்கள் குறைவான அளவு காட்மியம் சேர்வதால், எலும்புகள் சுலபமாக முறியும்’ வகையில் பலவீனமாக மாறிவிடும்.

குரோமியம்: நச்சுத் தன்மை கொண்ட பொருள்கள் மற்றும் நோய் பதிவக மையத்தின் (ஏ.டி.எஸ்.டி.ஆர்) பதிவேடுகளின்படி, “குரோமியம் (VI) சேர்மங்களை உட்கொள்வதால் விலங்குகளிடையே காணப்படும் மிக முக்கிய சுகாதாரப் பிரச்சினைகள், வயிறு மற்றும் சிறுகுடல் பகுதிகளில் பாதிப்பு ஏற்படுகின்றன (எரிச்சல் மற்றும் அல்சர்) மற்றும் ரத்த சோகை (அனிமியா) ஏற்படுகின்றன. குரோமியம் (மிமிமி) சேர்மங்கள் இதைவிட குறைவான நச்சுத் தன்மை கொண்டவை என்பதால், இந்தப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதில்லை.”

ஈயம்: ஈயம், உடலின் சிறுநீரகங்களையும் மத்திய நரம்பு மண்டலங்களையும் பாதிக்கும். ஈயம் அடிக்கடிபடும் இடத்திற்கு அருகே உள்ள குழந்தைகளின் உடல் வளர்ச்சியும் மன வளர்ச்சி விகிதமும் மெதுவாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. ஈயம் குழந்தையின் அறிவுக்கூர்மையைப் பாதிப்பதோடு அதன் நடத்தை மாற்றங்களைவும் தூண்டுகிறது. ஆறு வயதும் அதற்கு உட்பட்டதுமான வயதுடைய குழந்தைகளுக்கு இதனால் மிக அதிகமான ஆபத்து ஏற்படும். அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் ஆய்வு அறிக்கையின்படி, “கர்ப்பமான பெண்களும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க ஈயத்திற்கு அருகே இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.”

விவாதம்: தண்ணீர் பெறுவது ஒருவரின் அடிப்படை உரிமை. இந்திய சட்டமும் தலைமுறைகளுக்கு இடையேயான சமத்துவத்தை அங்கீகரித்து குறிப்பாக, இயற்கை வளங்கள் குறித்து முடிவெடுத்தல் போன்ற விஷயங்களில் நிர்வாகக் கொள்கையாகப் பின்பற்றுகிறது. தலைமுறைகளுக்கு இடையேயான சமத்துவம்: மனிதர்கள், ‘பூமியின் இயற்கை மற்றும் கலாசார சுற்றுச்சூழலை வாழ்ந்துகொண்டிருக்கும் சக மனிதர்களுடனும் கடந்தகால, எதிர்கால தலைமுறையினருடனும் சமஅளவு பகிர்ந்துகொள்கிறார்கள்’ என ஒரு கருத்துரு உள்ளது. அதாவது, நாம் கடந்த தலைமுறையினரிடமிருந்து இந்த பூமியை மரபுரிமை யாகப் பெற்று, அதை நமது எதிர்கால சந்ததியினருக்கு முடிந்தளவு நல்ல நிலையில் விட்டுச்செல்ல வேண் டிய கடமையில் உள்ளோம் என்பதே.

சிப்காட் தொழிற்சாலை வளாகத்தைச் சுற்றிலும் நீர் மாசடைந்திருப்பதும், உப்பு நீர் ஊடுருவி இருப்பதும் இருபது ஆண்டுகளுக்கும் முன்பே வெளிவந்து, ஏஷியன் டெவலப்மன்ட் வங்கி மற்றும் என்.இ.இ.ஆர்.ஐ.( (NEERI) போன்ற நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்கள் இதை உண்மை என ஒப்புக் கொண்டிருந்தாலும், மாசுக் கட்டுப்பாட்டுக்கான, உப்புநீர் ஊடுருவலைத் தடுப்பதற்கான அல்லது அந்தப் பகுதியின் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு நிரந்தரமான மாற்று நீர் ஆதாரங்கள் ஏற்பாடு செய்வது போன்ற எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

உப்பு நீர் ஊடுருவல்:

இந்தப் பகுதியில் உப்பு நீர் ஊடுருவல் உள்ளது என ஏசியன் டெவலப்மன்ட் வங்கி 1994 ஆரம்பத்திலேயே எச்சரித்துள்ளது. “இந்தப் பகுதி தொழிற்சாலைகள் அவற்றின் தண்ணீர் தேவைக்காக முழுக்க முழுக்க நிலத்தடி நீரையே நம்பியுள்ளன. கடலூர் மாவட்டத்தின் நிலத்தடிநீர்மட்டம் கடலோரப்பகுதிகளுக்கு வெகு அருகில் இருப்பதால், நிலத்தடிநீர் அதிகமாக எடுக்கப்பட்டு, பிற நீர் ஆதாரங்களிலிருந்தும் போதுமான அளவு தண்ணீர் நிரப்பப்படாமல் இருக்கும் சூழலில், கடல்நீர், நிலத்தடி நீரில் ஊடுருவும் அபாயம் உள்ளது. இதனால் நிலத்தடிநீரின் தரம் குறைந்துவிடும். தற்போதை புள்ளிவிவரங்கள், கடலூர் கடலோரப் பகுதிகளில் ஏற்கெனவே உப்புநீர் ஊடுருவி விட்டதைக் காட்டுகின்றன.”

இந்தப் பகுதியில் கை பம்புகள், ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்காக செலவிடப்பட்ட எல்லா முதலீடுகளும் வீணாகிவிட்டன. சங்கொலிக் குப்பம் என்ற கிராமத்தில் உள்ள கைபம்புகளிலிருந்து உப்பு நீர் வருவதால் ஏறக்குறைய 300 பம்புகள் பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன.

உப்பு நீர் ஊடுருவலுக்கான சான்றுகள் வெளிப்படையாகவே காணப்பட்டாலும், தமிழக அரசு கடலூர்நாகப்பட்டினம் பகுதிகளில் அதிக நீர்த் தேவையுள்ள தொழிற்சாலைகள் மற்றும் வாட்டர்டேபிள் (நீரின் மேல்மட்ட அழுத்தம் வளிமண்டல அழுத்தத்துக்கு சமமாக உள்ள மேற்பரப்பு) மேற்பாகத்தை சிதைக்கும் கட்டுமானங்களுக்கு ஊக்கமளிக்கிறது. நாகார்ஜுனா சுத்திகரிப்பு ஆலை, (SIMA) எஸ்.ஐ.எம்.ஏ. (தென்னிந்திய ஆலைகள் சங்கம்) டெக்ஸ்டைல் பார்க் மற்றும் ஐ.எல். & எஃப்.எஸ். மற்றும் எஸ்.ஆர்.எம். நிலக்கரி அனல் மின் நிலையங்கள் ஆகியவை இங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள சில தொழிற்சாலைகளுள் அடங்கும்.

ரசாயன மாசு:

நீரின் தரம் குறித்த புகார்கள் பொதுவாக அதன் நிறம், மணம் மற்றும் சுவை தொடர்பாகவே அமையும். தண்ணீர் நிறம் மாறுபட்டிருப்பதாக (மஞ்சள் அல்லது அடர் சிவப்பு) குடியிருப்பவர்கள் புகார் அளிக்கிறார்கள், காலப்போக்கில் சூரிய ஒளி படுவதால், நிலத்தடி நீரில் நாற்றமடிக்கும் (கழிவு நீர், உலோகம் அல்லது வாசனை பொருட்கள்), பொருள்களின் எண்ணெய்ப் படலம் கலப்பதால் நீரின் நிறம், மணம் மாறும். இவை அனைத்துமே அந்த நீரில் ரசாயனம் கலந்திருப்பதையே சுட்டிக் காட்டுகின்றன.

தண்ணீர் வழங்கிவந்த நீர்ஆதாரங்கள் குறிப்பிடத்தக்க அளவு மாசடைந்து குடிநீராகப் பயன்படுத்த முடியாமல் போய்விட்டதால் கிராம மக்கள் அவற்றைப் பயன்படுத்துவதில்லை. ஆனால், இப்படிப்பட்ட பல நீர் ஆதாரங்களை மக்கள் குளிப்பதற்கு, துணி துவைப்பதற்கு அல்லது பிற வீட்டு உபயோகங்களுக்கும் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இலக்காகும் நிலையில் உள்ளனர். குடியிருப்புவாசிகளுக்கு&குறிப்பாக குழந்தைகளுக்கு &தோல் வியாதிகள் மற்றும் தொடர்ச்சியான அரிப்பு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அடிப்படை சுகாரத்தை பராமரித்துக்கொள்ளத் தேவையான அளவுகூட நீர் விநியோகம் இல்லை என்பதால், இந்தப் பகுதி மக்களின் சுகாதார நிலவரம் அதள பாதாளத்தில் உள்ளது.

காட்மியம், குரோமியம் மற்றும் ஈயம் போன்ற கனரக உலோகங்கள் இந்தப் பகுதி நிலத்தடி நீரிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் காணப்படுவதால் இந்த நிலத்தடி நீரில் இரசாயன மாசு உள்ளது என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.

ஒழுங்குமுறை அமைப்புகளின் பங்கு:

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் தொழிற் சாலைகளைக் கட்டுப்படுத்தி, சுற்றுச்சூழலையும் பொதுமக்களின் சுகாதாரத்தையும் பாதுகாக்கும் தனது கடமைகளை செய்யத் தவறிவிட்டது. அந்தப் பகுதி நீரில் மிக அதிக அளவிலான புற்றுநோய் உண்டாக்கும் கார்சினோஜென்கள் இருப்பதைக் குறித்த புள்ளி விவரங்கள் வாரியத்திடம் இருந்தாலும் அதைப் பொதுமக்களுக்கு அறிவுறுத்த எந்த முனைப்பையும் மேற்கொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.

மாதிரிகள் சேகரிக்கப்பட்ட 11 இடங்களில் ஓர் இடமான குடிகாடு மேல்நிலைத் தொட்டியிலிருந்து தற்போதும் அங்குள்ள குடியிருப்புவாசிகள் வீடுகளை சுத்தம் செய்யவும், துவைப்பதற்காகவும் அந்த நீரைப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நீர் மிக அதிக அளவிலான காட்மியம், குரோமியம், இரும்பு மற்றும் குளோரின் படலம் படிந்துள்ளன நீர் என்று ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. குரோமியம் மற்றும் காட்மியம் போன்ற ரசாயனங் களை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தோல் உள் வாங்கிக்கொள்ளும் என்பது அனைவரும் நன்றாக அறிந்த உண்மை. இருந்தாலும் இந்த நீரைப் பயன்படுத்த வேண்டாம் என்று அந்தப் பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்படவில்லை. உண்மைகளை அறிந்திருந்தும் அதற்காக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிந்தே அந்தப் பகுதி மக்களை நச்சுத் தன்மைகொண்ட நீரைப் பயன்படுத்துவதை அனுமதித்து வருகிறது.

கோரிக்கைகள் :

சிப்காட் பகுதி சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பு, கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசிடம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது:

1. கடலூர் பகுதி மக்களை நச்சுத்தன்மை கொண்ட தண்ணீரைப் பயன்படுத்த அனுமதித்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அதிகாரிகள் மீது உடனடியாக வழக்குத் தொடர வேண்டும்.

2. உடனடியாக உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி சிப்காட் பகுதி மக்களுக்கு சுத்தமான குழாய் நீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

3. தொழிற்சாலைக் கழிவுகள் (சுத்திகரிக்கப்பட்ட அல்லது சுத்திகரிக்கப்படாத) தொழிற்சாலை வளாகங்களுக்கு உட்புறமோ அல்லது வெளிப்புறமோ வெளியேற்றப்படுவது தடைசெய்தல்.

4. தொழிற்சாலைகள் நிலத்தடிநீரை உறிஞ்சி எடுப்பதைத் தடைசெய்தல் மற்றும் சட்ட விரோதமாக நிலத்தடிநீரை உறிஞ்சும் தொழிற்சாலைகளை மூடுதல்.

5. சிப்காட் பகுதியில் மாசு உண்டாக்கும் அல்லது அதிகமாக தண்ணீர் தேவைப்படும் தொழிற்சாலைகளை அமைப்பதற்குத் தடை விதித்தல்.

6. தொழிற்சாலைகள் கழிவுநீரை மறுசுழற்சி செய்தலை கட்டாயமாக்குதல்; தற்போதை நீர் தேவைகளை மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் மூலமாக பூர்த்திசெய்தல்.

7. நிலத்தடி நீருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும், அதற்கான காரணங்களையும் மாசு மற்றும் உப்பு நீர் ஊடுருவல் மூலமாக மதிப்பிடுதல்.

8. நிலத்தடி நீரை மாசுபடுத்தியவர்களின் செலவிலேயே சரிசெய்தல் வேண்டும்.

பல்வேறு மாதிரிகளில் விதிமீறல்களைப் பற்றிய ஒரு கண்ணோட்டம் :

1.சிப்காட் திட்ட அலுவலகத்திலிருந்து சேகரிக்கப்பட்ட நிலத்தடி நீர்:

2013 -14ல்எடுக்கப்பட்டமொத்தமாதிரிகள் 9 அனுமதிக்கப்பட்டதைவிட அதிகஅளவு
டி.டி.எஸ். 7/9 வரையரையைவிட அதிகம்
1.152&-2.396
மொத்தகடினத்தன்மை 7/9 வரையரையைவிட அதிகம்
1.3-&8.25
மாக்னீஷியம் 5/9 வரையரையைவிட அதிகம்
1.05&6.88
கால்ஷியம் 5/9 வரையரையைவிட அதிகம்
1.04 &- 4.28
குளோரைடுகள் 2/9 வரையரையைவிட அதிகம்
1.28 -& 5.18
மொத்தஇரும்பு 3/9 வரையரையைவிட அதிகம்
2.39 -& 2.97
எஞ்சியிருக்கும்குளோரின் 1/9 வரையரையைவிட அதிகம்
22.15
ஈயம் 1/9 வரையரையைவிட அதிகம்
1.1
காட்மியம் 7/9 வரையரையைவிட அதிகம்
5.33 -& 128.6
மொத்தகுரோமியம் 2/9 வரையரையைவிட அதிகம்
1.12 &- 2.56
 கலங்கிய தன்மை 3/9 வரையரையைவிட அதிகம் 2

 

 

2. குடிகாடுமேல்நிலைத்தொட்டியிலிருந்துஎடுக்கப்பட்டசாம்பிள்முடிவுகள்:

2013 - 14ல்எடுக்கப்பட்டமொத்தமாதிரிகள்

8 அனுமதிக்கப்பட்டதைவிடஅதிகஅளவு
டி.டி.எஸ் 3/8 வரையரையைவிடஅதிகம்

1.008 - 1.768

மொத்தகடினத்தன்மை 5/8 வரையரையைவிடஅதிகம்

1.5 - 6.55

மாக்னீஷியம் 1/8 வரையரையைவிடஅதிகம்

1.45

கால்ஷியம் 4/8 வரையரையைவிடஅதிகம் 1.01 - 6.41
சல்ஃபேட் 1/8 வரையரையைவிடஅதிகம் 1.53
மொத்தஇரும்பு 2/8 வரையரையைவிடஅதிகம்

1.78 - 2.68

எஞ்சியிருக்கும்குளோரின்

1/8 வரையரையைவிடஅதிகம்

4.45

காட்மியம் 6/8 வரையரையைவிடஅதிகம்

3.66 - 125.66

மொத்தகுரோமியம் 3/8 வரையரையைவிடஅதிகம்

1.04 - 2.44

கலங்கியதன்மை 5/8 வரையரையைவிடஅதிகம் 2

3. டாக்ரோஸ்நிறுவனவளாகத்தின் (ஹெச்.டபிள்யு. ஸ்டோரேஜ்ஷெட்அருகில்) உட்பகுதியில்சேகரிக்கப்பட்டநிலத்தடிநீர்சாம்பிள்முடிவுகள்:

2013 - 14ல்எடுக்கப்பட்டமொத்தமாதிரிகள்

7

அனுமதிக்கப்பட்டதைவிடஅதிகஅளவு

பி.ஹெச் 3/7 வரையரையைவிடஅதிகம்

நீரின்அமிலத்தன்மையைக்காட்டுதல்

டி.டி.எஸ் 5/7 வரையரையைவிடஅதிகம் 1.512 - 4.806
மொத்தகடினத்தன்மை 4/7 வரையரையைவிடஅதிகம்

1.05 - 6.75

மாக்னீஷியம் 2/7 வரையரையைவிடஅதிகம்

1.26 - 1.63

கால்ஷியம் 3/7 வரையரையைவிடஅதிகம்

1.22 - 7.05

மொத்தஇரும்பு 1/7 வரையரையைவிடஅதிகம்

40

ஈயம் 1/7 வரையரையைவிடஅதிகம்

1.2

காட்மியம் 6/7 வரையரையைவிடஅதிகம்

3 - 1.30

மொத்தகுரோமியம் 3/7 வரையரையைவிடஅதிகம்

1.3 - 6.64

கலங்கியதன்மை 3/7 வரையரையைவிடஅதிகம் 2

4.வி.சி.எம்.டாங்க் அருகில் உள்ளடாக்ரோஸ் நிறுவனம் மற்றும் கெம்பிளாஸ்ட் சன்மர் நிறுவன ஆழ்துளைக் கிணற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட சாம்பிள் முடிவுகள்:

2013-14 ல் எடுக்கப்பட்ட மொத்த மாதிரிகள்

10

அனுமதிக்கப்பட்டதை

விட அதிக அளவு

பி.ஹெச்

1/10 வரையரையைவிடஅதிகம்

நீரின் அமிலத் தன்மையைக் காட்டுதல்

டி.டி.எஸ் 4/10 வரையரையைவிடஅதிகம்

1.008- 3.168

மொத்தகடினத்தன்மை 8/10 வரையரையைவிடஅதிகம்

1.06-7.76

மாக்னீஷியம் 7/10 வரையரையைவிடஅதிகம்

1.03-6.73

கால்ஷியம் 2/10 வரையரையைவிடஅதிகம்

2.4-3.84

குளோரைட் 2/10 வரையரையைவிடஅதிகம்

1.05-2.12

மொத்தஇரும்பு 1/10 வரையரையைவிடஅதிகம்

2.05

ஈயம் 1/10 வரையரையைவிடஅதிகம்

2.4

காட்மியம் 6/10 வரையரையைவிடஅதிகம்

3128

மொத்தகுரோமியம் 2/10 வரையரையைவிடஅதிகம்

1.86-1.88

கலங்கியதன்மை 3/8 வரையரையைவிடஅதிகம்

2

5. டாக்ரோஸ்நிறுவனவளாகத்தின் (வி.டி.எஃப்.டி. இன்லெட்அருகில்) உட்பகுதியில்சேகரிக்கப்பட்டநிலத்தடிநீர்சாம்பிள்முடிவுகள்:

2013 - 14ல்எடுக்கப்பட்டமொத்தமாதிரிகள்

1

 

அனுமதிக்கப்பட்டதைவிடஅதிகதடவை

பி.ஹெச்

நீரின்அமிலத்தன்மையைக்காட்டுதல்

டி.டி.எஸ்

966.4

மொத்தகடினத்தன்மை

8.95

மாக்னீஷியம்

8.95

கால்ஷியம்

4.38

குளோரைட்

331.6

சல்ஃபேட்

192.1

ஃப்ளோரைட்

1.1

6. ஸ்பிக்நிறுவனவளாகத்தில்உட்பகுதியில்நிலத்தடிநீர்மாதிரிசேகரிக்கப்பட்டசாம்பிள்முடிவுகள்:

2013 - 14ல்எடுக்கப்பட்டமொத்தமாதிரிகள்

1

 

அனுமதிக்கப்பட்டதை விட அதிகதடவை

டி.டி.எஸ்

1.45

 

 

7. ஜே.கேஃபார்மாஎதிரில்எடுக்கப்பட்டசாம்பிள்முடிவுகள்:

2013 - 14ல்எடுக்கப்பட்டமொத்தமாதிரிகள்

1

 

அனுமதிக்கப்பட்டதை

விடஅதிகதடவை

பி.ஹெச்

நீரின்அமிலத்தன்மையைக்காட்டுதல்
டி.டி.எஸ்

2.184

மொத்தகடினத்தன்மை

3.17

மாக்னீஷியம்

2.43

கால்ஷியம்

1.77

குளோரைட்

1.18

சல்ஃபேட்

2.2

மொத்தஇரும்பு

17.76

   

8. கிழக்குஎஸ்.எல்.எஃப். கெம்ப்ளாஸ்ட்உட்பகுதியில்எடுக்கப்பட்டசாம்பிள்முடிவுகள் : 

2013 - 14ல்எடுக்கப்பட்டமொத்தமாதிரிகள்

1

 

அனுமதிக்கப்பட்டதை

விடஅதிகதடவை

பி.ஹெச்

நீரின்அமிலத்தன்மையைக்காட்டுதல்

டி.டி.எஸ்

1.392

மொத்தகடினத்தன்மை

1.81

மாக்னீஷியம்

1.56

ஈயம்

1.2

 

9. கிழக்குஸ்டோரேஜ்ஷெட்ஈஸ்ட், கெம்ப்ளாஸ்ட்உட்பகுதியில்எடுக்கப்பட்டசாம்பிள்முடிவுகள் :

2013 - 14ல்எடுக்கப்பட்டமொத்தமாதிரிகள்

1

 

அனுமதிக்கப்பட்டதைவிட

அதிகதடவை

பி.ஹெச்

நீரின்அமிலத்தன்மையைக்காட்டுதல்

டி.டி.எஸ் 1.056
மொத்தகடினத்தன்மை

1.68

கால்ஷியம்

1.32

ஈயம்

1.2

 

10. இ.டி.பி. கெம்பிளாஸ்ட்மேற்கில்எடுக்கப்பட்டசாம்பிள்முடிவுகள் :

2013 - 14ல்எடுக்கப்பட்டமொத்தமாதிரிகள்

1

 

அனுமதிக்கப்பட்டதை

விடஅதிகதடவை

டி.டி.எஸ் 1.12
ஈயம்

1.1

Pin It