உதிரக்கொடை (இரத்த தானம்)

ஒருவர் உடம்பில் ஓடும் சுமார் 5 லிட்டர் (5000 மில்லி லிட்டர்) இரத்தத்தில் இருந்து சுமார் 350 மிலி பெறப்படுவது இரத்த தானம்.

எத்தனை முறை வேண்டுமானாலும் அளிக்கலாம்.

சில நாட்களில் இரத்தம் மீண்டும் ஊறி விடும்.

தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்கவேண்டும் என்பது அவசியம்.

பலன் : பிணியாளருக்கு ஒவ்வொரு முறையும் ஒரு உயிரை காக்கலாம்.

கண் கொடை (கண் தானம்)

ஒருவர் இறந்த பின் அவரது கண்கள் எடுக்கப்படும்.

இயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்.

மூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்.

கண்கள் எடுக்கப்பட்ட பின் பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்.

எடுக்கப்பட்ட கண்களின் விழித்திரை அடுத்த நபருக்கு பொருத்தப்படும்.

தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

பலன் : விழித்திரை நோயால் பார்வையிழந்த இரு நபர்களுக்கு

எலும்பு கொடை (எலும்பு தானம்)

ஒருவர் இறந்த பின்னரே அவரது எலும்புகள் எடுக்கப்படும்.

இயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்.

மூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்.

பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்.

எலும்பு வங்கி இருக்கும் ஊர்களிலேயே இது கடைபிடிக்கப்படுகிறது.

தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்கவேண்டும் என்பது அவசியம்.

இது தவிர இருவரின் HLA க்களும் முரணாக இருக்கக்கூடாது.

பலன் : பல பிணியாளர்களுக்கு

உறுப்புக்கொடை (உறுப்பு தானம்)

மூளை சாவு என்றால் மட்டுமே எடுக்கப்படும்.

சிறுநீரகங்கள், ஈரல், இதயம், நுரையீரல், தோல் உட்பட பல உறுப்புகள் எடுக்கப்படும்.

பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்.

தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்கவேண்டும் என்பது அவசியம்.

இது தவிர இருவரின் ஏகஅ க்களும் முரணாக இருக்கக்கூடாது.

பலன் : பல பிணியாளர்களுக்கு

உடல்கொடை (உடல் தானம்)

இயற்கை மரணம் என்றால் மட்டுமே பெறப்படும்.

உடல் உறவினர்களிடம் அளிக்கப்படாது.

உடல் உடற்கூறியல் பிரிவில் வைக்கப்படும். முதல் வருட மாணவர்கள் உடற்கூறியல் குறித்து படித்து அறிவதற்காக உடல் பயன்படும்.

அவ்வாறு தானம் அளிக்கப்பட்ட உடலிருந்து கண்களும், எலும்புகளும் எடுக்கப்படலாம். இவை பிணியாளர்களுக்கு பயன்படும்.

பலன் : கண்களால் இருவருக்கு, எலும்புகளால் பல பிணியாளர்களுக்கு மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு.

Comments

2 comments

2
[email protected]
நல்ல செய்தி... எலும்பையும் கொடுக்க முடியும் என்று அறிந்து கொண்டோம்... நன்றி!
UMA
Good News , After the death we can help other who are in suffer . After reading this I also decide to donate my entire body to others !!!!!!!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.