மண்போர்த்திய உடலெங்கும்
பாளபாளமாய்
வெடித்துக் கிடக்கிறது பசி
பசியின் நாவில் மிஞ்சுகிறது
உயிரின் சுவை
இமைகளைத் தைத்த வறுமையின்
ஊசிமுனையில் சுழல்கிறது
வாழ்வதற்கான நம்பிக்கை
வற்றிய அடிவயிற்றில்
கைவைத்து நிரப்பிக் கொள்கிறது
பசித்த மானிடம்
நிலங்களைப் பறித்து
உணவினை அபகரித்து
வறுமையை விளைத்துச் சென்றவன்கள்
எவன்கள்?
காற்றை மெல்கின்றன
நரநரவென பற்கள்
கயவன்களின் நினைப்பில்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- சங்கிகள் பரப்பும் புனித கும்பமேளா கொரோனா
- அவை தற்செயலானவை அல்ல!
- அரக்கோணம் படுகொலைகள்
- நினைவு கூர்வோம் - ஏப்ரல் 14
- மலாய் நாட்டு வக்கீல்களின் ‘தேசியம்’
- ஐயா ஆனைமுத்து மறைந்தார்
- கர்ணன் எனும் தீப்பந்தம்
- பேரிருளின் புதுச்சுடர்கள் - நூல் விமர்சனம்
- அய்யா வே.ஆனைமுத்து அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல்
- காத்திருப்பு
- விவரங்கள்
- யாழன் ஆதி
- பிரிவு: தலித் முரசு - ஜூலை 2005
யாழன் ஆதி கவிதை
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.