கோவில் நுழை
தேரிழு
உங்கள் கோவில்
உங்கள் தேர்
ஏன் நாங்கள் நுழைய வேண்டும்
ஏன் நாங்கள் இழுக்க வேண்டும்
உங்களை வணங்குதலுக்கும்
உங்களின் சாமியை
வணங்குதலுக்கும்
வித்தியாசமில்லை
உங்களை சுமப்பதற்கும்
உங்களின் தேரை இழுப்பதற்கும்
வித்தியாசமில்லை
ஆனால் ஒன்றே ஒன்றுதான்
உங்கள் கோவிலும் தேரும்
நிற்பது எம்மண்ணில்
அதை அகற்றத் தேவைப்படுகிறது
கோவில் நுழைவும், தேரிழுப்பும்
Pin It