* பாபா ராம்தேவ், பாபா ரவிசங்கர் - மோடி அரசின் பத்மபூஷன் விருதுகளை ஏற்க மறுப்பு.            - செய்தி

                அதுக்காக, மனசு உடைஞ்சுடாதீங்க. நித்யானந்தா, ஜெயேந்திரரை கேட்டுப் பாருங்க. அவுங்க மறுக்க மாட்டாங்க.

* காந்தியின் கொள்கைகள் இந்தியாவில் இன்னும் உயிரோட்டத்துடன் உள்ளது.  - காந்தி சமாதியில் ஒபாமா

                இது எங்களுக்கே தெரியல்லீங்களே... ஒரு வேளை அமெரிக்க புலனாய்வுத் துறை கண்டுபிடிச்சு சொல்லியிருக்கும்போல!

* நானும் என் கணவரும் இலண்டனில் படித்தோம். எனது மகளை அமெரிக்கா வில் படிக்க வைக்கப் போகிறேன்.        - தொழில் துறை அமைச்சர் நிர்மலா

                ஆக, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை தீவிரமா செயல்படுத்த தொடங்கிட்டீங்க...

* ஓசூரில் விசுவ இந்து பரிஷத் மாநாட்டுக்கு காஞ்சி ஜெயேந்திரன் தலைமை தாங்கினார்.          - செய்தி

                சரியான தேர்வு. சிறையிலிருந்து தனது ‘பூத உடலை’ விடுதலை செய்து கொண்டவர்; ‘ஆன்ம’ விடுதலைக்கு வழி காட்ட மாட்டாரா, என்ன?

* திருமணமாகாத நூறுக்கும் மேற்பட்ட எரிக்கப்படாத இளம் பெண்கள் சடலம் கங்கையில் மிதந்தது. உ.பி. அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்கிறது.- செய்தி

                கங்கையை தூய்மைப்படுத்த வேண்டுமானால், முதலில் கங்கையில் வீசும் சடலம் ‘மோட்சம்’ போகும் என்ற ‘அழுக்கு’ சிந்தனையை தூய்மைப்படுத்தி யாகனுங்க!

* ஓட்டுக்குப் பணம் கொடுப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: பணி ஓய்வு பெற்ற தேர்தல் ஆணையர் சம்பத் பேட்டி.               - செய்தி

                இந்த உண்மையை சொல்வதற்கு, பணி ஓய்வு பெறும் வரை காத்திருந்தீங்களா, அய்யா?

Pin It