மோடியின் இந்து சார்பு அரசாங்கம் 2014 ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியாவில் மத அடிப்படையிலான வெறுப்பு-குற்ற வழக்குகளின் அறிக்கைகள் அதிகரித்துள்ளன என்று ஆங்கில மொழி ஊடகங்களில் வன்முறை அறிக்கைகளைக் கண்காணிக்கும் நிறுவனம் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் முஸ்லிம்கள். பயங்கரவாதிகள் பெரும்பாலும் இந்துக்கள்.
 
இந்துத்வ பயங்கரவாதிகள் முஸ்லிம்களை அடித்துக்கொல்லும் அந்தக் குற்றங்களை மத வெறுப்பு குற்றங்களாக இந்திர அரசு சேர்க்காமல் சரியான தகவல்களை உலக ஊடகங்களுக்கு கொடுப்பதில்லை. அரசாங்கள் அதுபோன்ற குற்றங்களை மௌனமாக கண்காணிக்கிறது.
 
மாடுகளை புனிதமாக கருதும் போலி இந்து தீவிரவாதிகள் மாடுகளின் பெயரால் அடித்துக் கொல்வதில் இருந்து பாதுகாக்கப்படுகின்றார்கள் பசுப் பாசுகாவலர்கள் என்கிற குழுவின் போர்வையில். 
 
இதனை தண்டிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி போலியாக அறிக்கை விட்டிருந்தாலும் அவரது கட்சி ஆளும் ஜார்கண்ட் உத்திரப்பிரதேசம் பீகார் போன்ற மாநிலங்கள் அவரது அறிக்கைக்குப் பிறகுதான் அடித்துக்கொல்வதை அதிகப்படுத்தியிருக்கின்றன சென்ற வருடம் அக்டோபரில்.  ஆக தண்டிக்க வேண்டும் என்று மோடி கண்டிப்பத அடித்துக் கொல்லுங்கள் நாங்கள் பாதுகாக்கிறேர் என்பதற்கான சமிக்ஞை.
 
பாஜக செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி கூறுகையில்இஅரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது இதுவெல்லாம் சிறிய சம்பவங்கள்தான் பெரிய அளவில் மதக்கலவரங்கள் எதுவுமில்லை இதையெல்லாம் கண்டுகொள்ளக் கூடாது என்று குறிப்பிட்டிருப்பது இதனை மேலும் உறுதி செய்கிறது. இந்த அரசு இஸ்லாமியர்களின் வெறுப்பு அரசுதான் என்பதை பாஜக ஆட்சியாளர்கள்களின் பேட்டிகளிலிருந்து உணர்ந்து கொள்ளலாம். 
 
நிச்சயமாக இது அவசரப்பட்டோ இல்லை உணர்ச்சி வேகத்திலோ கொல்லப்பட்ட படுகொலைகள் அல்ல. முஸ்லிம்கள் வருகின்ற வழியை கண்காணித்து திட்டமிட்டு நடக்கும் படுகொலைகள். 
 
ansari killed by hindutwaஅன்சாரியின் படுகொலை
 
அந்த பசு தீவிரவாதிகள் ஒரு வாரத்திற்கும் மேலாக அன்சாரியைக் கண்காணித்து வந்தனர். ஜூன் 29இ 2017 அதிகாலையில்இ  பசு தீவிரவாதிகளுக்கு தகவல் கொடுத்து கண்காணித்து வந்த ஒரு டீக்கடை  உரிமையாளர்இ அன்சாரி மாட்டிறைச்சியுடன் வெள்ளை நிற வேனில் சந்தைக்குச் சென்றார் என்று அந்த பசு தீவிரவாதிகளுக்கு தகவல் கொடுத்தார். வழக்கில் கொடுக்கப்பட்ட தகவலின் படி இ தீபக் மிஸ்ரா என்கிற பிராமணச் சாமியார்  இந்துத்வ பயங்கரவாதிகளின் வாட்ஸப் குழுவுக்கு தகவல் கொடுத்து அனைவரையும் அழைத்திருக்கின்றார். 
 
அந்த பயங்கரவாதிகள் மோட்டார் சைக்கிளில் அந்த வேனை பின்தொடர்ந்து சென்று அன்சாரியை நிறுத்தி அவரை ஓட்டுனர் இருக்கையிலிருந்து இழுத்துச் சென்று மூங்கில் குச்சிகள் மற்றும் பைபர் கம்பிகளால் அடிக்க ஆரம்பித்துள்ளார்கள். 
 
நான் அவரை என் கைமுட்டிகளால் தாக்கி உதைக்க ஆரம்பித்தேன் அவரது வயிற்றிலும் மார்பிலும் அடித்தேன்' என்று பிராமண இந்துத்வ தீவிரவாதி தீபக் மிஸ்ரா போலிஸாருக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்தான்.
 
அந்தக்  வீடியோ காட்சியின் இந்த பயங்கரவாத கும்பல்கள் அவரை உதைப்பதும் அடிப்பதும் பதிவாகியிருக்கின்றன. இறுதியில் அவரது வேனை கவிழ்த்து இறைச்சியை அங்குள்ள கூட்டத்திற்கு காண்பித்து அதன் மூலம் சுற்றியுள்ளவர்களை அடி அடித்துக் கொல் என்று  கோஷமிடத் தூண்டினார்கள்
 
வழக்கம்போலவே போலிஸார்கள் மிகவும் தாமதமாகவே சம்பவ இடத்திற்கு வந்தனர். அடித்துக் கொல்பவர்கள் கடைசி நிலையில்தான் போலிஸாரை அழைக்கின்றார்கள். இதுவெல்லாம் இந்துத்வா தீவிரவாதிகளின் திட்டங்கள். ஆம்புலன்சில் கொண்டு செல்லும்பொழுதே அன்சாரி சுய நினைவு இழந்து செத்துப் போகிறார்.
 
இந்துத்துவ பயங்கவாதிகளின் வைல் படுகொலைகள்
 
அன்சாரியின் கொலையை வாட்ஸப்பிலும் மீடியாவிலும் குற்றவாளிகளே பரப்பப் தொடங்கினர். மோடியின் ராம ராஜ்ஜியத்தின் பண்டிகைகளாக அவர்கள் இதனை கருதுகின்றார்கள். இதுபோன்ற கொலைகள் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் என்று அவர்கள் இதுபோல பரப்பப் தொடங்குகிறார்கள். ஏனெனில் இந்திய சட்டம் சட்டம் இயற்ற பாராளுமன்றம் சென்றவர்கள் எல்லாம் அடித்துக் கொல்லப்படுவதற்று ஆதரவானவர்களாகவே இருக்கின்றார்கள். ஆகவே பயங்கரவாத இந்துத்வவாதிகள் மீது எந்த விதமான வழக்குகள் போடாமல் தப்பிக்க விட்டுவிடுகின்றார்கள். 
 
அவரது மனைவி மரியம் கட்டூனும் 22 வயது மகன் ஷாஜாத் அக்தரும் ,  அன்றைய காலையில் ராம்கர் நகரில் தங்களது குடியிருப்புக்கு வெளியே , 
 
தந்தை அடித்துக் கொல்லப்படும் வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தபடி நிற்கின்றார்கள். 
 
உங்களது பிரியத்துக்குரியானவர்கள் உங்கள் கண்முன்னே அடித்துக் கொல்லப்படுவது எவ்வளவு வலியானது?
 
'என் தந்தை ஒரு நல்ல மனிதர். சாப்பிட வசதி இல்லாதபோது கூட எங்களுக்கான உணவை ஏற்பாடு செய்து விட்டு அவர் பட்டினியாக வேலைக்குச் செல்வார் இப்படி எங்கள் கண்களுக்கு முன்னால் அடித்துக் கொல்லும் காட்சியைக் காண வேதனையாக இருக்கிறது என்று அவரது மகன் கண்கலங்கினார்.
 
குற்றவாளிகள் இந்த லிங்க்சை படமாக்கி ஆன்லைனில் இடுகையிடுகிறார்கள் . ஒருவனை அடித்துக் கொன்று பயமில்லாமல், ஆன்லைனில் இடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு பின்னால் இருக்கும் அந்த இந்துத்வ சக்தியைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். 
 
இந்தியா அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
 
வன்முறையின் வரலாறு
 
2002 குஜராத் மாநில முதல்வராக மோடி இருந்தபோது, ​​1000 த்துக்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற இந்து-முஸ்லீம் கலவரங்களைத் தடுக்க முற்படாமல் , அதற்கு ஆதரவாக பயங்ரவாதங்களுக்கு தலைவராக,  குற்றம் சாட்டப்பட்ட நரேந்திர மோடியை, அமெரிக்கா 2014 அவர் பிரதமராகும் வரையிலும் அவருக்கு விசா தர மறுத்தது.  
 
2012 ல் தி போஸ்டுக்கு அளித்த பேட்டியில், குஜராத்தில் என்ன நடந்தது என்பதற்கு மோடி கொஞ்சம் வருத்தம் காட்டினார். 'நான் எந்த தவறும் செய்யவில்லை, யாரோ செய்த தவறுக்காக நான் குற்றம் சாட்டப்பட்டுள்ளேன்' என்று அவர் கூறினார்.
 
ஆனால் இப்போது, ​​தொடர்ச்சியான சம்பவங்களில் அவரது கட்சி உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை ஆதரிப்பதும் வன்முறையை தூண்டும் வகையில் பேட்டி அளிப்பதும், நாட்டில் உள்ள 172 மில்லியன் முஸ்லீம் சமூகத்திடையே அச்சம் ஏற்படுத்தி வருகின்றனர். .
 
இதனையெல்லாம் மோடி கண்டுகொள்ளாமல் இருப்பதே அவர் 2002 ல் என்ன செய்திருக்கக் கூடும் என்பதற்கான சாட்சி…
 
அன்சாரி கொல்லப்பட்ட வழக்கில், ராம்கர் மாவட்டத்தில் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நித்யானந்த் மஹ்தோ, கும்பலைத் தூண்டியதாக சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வழக்கம்போல விடுவிக்கப்பட்டார். 
 
தெருவில் நடமாடத் தகுதியில்லாத மனிதர்களை சமூகத்தில் திரிய விடுவதும் மக்களைக் காப்பாற்றுகின்ற மோடியை எதிர்க்கின்ற நல்லவர்களை சிறையில் அடைப்பதும் என்கிற வித்தியாசமான விதிமுறைகளோடு இயங்க ஆரம்பித்திருக்கின்றது இந்தியா மோடியின் ஆட்சியில். 
 
12 பயங்கரவாதிகளில் ஒருவன் மைனர் என்கிற காரணத்தால் விடுவித்து மற்றவர்களை சிறையில் அடைத்தனர். பின்னர் அன்சாரி போல்ஸ் காவலில் வைத்து அடித்து கொல்லப்படார் என்று பொய்யாக ஜோடித்து அத்தனை பேரையும் விடுவித்தது நீதிமன்றம். 
 
ஜூலை மாதம் விடுவிக்கப்பட்ட அத்தனை இந்துத்துவ பயங்கரவாதிகளும் முதலில் சென்றது மோடியின் அமைச்சர்கள் குழுவின் உறுப்பினரான ஜெயந்த் சின்ஹாவின் வீட்டிற்கு. 
 
சின்ஹா ​​அவர்களுக்கு இனிப்புகளை அளித்து  மாலைகளை அணிவித்து அடித்துக் கொல்லும் கலாச்சாரம்தான் புதிய மோடியின் இந்தியா என்று நிருபிக்கும் வகையில் நடந்து கொண்டார்.
 
 இஸ்லாமியர்களை அடித்துக் கொன்று இந்துத்வ தீவிரவாதிகளை மட்டும் கொண்ட பயங்கரவாத இந்தியாவாக மாற்றுவதற்கு மோடியின் அரசாங்கம் உருவாகி இருக்கிறது.
 
 
மொழியாக்கம் - ரசிகவ் ஞானியார்
Pin It