குடும்பக் கட்டுப்பாடு மாத்திரையை முதன்முதலாக உருவாக்கிய விஞ்ஞானி கார்ல் ஜெராசி, 91ஆம் வயதில் அமெரிக்காவில் மரணமடைந்தார். - செய்தி

‘குழந்தைகளைத் தருவது கடவுளே’ என்ற மூடநம்பிக்கையை முறியடித்து, 91 வயது வாழ்ந்து காட்டிய விஞ்ஞானிக்கு வீரவணக்கம்!

இஸ்லாம் கிறிஸ்துவ மதத்திலிருந்து ‘இந்து’ மதம் திரும்பியவர்கள் ஜாதியற்றவர்கள்; அவர்கள் ஜாதி ஒழிப்புப் போராளிகள். - ஆர்.எஸ்.எஸ். ஏடு ‘விஜயபாரதம்’

அப்ப, ஆர்.எஸ்.எஸ்.ஸை கூண்டோடு இஸ்லாம் மதத்துக்கு மாற்றி, மீண்டும் ‘இந்து’ மதத்துக்கு திரும்பினா, ஆர்.எஸ்.எஸ்.லேயே ஜாதி ஒழிஞ்சுடும்ல; யோசிங்க.

ஸ்ரீரங்கம் தொகுதியில் அ.தி.மு.க. - பா.ஜ.க.வினர் நேரடி மோதல் - கைகலப்பு. - செய்தி

இப்படி ‘இந்து’க்களுக்குள்ளேயே மோதிக் கொண்டு இந்து ஒற்றுமையை பா.ஜ.க. குலைப்பது தேசத்துரோக மல்லவா?

மத சகிப்புத் தன்மை பற்றி ஒபாமா எங்களுக்கு புத்தி சொல்ல வேண்டாம். - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

பதில் கூறுவதிலாவது கொஞ்சம் சகிப்புத் தன்மையை காட்டக் கூடாதா, ராஜ்நாத், ஜி!

‘வாஸ்து’ சரியில்லை என்பதால் தலைமை செயலகத்தையே இடம் மாற்றுகிறார், தெலுங்கானா முதல்வர். - செய்தி

அப்ப, தெலுங்கானாவுக்கு வாஸ்து சரியில்லைன்னா, மீண்டும் ஆந்திராவுக்கே கொண்டு போயிடுவாரா?

கெஜ்ரிவால் ஜாதியை கேலி செய்து டெல்லியில் பா.ஜ.க. சுவரொட்டி. - செய்தி

அப்படியே, அவருடைய இந்து மதத்தையும் கேலி செய்து, ஒரு சுவரொட்டிப் போட்டா, ஓட்டுகளை குவிச்சிருக்கலாம்ல!

‘கார்ப்பரேட்’ முதலாளிகள் 100 பேர் அமீத்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் சேர்ந்தனர். - செய்தி

‘தாய் கட்சி’ திரும்புகிறார்கள் போலும்! வேத சடங்குகள் எல்லாம் முறைப்படி நடந்ததா?

Pin It