ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் விமானம் ஓட்டியதாக, பம்பாயில் நடந்த விஞ்ஞான காங்கிரசில் முன்னாள் விமான ஓட்டி ஒருவர் அறிக்கை வாசித் தார். இது குறித்து ஏற்கெனவே மறுப்புகள் வெளிவந்துள்ளன.

‘முன்னோர்கள்’ பற்றி கூறப்படும் பெருமைகளை அறிவியல் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டால் ஒழிய ஏற்றுக் கொள்ள முடியாது. இது பற்றி ‘தமிழ் இந்து’ நாளேட்டில் மற்றொரு மறுப்புக் கட்டுரை ஜனவரி 19இல் வெளி வந்திருக்கிறது.

“கலிலியோ இன்று கொண் டாடப்படுவதன் காரணங்களில் ஒன்று, அவர் அரிஸ்டாட்டிலின் கூற்று ஒன்று தவறு என்று நிரூபித்ததால்தான். இரு பொருட் களை உயரத்திலிருந்து கீழே போட்டால், பருமனான பொருள் முதலில் தரையில் விழும் என்று அரிஸ்டாட்டில் சொல்லியிருந் தார். இதைச் சரி என்று - அரிஸ் டாட்டில் போன்ற மாமேதை சொன்னதால் - இரண்டாயிரம் ஆண்டுகள் நம்பிக் கொண்டிருந் தார்கள். கலீலியோ, அரிஸ்டாட் டில் சொன்னது தவறு என்று நிரூபித்தார்.

நம்மிடம் விமானம் பற்றிய தொழில்நுட்பம் இருந்திருக்கலாம்; ஆனால் அழிக்கப்பட்டுவிட்டது என்றும் சொல்லப்படுகிறது. யார் அழித்தார்கள் என்ற கேள்விக்குப் பதில் கிடைக்காது. இந்தியாவில் முதல் அந்நியப் படையெடுப்பு நிகழ்ந்தது அலெக்சாண்டர் காலத் தில். அவர் விமானத்தைப் பார்த் திருந்தால் நிச்சயம் பதிவு பெற் றிருக்கும். அவரும் அன்றைய இந்தியாவின் மேற்குப் பகுதியைத் தாண்டி வரவில்லை. இங்கிருந்த தாகக் கூறப்படும் விமானம் எங்கே போனது?

சரி, நமக்கு விமானம் செய்யும் திறமை இருந்தது என்றே வைத்துக் கொள்வோம். நம்முடைய எதிரி நம்மை வென்றவுடன் அந்தத் திறமையைத் தனதாக்கிக் கொள்ள முயல்வானா அல்லது அழிக்கப் பார்ப்பானா?

மேலும், விமானம் என்பது நாம் நினைப்பதுபோல இந்தியக் கலாச்சாரத்தின் தனிச் சொத்து அல்ல. நம்மைப் போன்ற பல புராதனக் கலாச்சாரங்களில் அதைப் பற்றி பேசப்பட்டிருக்கிறது.

நம்மில் சிலர் சொல்வதுபோல உலகத்தின் மற்ற இடங்களிலும் விமானம் எங்கள் சொத்து என்று சொல்லிக் கொள்கிறவர்கள் இருக்கிறார்கள்”

- என்று கட்டுரை அழுத்தமாக மறுப்பு தெரிவித்துள்ளது. எகிப்து, சீனா, கிரேக்கம் மற்றும் கொலம்பியா நாட்டின் புராணக் கதைகளிலும் விமானம் ஓட்டியது பற்றிய கற்பனைகள் இடம் பெற்றிருப்பதை கட்டுரை ஆதாரத்துடன் எடுத்துக் காட்டியுள்ளது.

Pin It