அன்பார்ந்த தோழர்களுக்கு,

வணக்கம்.

தந்தை பெரியாரின் 45ஆம் நினைவுநாளை (24.12.1973) முன்னிட்டு வரும் டிசம்பர் 23, 2018 அன்று திருச்சியில் ‘காவி பயங்கரவாதத்தை' வீழ்த்த இலட்சம் பேர் பங்கேற்கும் கருஞ் சட்டைப் பேரணி - மாநாடு நடைபெற உள்ளது.

பேரணியையும், மாநாட்டையும் வெற்றி பெற செய்ய வேண்டியது நம்முடைய கடமையும், உரிமையும் ஆகும்.

குறிப்பாக காவி பயங்கரவாதம் தமிழ் நாட்டையும், இந்திய துணை கண்டத்தையும் கார் இருளுக்குள் தள்ளிவிட்டது. வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவில் மனிதனை மனிதன் அடித்துக் கொல்லும் கொடூரமான கொடுங்கோல் ஆட்சியை மோடி தலைமையில் ஆர்.எஸ்.எஸ்.சும், பி.ஜே.பி.யும் நடத்திக் கொண்டு இருக்கின்றன.

இதற்கு மேலும் பொறுமையாகக் கடந்து செல்வது. தன்மானமுள்ள தமிழனுக்கு அவமானம். தமிழினத்தைப் பாதுகாக்க தமிழ் இளைஞர்கள் தோள் கொடுக்கவேண்டிய தருணம் இது.

மேலும் பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய, தமிழ்த் தேசிய, ஜனநாயக சிந்தனையாளர்கள் ஒரு குடையின் கீழ் திரள உள்ளனர்.

இங்கே எந்த வேறுபாடும் இல்லை. காவி பாசிசம் கட்டாயம் வீழ்த்தப்பட வேண்டும் என்கின்ற ஒற்றை இலக்கோடு களம் இறங்கி உள்ள பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப் பில், நாமும் இணைந்து பங்களிப்போம் வாருங்கள் தோழர்களே!

- கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

Pin It