இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது என்று சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா அரசு தொடர்ந்த வழக்கில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வது உண்மை தான் என்று கூறி சர்வதேச நீதிமன்றம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.  இந்த சூழ்நிலையில் உத்திரப் பிரதேசத்தில் நடக்கும் பாஜக ஆட்சி வேலைக்கான ஒரு பரிமாற்றத்திற்கு ஒரு ஒப்பந்தத்தை போட்டுள்ளது. அதனடிப்படையில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து இஸ்ரேலுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வருகிறார்கள். இஸ்ரேலில் நடந்த போரின் காரணமாக அங்கே பல நிறுவனங்களில் பணியாளர்களே இல்லாத சூழ்நிலையில் உத்தரப் பிரதேச அரசு இந்த ஒப்பந்ததை போட்டுக் கொண்டு உபியில் இருந்து இஸ்ரேலுக்கு ஆட்களை அனுப்பி வருகிறது.

பலரும் இந்த ஆபத்தான சூழ்நிலையில் இனப்படுகொலை நடக்கிறது என்று குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு நாட்டுக்கு உயிர் போனாலும் பரவாயில்லை, இங்கே வேலை கிடைக்காது, அதனால் அங்கே போகிறோம் என்று ஏராளமான இளைஞர்கள் இஸ்ரேலை நோக்கி சென்றுள்ளனர். இப்படி வேலைக்கு சென்றுள்ள இளைஞர்களை பேட்டி கண்டு இந்து ஆங்கில நாளேடு ஒரு முழுப்பக்க கட்டுரையை தீட்டியுள்ளது. அந்த இளைஞர்கள் இந்து மதத்தைச் சார்ந்த விளிம்புநிலையில் உள்ளவர்கள் ஆவார். அவர்கள் கூறுவது :- நாங்கள் உத்தரப் பிரதேசத்தில் மிகக் குறைந்த ஊதியத்தில் வேலை செய்துகொண்டு கடுமையான துயரங்களுக்கு உள்ளாகிறோம். எனவே போர் நடந்த இடமானாலும் சரி நாங்கள் அங்கே சென்று பணியாற்ற தயாராகி விட்டோம் என்று அந்த இளைஞர்கள் கூறியுள்ளனர்.

இந்துக்களை காப்பாற்றுகிறோம், ராமருக்கு கோயில் கட்டுகிறோம் என்று கூறிக்கொண்டு, இன்னொரு பக்கம் எப்பொழுதும் போர் பதற்றம் நிழவும், உயிருக்கு ஆபத்தான இஸ்ரேலுக்கு உபி இளைஞர்களை வேலைக்கு அனுப்பி அதற்காக பல விதிகளை தளர்த்தி அவர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கான பணிகளை செய்துவருகிறது உபி அரசு. அதுமட்டுமின்றி இங்கிருந்து இஸ்ரேலுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற நிபந்தனை கூட அதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரபிரதேசத்தில் வேலையில்லாமல் தவிக்கும் அப்பாவி இந்து இளைஞர்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கும் உபி பாஜக அரசின் இந்த உடன்பாடு என்பது இந்து மக்களுக்கும் மட்டுமல்ல, உழைக்கும் மக்களுக்கும் செய்கின்ற மிகப்பெரிய துரோகம் ஆகும்.

விடுதலை இராசேந்திரன்

Pin It