சேலம் : கொளத்தூர் ஈழ ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் “மாவீரர் நாள்” நிகழ்ச்சி 27.11.2023 திங்கள் மாலை 5.30 மணியளவில் சேலம் மாவட்டம் கொளத்தூர் புலியூர் பிரிவில் அமைந்துள்ள பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.

நிகழ்விற்கு தார்க்காடு செ. தர்மலிங்கம் தலைமை தாங்கினார். புலியூரைச் சேர்ந்த தோழர்கள் சரவணன், வாசு, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொளத்தூர் திவிக நகரச் செயலாளர் அறிவுச்செல்வன் வரவேற்புரையாற்றினர்.

மாலை 6.05 மணிக்கு தமிழீழ விடுதலைக்காக போர்க்களத்தில் வீரச் சாவடைந்த விடுதலைப் புலி மாவீரர்கள் - பொதுமக்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் “மாவீரர் பாடல்” ஒளிபரப்பு செய்யப்பட்டது.

kolathoor mani at puliyurமாவீரர் பாடல் ஒளிபரப்பிற்கு பிறகு “மாவீரர் உரை” நிகழ்த்தும் பொதுக்கூட்டம் ஆரம்பமானது.

கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம இளங்கோவன், மூத்த வழக்கறிஞர் இரத்தினம் ஆகியோர் உரையாற்றினார்கள்.

நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி “மாவீரர் நாள்” உரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியை கொளத்தூர் நகரச் செயலாளர் ராமமூர்த்தி தொகுத்து வழங்கினார். இலக்கம்பட்டி ரா. சக்திகுமார் நன்றி கூறினார்.

இந்த வீரவணக்க நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஈழ ஆதரவாளர்கள், பொதுமக்கள் பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் மறைந்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினார்கள்.

மதுரையில் மாவீரர் நாள்

மதுரை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு ராமசுப்பு மண்டபத்தில் நடைபெற்றது. மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் காமாட்சி பாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட கழக காப்பாளர் தளபதி தொடக்க உரையாற்றி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

கழக பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் கலந்து கொண்டு மாவீரர் நாள் உரையாற்றினார்.

தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன், அதிமமுக பொதுச் செயலாளர் பசும்பொன் பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர் வெ.கனியமுதன், மதிமுக மகபூப்ஜான், ஆதித்தமிழர் விடுதலைக் கட்சி விடுதலை வீரன், தமிழக மக்கள் வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மணிபாபா, தமிழ்தேசக் குடியரசு இயக்கம் மெய்யப்பன், தமிழ்ப்புலிகள் கட்சி தென்மண்டல செயலாளர் சிதம்பரம், மக்கள் சட்ட உரிமை இயக்கம் அண்ணாத்துரை, முருகேசன், வேங்கைமாறன், கண்ணன் காமாட்சி, விஜய் உள்ளிட்ட கழகத் தோழர்கள் மற்றும் தோழமை இயக்கத்தினர் பங்கேற்றனர்.

Pin It