சென்னை : புரட்சியாளர் அம்பேத்கரின் 67வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை சென்னை மாவட்டக் கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்டத் துணைத் தலைவர் சுகுமார், இராஜேசு, அசோக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மயிலாப்பூர் : புரட்சியாளர் அம்பேத்கரின் 67வது நினைவு நாளை ஒட்டி மயிலைப் பகுதிக் கழகம் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் மயிலைப் பகுதித் தலைவர் இராவணன், அய்யா உணவகம் சுரேஷ், பிரவீன், உதயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.dvk cadres at ambedkar memorialசேத்துப்பட்டில் ராஜேந்திரன் தலைமையில் கழகத் தோழர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சேலம் மேற்கு : புரட்சியாளர் அம்பேத்கர் 67வது நினைவுநாளை ஒட்டி 06.12.23 காலை 10 மணியளவில் சேலம் மேற்கு மாவட்ட கழக சார்பில் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு தலைமையில், தலைமைக்குழு உறுப்பினர்கள் காவை.ஈசுவரன், அ.சக்திவேல் முன்னிலையில் அச்சங்காட்டில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அதனைத் தொடர்ந்து எது சனாதனம்? எது திராவிடம்? தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை.ஈசுவரன் தலைமை தாங்கினார். கழக மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராசு, தலைமைக்குழு உறுப்பினர் அ.சக்திவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கொளத்தூர் கழக ஒன்றியப் பொறுப்பாளர் ஒ.சுதா நன்றியுரை யாற்றினார். இந்நிகழ்வில் மேட்டூர், மேட்டூர் RS, காவலாண்டியூர், கொளத்தூர் பகுதி தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

06.12.23 காலை 11.30 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழக மேட்டூர் நகர கழக சார்பில் மூலக்காடு பகுதியில் எது சனாதனம்? எது திராவிடம்? தெருமுனைக் கூட்டம் சேலம் மேற்கு மாவட்டப் பொருளாளர் சம்பத்குமார் தலைமையில் நடைபெற்றது. நகரச் செயலாளர் குமரப்பா வரவேற்புரை வழங்கினார். அண்ணாதுரை, குமரப்பா, சி.கோவிந்தராசு குழுவின் பகுத்தறிவுப் பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து தலைமைக்குழு உறுப்பினர்கள் காவை.ஈசுவரன், அ.சக்திவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அம்ஜத்கான் நன்றியுரை கூறினார்.

கோவையில் புரட்சியாளர் அம்பேத்கரின் 67வது நினைவு நாளை முன்னிட்டு கோவை மாவட்டக் கழகம் சார்பில் மாநகரச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் காந்திபுரம் பெரியார் படிப்பகம் முன் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பீளமேடு பகுதியில் ராஜாமணி தலைமையில் அம்பேத்கர் நினைவுநாள் கூட்டம் நடைபெற்றது.

மதுரையில் புரட்சியாளர் நினைவு நாளையொட்டி தல்லாகுளத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் சிலைக்கு மதுரை கழக சார்பில் முருகேசன் தலைமையில் மாலையணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது.

தேனியில் பெரியகுளத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழகத் தோழர்கள் தேனி ராயன், சந்திரன், நாகேந்திரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் தேனி தமிழரசி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Pin It