தமிழ்நாட்டின் கனிமவளங்கள் மிக மோசமாக சுரண்டப்பட்டு வருகின்றன. இதற்கு இந்திய நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. குறிப்பாக காவிரி பாசனப் பகுதி, பாலாற்றுப் பகுதிகள் குறிவைக்கப்படு கிறது. இந்தப் பகுதிகளில் 500 அடி ஆழத்தில் நிலக்கரி பெருமளவில் இருக்கிறது. அதன் இடுக்குகளில் மீதேன் எரிவாயு இருக்கிறது. இந்த எரிவாயுவை எடுக்க ‘கிரேட் ஈஸ்ட்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்’ என்ற தனியார் நிறுவனத் துக்கு 2010ஆம் ஆண்டு அனுமதி அளித்தது இந்திய அரசு. 32 ஆண்டுகள் மீத்தேன் எடுப்பதும் 100 ஆண்டுகள் நிலக்கரி எடுப்பதும் திட்டம். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் காவிரி, பாசனப் பகுதி நிச்சயமாக பாலைவன மாகிவிடும்.

பூமியின் சராசரி வெப்ப நிலையை கடுமையாக உயர்த்துவது மீத்தேன் வாயு. இதை எடுக்கும் முறைக்கு ‘நீரியல் விரிசல்’ என்று பெயர். பூமிக்கடியில் இருக்கும் பாறைகளை உடைத்து நொறுக்கி ‘மீத்தேன்’ எடுக்க வேண்டும். இப்படி நொறுக்குவதற்கு இரசாயனக் கலவை களை பூமிக்குள் செலுத்துகிறார்கள். இந்தத் தொழில் நுட்பம்தான் ‘நீரியல் விரிசல்’. இதனால் நிலத்தடி நீர் கடும் பாதிப்புக்குள்ளாகியதால் 1947ஆம் ஆண்டிலேயே அமெரிக்கா போன்ற நாடுகளில் இத் திட்டங்கள் கைவிடப்பட்டன என்பது மிகவும் முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.

இத்திட்டம் கைவிடப்பட்ட பிறகு ‘ஆமாம் மீத்தேன் எடுப்பது ஆபத்து தான்’ என்று கூறுகிறது இந்திய இயற்கை எரிவாயுக் கழகமான ஓ.என்.ஜி.சி. (O.N.G.C.) நிறுவனம்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் பூமியைப் பாழடித்து ‘ஹைடிரோ கார்பன்’ எடுத்தார்கள். ஓ.என்.ஜி.சி. நிறு வனம், மக்கள் எதிர்ப்பைப் பொருட் படுத்தாமல் சுரண்டலைத் தொடர்ந்தது; மக்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டது; போராட்டம் தொடர்ந்தது; இறுதியாக மக்கள் சக்திக்கு அரசு பணிந்தது.

இப்போது அதே காவிரி பாசனப் பகுதி ‘கதிரா மங்கலத்தில்’ பூமியைத் தோண்டி எரிவாயு எடுத்து வரும் ஓ.என்.ஜி.சி.யை எதிர்த்து மக்கள் 20 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்துகிறார்கள். சுரண்டலை தட்டிக் கேட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 செயல் பாட்டாளர்கள் பிணையில் வெளிவராத பிரிவுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

கதிரா மங்கலத்தில் என்ன நடக்கிறது?

•             30 ஆண்டுகளாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் காவிரியின் கடைமடைப் பகுதியான கதிராமங்கலத்தில் எரிபொருளை பூமியிலிருந்து உறிஞ்சும் வேலையை செய்கிறது. இதற்காக விவசாய நிலங்களுக்கு அடியில் குழாய்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. நிலவளம், நீர்வளம் கடுமையாக பாதித்துவிட்டது. குடிநீரும் சுற்றுச் சூழலும் மாசுபட்டு விட்டன.

‘ஓ.என்.ஜி.சி.’ முழுக்க முழுக்க பார்ப்பனர்கள், மேல் தட்டு வர்க்கத் தினரைக் கொண்ட ஒரு அமைப்பு. அவர்கள் ஒரு கிராமத்தில் நிறை வேற்றப் போகும் திட்டங்கள் குறித்து கிராம மக்களிடம் கலந்து பேசுவதே இல்லை.

•             பொதுத் துறை நிறுவனங்களிலேயே இரண்டாவது பெரிய நிறுவனம் ‘ஓ.என்.ஜி.சி.’. மிகவும் இலாபம் ஈட்டக்கூடிய நிறுவனம் 1958இல் தொடங்கப்பட்டு இந்தியாவில் 28 இடங்களில் செயல்படுகிறது.

•             கதிராமங்கலம் கிராம மக்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பாதிப்பு களை உணர்ந்து, ‘ஓ.என்.ஜி.சி.’ கிராமத்தை விட்டே வெளியேற வேண்டும்; எங்கள் வாழ்க்கையுடன் இனியும் விளையாடாதே என்று போர்க்கொடி உயர்த்திவிட்டார்கள். ஆனால், மக்கள் எதிர்ப்பைப் பற்றி இந்தப் பார்ப்பன மேல்தட்டு வர்க்க நிறுவனத்துக்கு எந்த கவலையும் இல்லாமல் அதிகாரத் திமிருடன் செயல்படுகிறது. எப்படி?

                இதோ, சில முக்கிய தகவல்கள்:

•             எந்த ஒரு திட்டத்தையும் தொடங்கும் போது மக்களிடம் கருத்துகளைக் கேட்க வேண்டும். பொதுக் கருத்துக் கணிப்பு நடத்திய பிறகே திட்டம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்பதும் அரசின் நடைமுறை விதி. இந்தக் கருத்துக் கணிப்பின் அடிப் படை யிலேயே மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்ய வேண்டும். மக்கள் எதிர்ப்பு இருந்தால் மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் அவ்வளவு எளிதாக ஒப்புதல் வழங்காது.

•             இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டில் காவிரிப் படுகையில் 35 சோதனைக் கிணறுகளில் எரிவாயு எடுக்க ‘ஓ.என்.ஜி.சி.’ திட்டமிட்டது. இவற்றில் 14 கடலூர் மாவட்டத்திலும், 9 நாகை மாவட்டத்திலும், 6 அரியலூர் மாவட்டத்திலும், 5 தஞ்சாவூரிலும் அமைக்க திட்டமிடப் பட்டது. கடலூர் தவிர, ஏனைய மாவட்டங்களில் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் மாநில அரசின் மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்துரை வழங்க தயங்கியது.

•             ‘ஓ.என்.ஜி.சி.’ என்ன செய்தது தெரியுமா? ‘மக்கள் கருத்தைத் தூக்கிக் குப்பையில் போடு; இந்த கிராமத்து ஆட்களிடம் எதற்காக கருத்து கேட்க வேண்டும்? கருத்துக் கேட்பே தேவையில்லை; தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் ஒப்புதலும் தேவை இல்லை’ என்று பிரச்சினையை மத்திய சுற்றுச் சூழல் அமைச்கத் திடம் கொண்டு போனது. டெல்லியில் அதிகாரமய்யம் ‘அவாள்’களிடம் தானே! - சுற்றுச் சூழல் அமைச்சகம். ‘ஓ.என்.ஜி.சி.’ கருத்தை அப்படியே ஏற்றுக் கொண்டது.

அதற்குப் பிறகு கடந்த 2017 பிப்ரவரி 15ஆம் தேதி மோடி தலைமையில் “பொருளாதாரப் பிரச்சினை களுக்கான அமைச்சரவைக் குழு” (Cabinet Committee on Economic Affairs) கூடி 31 இடங்களில் இயற்கை எரிவாயு, எண்ணெய், ஹைடிரோ கார்பன் வளங்களைத் தோண்டி எடுப் பதற்கான அனுமதியை வழங்கிவிட்டது.

அது மட்டுமல்ல, காவிரி பாசனப் பகுதியில் மேலும் 110 சோதனைக் கிணறுகளைத் தோண்டவும், சுற்றுச் சூழல் வனத்துறை அமைச்சகத்திடம் இந்த ‘ஓ.என்.ஜி.சி.’ அனுமதி கோரியிருக்கிறது.

•             இன்னொரு செய்தியும் இருக்கிறது. ‘ஹைடிரோ கார்பன்’ திட்டம் நெடுவாசலில் நிறுத்தப்பட்டாலும், ஏனைய பகுதிகளில் ‘ஓ.என்.ஜி.சி.’ எரிவாயுவுடன் ஹைடிரோ கார்பன் எடுக்கும் வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறது. மோடி ஆட்சி, “அனைத்து வகையான ஹைடிரோ கார்பன்களையும் எடுக்கலாம்; இதற்கு ஒரே உரிமம் வாங்கினால் போதும் (Single License)” என்ற முடிவை கொண்டு வந்துள்ளது. இதனால் ஒரு கிராமத்தில் ‘ஹைடிரோ கார்பன் எடுக்கலாம்’ என்ற ஒற்றை உரிமத்தை வைத்துக் கொண்டு, தனியார் நிறுவனங்களும் உள்ளூர் மக்களிடம் எந்த அனுமதியையும் பெறாமல் ‘ஹைடிரோ கார்பனை’ உறிஞ்சி பூமி வளத்தை மலடாக்கி வருகின்றன.

•             விளைநிலங்கள் வழியே குழாய் பதித்து எடுத்துச் செல்லும்போது உடைப்பு, விபத்து நேரும்போது மக்கள் போராடுகிறார்கள். இப்போது அந்த நிறுவனம் ‘டேங்கர்களில்’ ஆயில் எடுத்துச் செல்வதில்லை. இரவு நேரங்களில் இரகசியமாக இயக்கப்படும் டேங்கர்கள், எண்ணெய் கழிவுகளை வெள்ளக்குடி, கமலாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக இருப்பு வைக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுவதாக, உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை கூறுகிறது.

‘கதிராமங்கலம்’ ஒரு காலத்தில் நமது சோழ மன்னர்களால் பார்ப்பனர்களுக்கு தானம் வழங்கப்பட்ட பகுதி. அது பார்ப்பன மங்கலமாகவே இருந்திருக்குமானால் இத்தகைய மக்களை சீரழிக்கும் திட்டங் களைக் கொண்டு வந்திருப்பார்களா? நிச்சயமாகக் கொண்டு வந்திருக்க மாட்டார்கள். வேத பாடசாலைகள்தான் பெருகியிருக்கும்.

இந்த ஆபத்துகளை நமது மக்களிடம் எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டின் தனித்துவத்தைச் சுட்டிக் காட்டுவதற்கே உங்களிடம் வந்திருக்கிறோம். சிந்தியுங்கள்; விழித்துக் கொள்ளுங்கள்!

“பூமியை நல்லபடி வைத் திருங்கள்; இது உங்கள் பெற்றோர் உங்களுக்கு அளித்ததல்ல; இது உங்கள் குழந்தைகள் உங்களுக்கு கடனாக அளித்தது. நமது முன்னோர்களிடமிருந்துஇந்த பூமியை நாம் வாரிசுரிமையாகப் பெற்றுவிட வில்லை. மாறாக நம் குழந்தைகளி டமிருந்துஇப்பூமியை கடனாகப் பெற்றுள்ளோம்.”

- செவ்விந்தியர் என்ற பழங்குடியினர் சொல் வழக்கு.

தகவல்களுக்கு உதவி : பேராசிரியர் ஜெயராமன் எழுதிய ‘மீத்தேன் அகதிகள்’ நூல் மற்றும் ‘உண்மை ஆராயும் குழு அறிக்கை’

Pin It