...
இளமையில் கல் என்று
எழுத்துக்கூட்டிப் படிக்கும்போதே,
வாழ்க்கையில் விழுந்தது
வறுமையெனும் பாறாங்கல்...
கல்லை நகர்த்த
முயற்சித்துத் தோற்றுப்போக,
கல்விதான் நகர்ந்துபோச்சு
கைகளுக்கு எட்டாமல்...
இன்றைக்கு,
அடுக்கிக் கல்சுமந்தால்
அடுத்தவேளைக்குச் சோறு,
அதிலும்
வளர்த்திக் குறைவென்று
சம்பளமும் 'வேறு'...
ம்...ஒன்று ஒன்றாய்க் கூட்டி
தலையில்
நாலுவரிசை வச்சாச்சு
இன்னும் சிலவரிசை
ஏற்றிப் பூசிவிட்டால்,
நானும்கூடத் தூண்தான்
நாளைய இந்தியாவுக்கு!