கந்தசஷ்டி விவகாரத்தை கையிலெடுத்து, முருகனை வைத்தே பாஜகவின் சட்டமன்ற தேர்தல் கள வியூகம் இருந்தது. அறுபடை வீடுகளிலும் தொண்டர்களை திரட்டி எல்.முருகன் அரசியல் ஆதாயம் தேட முற்பட்டார்.
மோடி, அமித் ஷா என வடக்கில் இருந்து வந்த பாஜக தலைவர்களும் கையில் வேல் எடுத்து வெற்றிவேல் வீரவேல் என முழங்கினர்.
வீடுதோறும் வேல் பூஜை நடத்தவும் பாஜக அறைகூவல் விடுத்தது. கமலாலயத்தில் எல்.முருகன் தலைமையேற்று நடத்தினார்.
வீடுகளில் முருகன் படமே இல்லாத ஹெச்.ராஜா, நாராயணன் போன்றோர் காலண்டர் அட்டைகளையும், அட்டை வேலையும் வைத்தாவது பூஜையை வெகு சிறப்பாக நடத்தினர்.
ஆனாலும் பாஜக மீது சிறு கரிசனம்கூட காட்டாமல் கந்தன் கைவிட்டு விட்டாரே! அறுபடை வீடுகளில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெற்றிருக்கிறது. கூடுதலாக ஆட்சியிலும் அமர்ந்திருக்கிறது.
திருச்செந்தூர் - திமுக வேட்பாளர் அனிதா ராதா கிருஷ்ணன் வெற்றி
பழனி - திமுக வேட்பாளர்- பெ.செந்தில்குமார் வெற்றி
சுவாமிமலை ( கும்பகோணம் ) - திமுக வேட்பாளர் அன்பழகன் வெற்றி
திருத்தணி - திமுக வேட்பாளர் எஸ். சந்திரன் வெற்றி
பழமுதிர்சோலை ( மதுரை கிழக்கு) - திமுக வேட்பாளர் பி.மூர்த்தி வெற்றி
திருப்பரங்குன்றத்தில் மட்டும் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா வெற்றி.
(குறிப்பு: இங்கே திமுக போட்டியிடவில்லை. கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிட்டது)
- ர.பிரகாசு