• பசுவின் சாணியிலிருந்து தயாரிக்கும் சோப்பு மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும். - கருநாடக அமைச்சர் பிரபு சவுகான்

அவுங்க மட்டுமே, இனி பாஜக-வில் சேர முடியும்னு அறிவிச்சிருங்க; கட்சி ‘பொத பொதன்னு’ வளரும் !

• உ.பி அரசு நடத்திய ‘கோ சாலையில்’ மின் விபத்து ; 12 பசுக்கள் பரிதாப சாவு. - செய்தி

பரவாயில்லை; யாகம் நடத்தி வேதம் ஓதி, மோட்சத்துக்கு அனுப்பினால் சரியாகிடும்.

• அஞ்சல் துறை பணியாளர் தேர்வு : மீண்டும் தமிழ் புறக்கணிப்பு. - செய்தி

அடுத்து அஞ்சல் முகவரிகளிலேயே தமிழ் எழுத்துக்களுக்குத் தடை வந்துடும் போலிருக்கு !

• உலகின் கலாச்சாரத் தலைமைப் பொறுப்பை இந்தியாவே ஏற்க வேண்டும். - செய்தி

ஆமாம், உலகத் தலைமைப் பதவியை நாங்களே எடுத்துக்குவோம் ; இதுவே எங்களின் உயர்ந்த கலாச்சாரம்.

• வதந்திகளை நம்ப வேண்டாம். - பிரதமர் மோடி

நியாயமான பேச்சு ஜீ; அதுதான் நீங்க பேசுவதை நாங்க நம்புறதே இல்லை.

• இரஜினி மக்கள் மன்றத்துடன் காந்தி மக்கள் இயக்கத்தை இணைக்கவில்லை. - தமிழருவி மணியன்

காந்தியையும் இரஜினி இரசிகராக்கியே தீருவேன் என்று முயற்சிக்காத தமிழருவிக்கு கோடான கோடி நன்றி !

- விடுதலை இராசேந்திரன்

Pin It