• அய்தராபாத்தில் ‘பிராமணர்கள்’ மட்டுமே பங்கேற்ற கிரிக்கெட் போட்டி, டிசம். 25, 26 தேதிகளில் பி.எஸ்.ஆர். மைதானத்தில் நடந்தது. - செய்தி

பிராமணர்கள் மட்டுமே பங்கேற்கும் ‘ஜல்லிக்கட்டு’வைப் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறோம், ‘சுவாமி’!

• ஒரு இந்துவாக இருப்பவன், இந்தியாவுக்கு எதிராக இருக்கவே முடியாது. - ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத்

ஆனால், சக இந்தியனுக்கு எதிராக இருக்கலாம்; எந்தத் தடையும் இல்லை.

• உ.பி.யில் முராத் நகரில் சுடுகாட்டுக்கு சடலத்தை எரிக்க வந்தவர்கள் மீது மயான சுடுகாடு கூரை விழுந்தது; 23 பேர் பலி. - செய்தி

உ.பி. மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த 83 குழந்தைகள் பிராண வாயு சிலிண்டர் இல்லாமல் இறப்பார்கள்; பிணத்தை எரியூட்ட வந்தவர்களே பிணமாவார்கள்; இதற்குப் பெயர்தான் ‘இராமராஜ்யம்’.

• இரஷ்ய, அமெரிக்க ஜனாதிபதிகளைப்போல முதல் கொரானா தடுப்பு ஊசியை மோடி போட்டுக் கொள்ள வேண்டும். - பீகார் காங். தலைவர் அஜீத்

அதெல்லாம் முடியாது சார்! முதல் தடுப்பு ஊசி ஸ்ரீமான் இராமச்சந்திர மூர்த்திக்குத் தான்! அது தான் இந்து ‘தர்மம்’!

• அரசியலுக்கு பா.ஜ.க. இழுக்கும் கிரிக்கெட் வீரர் கங்குலிக்கு நெஞ்சு வலி. - செய்தி

ரஜினியோடு இந்த விளையாட்டை நிறுத்த மாட்டாங்க போலிருக்கே...

 - விடுதலை இராசேந்திரன்

Pin It