அவர்களுக்கு
நாங்கள் தீட்டு,
பாவம் செய்தவர்கள்,
மாமிசம் திண்ணிகள்,
அழுக்கு நாறிகள்...

கைபர், போலன் கணவாய்
சொல்லும்
அவர்கள் அகதியாய் அடைக்கலம்
புகுந்த கதையை...

கூட்டிக்குடுத்து
பதவி சுகம் பெற்றதை
கண்காட்சியாய் நிற்கும்
கட்டிடங்கள் சொல்லும்...

வாழ்வளித்தவன்
முதுகில் சவாரி செய்யும்
உங்களுக்கு
நாங்கள் அடிமைகள்...

இருக்க இடம் கொடுத்தோம்
சுகமாய்
படுத்துக்கொண்டு
எங்களை
அந்நியன் என்கிறாய்...

சம்புகனைக் கொன்றவன் பெயரில்
ராமராஜ்யமும்
அமைப்போம் என்கிறாய்
 
வரலாறுகள் இறந்தே கிடைக்கின்றன....

- ஐயப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It