ஏதாவது ஒரு மொழியில்
என் காதலை கூறவேண்டியிருக்கிறது
உன்னிடம் மிகவும் ரகசியமாக

கடற்கரையில்
நாம் இணந்து நடக்கும்போது
மென்உரசல் தேடி பரிதவிக்கும்
சுண்டுவிரலும் உதவவில்லை

கண்களில் தேக்கியுள்ள காதலை
ஒளித்துவைக்கும் போராட்டத்தில்
கரையொரம் ஒதுங்கிய கிளிஞ்சல்களை
முதன் முறையாக ரசிக்கும்
பொய்யான பாவனையில்
என் கண்களும் உதவவில்லை

நீ இளநீர் குடிக்கும் போது
உன் உதட்டோரத்தில் தொ¢த்த
ஒரு துளி வைரத்தை
என் கைகுட்டையால்
துடைக்கும் தருணத்தில் கிடைத்த
நெருக்கமும் உதவவில்லை

தொண்டைக்குழியில்
சர்க்கரை மூட்கள்
இனிப்புடன் மெல்லக்கரைய
என் குரலும் உதவவில்லை

எவ்வளவுதான் போராடியும்
நாளை நிச்சயம் என் காதலை
கூறும் தீர்மானத்தில்
ஒரு நண்பனாகவே
விடைபெற வேண்டியிருக்கிறது
ஒவ்வொருமுறையும்

- பிரேம பிரபா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It