போர்க் குற்றங்கள் செய்த கொடுங்கோலர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட வரலாறுகள் உண்டு:

•  இரண்டாவது உலகப் போரில் யூதர்களை இனப்படுகொலை செய்த குற்றத்துக்காக இட்லரின் 12 படைத் தளபதிகள் நூரம்பர்க்கில் நடந்த சர்வதேச விசாரணையில் மரண தண்டனைக்கு உள்ளானார்கள். (இட்லர் தற்கொலை செய்து கொண்டுவிட்டார்) இதே குற்றத்துக்காக டோக்கியோவில் நடந்த விசாரணயில் 7 ஜப்பான் இராணுவத் தளபதிகள் தண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

•1995 ஆம் ஆண்டு போஸ்னியாவை ஆக்கிரமித்த செர்பிய இராணுவம் 7000-த்துக்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவித்தது. இது தவிர உயிர் தப்ப முயன்ற 15000 முஸ்லிம் போராளிகளையும் செர்பிய இராணுவம் கொன்று குவித்தது. இந்த கொடிய போர்க் குற்றத்தை விசாரிக்க அய்.நா. விசாரணைக் குழுவை நியமித்தது. நெதர்லாந்து நாட்டில் ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்ற தீர்ப்பாயத்தில் செர்பியாவின் முன்னாள் அதிபர் ராடோவன் கார்ட்சிக், இராணுவ அதிகாரி மிரோ சேவிக் ராடோவன் கராட்சிக் விசாரிக்கப்பட்டனர். இதில் அதிபர் கார்ட்சிக், விசாரணையின்போது மாரடைப்பால் இறந்து விட்டார். இராணுவ அதிகாரி கராட்சிக் 2008இல் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

•              1945 இல் இட்லர் நடத்திய இனப் படுகொலைகளின்போது வதை முகாம்களில் யூதர்களை சித்திரவதை செய்து கொன்ற அடால்ஃப் எய்க்மென் குற்றத்திலிருந்து தப்பிக்க அர்ஜென்டினா நாட்டில் தலைமறைவாக வாழ்ந்தார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு 1960 இல் இஸ்ரேல் உளவாளிகள் அவரைக் கண்டுபிடித்து, இஸ்ரேலுக்கு கொண்டு வந்தனர். போர்க் குற்ற விசாரணை நடத்தி தூக்கிலிடப்பட்டார். இதேபோல், கிளாஸ் பார்பி என்ற மற்றொரு இட்லர் படை தளபதி 1987 இல் தலைமறைவாக இருந்தது கண்டறியப்பட்டு, பிரான்சு நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். யுத்தத்தின்போது இவர் பிரான்சில் படுகொலைகளை செய்தவர்.

•              போஸ்னியா படுகொலைகளை விசாரிக்க யூகோஸ்லேவியாவிலும் (1993இல்), ருவாண்டாவின் இனப் படுகொலைகளை விசாரிக்க தான்சானியா நாட்டிலும் (1994இல்) சர்வதேச நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. இதேபோல், இலங்கை அதிபர் இராஜபக்சேவும் அவரது அமைச்சர்களும், சிங்கள இராணுவத்தினரும் இழைத்த போர்க் குற்றம், இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்பதே - இப்போது உலகம் முழுதும் பரவியுள்ள தமிழர்களின் வலியுறுத்தல்!

Pin It