•              அயர்லாந்து நாட்டில் செயல்படும் உலகப் புகழ் பெற்ற ‘டப்ளின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்’ - இலங்கை அரசின் போர்க் குற்றத்தை உறுதிப்படுத்திவிட்டது.

•              அய்.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் நியமித்த குழுவும், போர்க் குற்றங்கள் நடந்தது உண்மைதான் என்பதை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் மெய்ப்பித்துவிட்டது.

•              போர் முடிந்ததற்குப் பிறகும் ஆள் கடத்தல், சட்ட விரோதப் படுகொலைகள் தொடரு கின்றன. இந்த உண்மையை சர்வதேச மனித உரிமை அமைப்பான ‘ஆம்னஸ்டி இன்டர் நேஷனல்’ அய்.நா.வில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளது.

•              எல்லாவற்றுக்கும் மேலாக, முள்ளி வாய்க் கால் படுகொலை நடந்து முடிந்தவுடன் இலங்கை அரசைக் காப்பாற்றிய அய்.நா. சபை, இப்போது அதன் குரலை மாற்றிக் கொண்டு கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

•              இலங்கை அரசு அறிவித்த பாதுகாப்பு வலையப் பகுதிக்குள் அரசு தந்த உறுதியை நம்பி அடைக்கலம் தேடிச் சென்ற 1,46,679 தமிழர்கள் காணாமல் போனதை (சாகடிக்கப் பட்டதை) மன்னார் அருட் தந்தை (பிஷப்), டாக்டர் ராயப்பா ஜோசப், அரசுப் பதிவேடு களையே ஆதாரமாகக் காட்டி நிரூபித் துள்ளார்.

•              எந்த அரசியல் உரிமையும் தமிழர்களுக்கு வழங்கப் போவது இல்லை. தமிழர்களும் இலங்கை குடிமக்கள்தான் என்று அறிவித்து விட்டார், இராஜபக்சே.

இலங்கையின் அரசியல் சட்டபடி -

•              சிங்கள பவுத்தரே அதிபராக முடியும்.

•              பவுத்தம் மட்டுமே அரசு மதம்.

•              100 சதவீத சிங்களர்களைக் கொண்டதே இலங்கை இராணுவம்.

இத்தகைய ஆட்சியின் கீழ் - இராணுவத்தால் கொல்லப்பட்டவர்கள் அத்தனை பேரும் தமிழர்கள்! இனியும் இணைந்து வாழ முடியுமா?

வாக்கெடுப்பு மூலம் விடுதலைப் பெற்ற நாடுகள்:

•              1983 இல் எத்தியோப்பாவிலிருந்து எரித்திரியா விடுதலை பெற்றது.

•              1999 இல் இந்தோனேசியாவிலிருந்து கிழக்கு தைமூர் - சுய நிர்ணய உரிமை பெற்றது.

•              2006 ஆம் ஆண்டில் யூகோஸ்லேவியாவி லிருந்து மாண்டி நீக்கோரா தனி நாடானது.

•              2011 இல் தெற்கு சூடான் தனி நாடானது.

-              இவை அய்.நா.வால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு விடுதலை பெற்ற

நாடுகள்.

-              இதே போன்ற வாக்கெடுப்பு நடத்தி ஈழ விடுதலையை உறுதி செய்ய வேண்டும்.

-              இது ஒன்றே உலகத் தமிழினத்தின் ஒருமித்த குரல்.

Pin It