கோவாவில் நடந்த பா.ஜ.க. கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பா.ஜ.க.வின் பிரச்சாரக் குழு தலைவராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளார். நரேந்திரமோடிக்கு அத்வானி உள்ளிட்ட பல மூத்த தலைவர்களிட மிருந்து எதிர்ப்பு; அத்வானி கோவா செயற் குழுவையும் புறக்கணித்துவிட்டார். ஆனாலும், ஆர்.எஸ்.எஸ். தனது அதிகாரத்தைப் பயன் படுத்தி, மோடிக்கு இந்தப் பதவியைப் பெற்றுத் தந்துள்ளதாக செய்திகள் வரு கின்றன. அடுத்து நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சார அணுகுமுறை பற்றி மோடி தனது சகாக்களான ராஜ்நாத் வெங்கய்யா நாயுடு வுடன் கலந்து ஆலோசித்தால் எப்படி இருக்கும்?

மோடி : நான் எதிர்பார்த்தபடியே என்னை தலை வராக்கிவிட்டீர்கள். அடுத்து நான் பிரதமர் ஆக வேண்டும். அது பற்றி யோசிக்க வேண்டும்.

ராஜ்நாத் சிங் : தலைவரே! நீங்கள் பிரதமரா வதற்கு கட்சிக்குள்ளேயே தடையாக இருக்கும் அத்வானி, உமாபாரதி போன்ற வர்களை முதலில் நாம் முறியடிக்க வேண்டும். அது பற்றி யோசியுங்கள்

மோடி : யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஒன்றும் பிடிபட மாட்டேங்குதே!

வெங்கையா நாயுடு : அவர்கள் எல்லாம் உண்மையான இந்துக்கள் அல்ல என்று அறிவித்துவிட்டால் போச்சு. அப்புறம் என்ன செய்வார்கள், பார்க்கலாம்.

மோடி : நல்ல யோசனை. அதையும் மீறி, ஏதாவது குறும்புகள் செய்தால் அவர்கள் எல்லாம் உண்மையில் இஸ்லாமியர்கள், இந்துக் களாக நடித்துக் கொண்டிருந்தார்கள் என்று அறிவித்து நடவடிக்கை எடுத்து விடுவேன். அதுதான் ‘மோடி ஸ்டைல்’!

ராஜ்நாத் : நல்லா, சொன்னீங்க, தலைவரே! கட்சிக் குள்ளே உங்களுக்கு கடும் எதிர்ப்பு இருந்தா லும் ஆர்.எஸ்.எஸ். சிபாரிசுல தலைவரா வந்துட்டீங்க. அதுபோல தேர்தலிலே மக்கள் எதிர்ப்பை மீறி பிரதமராக வரதுக்கு ஏதேனும் வழி இருக்கான்னு இப்போதே யோசிப்பது நல்லது.

மோடி : நீங்கள் சொல்றதும் முக்கியமான கருத்து தான். ஆர்.எஸ்.எஸ்.சுக்குத்தான் பிரதமரை அறிவிக்கும் அதிகாரம் இருக்க வேண்டும். அப்பதான் இது இந்துக்களுக்கான நாடு அப்படின்னு, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கலாமா? இது ஒரு ஆலோசனை தான்; யோசிச்சுப் பாருங்க!

வெங்கையா நாயுடு: யோசனை நல்லாதான் இருக்கு. ஆனால், மக்கள் இதை ஏற்றுக் கொண்டு, ஓட்டுப் போடுவாங்களா? அதையும் யோசிக்க வேண்டியிருக்கிறதே!

மோடி : நீங்க சொல்றதும்கூட நியாயம்தான். அப்படி மக்கள் எதிர்த்தா, அதுக்கு ஒரு வழி இருக்கு. நாம் நேரா அலகாபாத் நீதி மன்றத்துல வழக்கு போட்டுடுவோம்! அங்கே நீதிபதிகள் எப்படியும் நமக்கு சாதகமாகத்தான் தீர்ப்புச் சொல்லுவாங்க!

வெங்கையா நாயுடு : அது எப்படி உறுதியாகச் சொல்றீங்க... சட்டம் இடம் கொடுக்குமா?

மோடி : என்ன அரசியல் தெரியாம பேசுறீங்க. ஏற்கனவே அயோத்தியிலேகோவில் இருக் கிற இடத்துலதான் இராமன் பிறந்தான்னு நீதிபதிகள் தீர்ப்பு சொன்னதை மறந்துட் டீங்களா? அதுக் கெல்லாம் சட்டத்தைப் பார்த்தா தீர்ப்பு சொன்னாங்க; சும்மா, அரசியல் தெரியாம பேசாதீங்க.

ராஜ்நாத் : அது சரி. இப்ப காங்கிரசை நாம் எப்படி எதிர்க்கப் போகிறோம். அதுக்கென்ன திட்டம்?

மோடி : அதுதான் ஆடிட்டர் தணிக்கை அறிக்கைகள் எல்லாம் இருக்கே. அதுல காங்கிரஸ்காரங்க செய்ததாக கூறப்பட் டுள்ள ஊழல்களையெல்லாம் மக்களுக் கிட்ட எடுத்துவிட வேண்டியதுதான்!

வெங்கையா நாயுடு : இங்கே, ஒரு சந்தேகம் இருக்கு தலைவரே! குஜராத் மாநில அரசு தணிக்கைத் துறை அறிக்கையிலே நீங்க 1500 கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக கூறியிருக் கிறார்களே!

மோடி : அது எனக்கு தெரியாதாக்கும்? பெருசா பேச வந்துட்டீங்க? மாநில அரசு தணிக்கைத் துறை சுட்டிக் காட்டும் ஊழலுக்கும் மத்திய அரசு தணிக்கைத் துறை சுட்டிக் காட்டும் ஊழலுக்கும் வேறுபாடு இல்லையா? அது வேறு; இது வேறு. அது மட்டுமல்ல. நான், இப்போது மாநில முதலமைச்சருக்கு போட்டியிடவில்லையே! பிறகு எப்படி மாநில தணிக்கைத் துறை அதிகாரியின் குற்றச்சாட்டு என்னைக் கட்டுப்படுத்தும்? இப்படி எதையும் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ராஜ்நாத் : அது சரி. இப்ப, நாம் தேர்தல்ல எந்த முழக்கத்தை முன் வைச்சுப் பிரச்சாரம் செய்யப் போகிறோம்; அதைச் சொல்லுங்க.

மோடி : அதுதான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே! காங்கிரஸ் இல்லாத இந்தியாவை கட்டமைப் போம்! இதுதான் நமது முழக்கம்!

வெங்கையா நாயுடு : அதெப்படிங்க முடியும்? எனக்குப் புரியவில்லை. காங்கிரசே இந்தியா வுல இருக்காதா? அப்ப, காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டவங்கள் எல்லாம் இருப்பாங்களா?

மோடி : அவர்கள் வேண்டுமானால் இருந்து விட்டுப் போகட்டும். அவர்களும் இந்துக்கள் தானே! ராமராஜ்யமே இந்துக்களுக்குத் தானே!

ராஜ்நாத் : தலைவரே ஒரு சந்தேகம். ராமாயண காலத்துல நாடாளுமன்றமோ, காங்கிரசோ, ஆடிட்டர் அறிக்கைகளோ இல்லையே! அப்ப ராமன் அப்படி யாரை எதிர்த்தாரு? எப்படி ஆட்சிக்கு வந்திருப்பாரு?

மோடி : என்னது; நீங்களும் இந்துக்களை புண் படுத்தும்படி கேள்வி கேட்க ஆரம்பிச் சுட்டிங்க....

ராஜ்நாத் : அய்யய்யோ; அப்படி எல்லாம் இல்ல. அப்ப வரப்போகும் ராமராஜ்யத்துல நீங்க தான் ‘ராமன்’; இல்லீங்களா?

மோடி : இதிலென்ன சந்தேகம்?

வெங்கையா நாயுடு : ஒரு தாழ்மையான விண்ணப் பம். அப்போ, எங்களையெல்லாம் அனுமார் கள் ஆக்கிடாமா பார்த்துக்குங்க. நாங்களும் இந்துக்கள்தான். இதை மட்டும் நீங்க மறுந்துடவே கூடாது! ‘பாரத் மாதாக்கி ஜே!’

(ஆலோசனை கூட்டம் கலைகிறது)

Pin It