ஊழல் புரிவோரில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரே அதிகம் என்று அஜீஸ் நந்தி என்ற எழுத்தாளர் கூற, அது ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது. 1991 ஆம் ஆண்டு முதல் இதுவரை நடந்த முக்கிய ஊழல்களில் தொடர்பு உடையவர்கள் ஜாதி வாரிப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இதில் பார்ப்பனர், உயர்ஜாதியினரே அதிகம்.

1)    1991 - முத்திரைத் தாள் ஊழல் - 1. அப்துல் கரீம், டெல்லி (முஸ்லிம்), 2. சரத் பவார் (மராத்தி), 3. ஜகன் புஷ்பால் (பிற்படுத்தப்பட்டவர்)

2)    91-92 - ஹவாலா ஊழல் - 1. ஹர்சத் மேத்தா (பனியா), 2. பி.வி. நரசிம்மராவ் (பார்ப்பனர்)

3)    91-92 - பாமாயில் இறக்குமதி ஊழல் - 1. கே. கருணாகரன் (மாரர்), 2. பி.ஜே. தாமஸ் (கிறுத்துவர்)

4)    1994 - சர்க்கரை இறக்குமதி ஊழல் - 1. கல்ப நாத்ராய் (பூமிஹார்)

5)    1995 - யூரியா ஊழல் - 1. பி.வி. நரசிம்மராவ் (பார்ப்பனர்), 2. பி.வி. நரசிம்மராவ் மகன் பிரபாகர் (பார்ப்பனர்), 3. பிரகாஷ் சந்திர யாதவ் (பிற்படுத்தப்பட்டவர்)

6)    1996 - ஜெ.எம்.எம். ஊழல் - 1. பி.வி. நரசிம்மராவ் (பார்ப்பனர்), 2. சிபு சோரன் (பழங்குடியினர்)

7)    1996 - கால்நடை தீவன ஊழல் - 1. லாலுபிரசாத் யாதவ் (பிற்படுத்தப்பட்டவர்), 2. ஜெகன்னாத் மிஸ்ரா (பார்ப்பனர்)

8)    1996 - காகித இறக்குமதி ஊழல் - 1. பி.வி. நரசிம்ம ராவ்(பார்ப்பனர்), 2.லக்குபாய் பதக் (பார்ப்பனர்)

9)    1996 - ஜெயின் ஹவாலா ஊழல் - 1. எல்.கே. அத்வானி (சிந்தி), 2. வி.சி. சுக்லா (பார்ப்பனர்), 3. பி.சிவசங்கர் (பிற்படுத்தப்பட்டவர்)

10) கிரிக்கெட் மேட்ச் ஊழல் 1997, 2001 - 1. மனோஷ் பரிக்கர் (பார்ப்பனர்), 2. அசாருதீன் (முஸ்லிம்), 3. அஜாய் சடேசா (ராஜ்புத்), 4. நயன் மோங்கியா (கத்ரி).

11)   1997 - இந்தியன் வங்கி ஊழல் - 1. எம். கோபால கிருஷ்ணன் (பிற்படுத்தப்பட்டவர்), 2. வரத ராஜன் (செட்டியார்), 3. சந்திரசாமி (பனியா)

12)   2001 - ஆசிரியர் நியமன ஊழல் - 1. சவுட்டாலா குடும்பத்தினர் (ஜாட்)

13)   2001 - டெகல்ஹா ஊழல் - 1. பங்காரு லஷ்மண் (தாழ்த்தப்பட்டவர்), 2. ஜெயா சேட்லி (நாயர்), 3. சுரேஷ் நந்தா (கத்ரி)

14)   2001 - ஹவாலா மோசடி - கேத்தன் மேத்தா (பனியா)

15)   2002 - தாஜ்மகால் வணிக வளாகம் - மாயாவதி (தாழ்த்தப்பட்டவர்)

16)   2002 - ஹோம் டிரேடு ஊழல் - சஞ்சய் அகர்வல் (பனியா)

17)   2001 - பரக் மிஸ்ஸைவ் - அட்மிரல் சுசில்குமார் (கிறித்துவர்)

18)   2002 - லவாஹா ஊழல் - 1. சுப்ரிய சூலே (மராத்தி), 2. சதானந்த் சூலே (பார்ப்பனர்)

19) ஆப்பரேஷன் வெஸ்ட் எண்ட் பால் அவுட் ஊழல் - 1. ஜார்ஜ் பெர்ணான்ட்ஸ் (கிறித்துவர்), 2. ஜஸ்டிஸ் புக்கான் குடும்பம் (சத்திரியா)

20)   2003 - ஆதர்ஷா வீடு ஒதுக்கீடு - 1. அசோக் சௌஹான் (குன்பி), 2. கர்னல் ஆர்.கே. பக்சி (பார்ப்பனர்)

21)   2003 - சத்தீஸ்ஹர் சுரங்க ஊழல் - திலிப் சிங்க் சூடே (பழங்குடியினர்)

22)   2005 – mplad திட்டத்தில் ஊழல் - 1. அலேமு சர்ச்சில் (கிறித்துவர்), 2. பாஹ்ஹன் குலேஸ்தே (பழங்குடியினர்), 3. ராம்ஸ்வரூப் கோலி (தாழ்த் தப்பட்டவர்), 4. சி.பி.சிங் (பழங்குடியினர்), 5. பி.என்.யாதவ் (பிற்படுத்தப்பட்டவர்) 6. சக்தி மஹராஷ் (பிற்படுத்தப்பட்டவர்) 7. இசாம் சிங் (தாழ்த்தப்பட்டவர்).

23)   2005 - நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு லஞ்சம் - 1. எம்.கே. பாட்டில் (ராஜ்புத்), 2. ஒய்.ஜி. மஹாசன் (பனியா), 3. சுரேஷ் சண்டேல் (ராஜ்புத்), 4. பிரதீப் காந்தி (பனியா), 5. சி.பி.சிங் (பழங்குடியினர்), 6. டாக்டர் சத்ரபால் சிங் லோதா (பிற்படுத்தப்பட்டவர்), 7. நரேந்தர் குமார் குஷ்வாஹா (பிற்படுத்தப்பட்டவர்), 8. ராஜாராம் பால் (தாழ்த்தப்பட்டவர்),  9. லால்சந்தர் கோல் (தாழ்த்தப்பட்டவர்), 10. மனோஷ்குமார் (தாழ்த்தப்பட்டவர்), 11. ராம் சேவக் சிங் (பிற்படுத்தப்பட்டவர்)

24)   2005 - ஐ.பி.ஓ. டேமட் ஊழல் - ரூபால்பென் பாஞ்சால் (விஷ்வகர்மா)

25)   2005 - எண்ணெய்க்கு உணவு ஊழல் - கே. நட்வர் சிங் மற்றும் மகன் (ஜாட் மன்னர் பரம்பரை)

26)   2006 - ஸ்கார்ப்பனே ஒப்பந்த ஊழல் - 1. ரவிசங்கர் (கத்ரி), 2. அபிசேக் வர்மா (காயஸ்தா), 3. சித்தார்த் டைட்லர் (தத்ரி)

27)   2007 - உத்தரப்பிரதேச விவசாய நில ஊழல் - அமிதாப் பச்சன் (காயஸ்தா)

28)   2008 - நம்பிக்கை ஓட்டெடுப்பு ஊழல் - 1. அமர் சிங் (தாக்கூர்), 2. சுதீந்தர குல்கர்னி (பார்ப்பனர்), 3. அசோக் அர்கல் (தாழ்த்தப்பட்டவர்), 4. மஹாவீர் சிங்க் பஹோரா (பழங்குடியினர்), 5. பஹ்ஹன் சிங்க் குவாஸ்தே (பழங்குடியினர்).

29)   2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - 1. ஆ. ராசா (தாழ்த்தப்பட்டவர்), 2. கனிமொழி (மிகவும் பிற்படுத்தப்பட்டவர்)

30)   2009 - ஐ.பி.எல். ஊழல் - 1. லலித்மோடி (பனியா), 2. வசுந்தரராசே (பிற்படுத்தப்பட்டவர்)

31)   2009 - ஜார்க்கண்ட சுரங்க ஊழல் - மதுகோடா (பழங்குடியினர்)

32)   2009 - சத்யம் கம்ப்யூட்டர் ஊழல் - ராமலிங்க ராசு (சத்திரியா)

33)   2009 - கேரளா மின் ஊழல் - பிணராயி விஜயன் (பிற்படுத்தப்பட்டவர்)

34)   2010 - பூனா ஹவாலா ஊழல் - ஹசல் அலி கான் (முஸ்லிம்)

35)   2010 - காமன்வெல்த் போட்டி - 1. சுரேஷ் கல்மாடி (பார்ப்பனர்), 2. லலித் பானோட் (பார்ப்பனர்)

36)   2010 - தேசிய சுகாதார இயக்க ஊழல் - மாயாவதி (தாழ்த்தப்பட்டவர்)

37)   2009-11 நொய்டா வீட்டுமனை ஊழல் - மாயாவதி (தாழ்த்தப்பட்டவர்)

38)   2011 - ஏர்செல் மேக்சிஸ் ஊழல் - 1. தயாநிதி மாறன் (மிகவும் பிற்படுத்தப்பட்டவர்) 2.கலாநிதி மாறன் (மிகவும் பிற்படுத்தப்பட்டவர்)

39)   2011 - ஒபுலாபுரம் சுரங்க ஊழல் - ஜனார்த்தன ரெட்டி (பிற்படுத்தப்பட்டவர்)

40)   2011 - சொத்துக் குவிப்பு ஊழல் - ஜெகன்மோகன் ரெட்டி (கிறித்துவர்)

41)   2012 - யானை சிலை அமைப்பு ஊழல் - மாயாவதி (தாழ்த்தப்பட்டவர்)

42)   2012 - புர்ட்டி வழக்கு - நித்தின் கட்காரி (பார்ப்பனர்)

43)   2012 - உத்தரப்பிரதேச என்.ஜி.ஓ. நிதி முறைகேடு - 1. சல்மான் குர்ஷித் (முஸ்லிம்), 2. லூயிஸ் பெர்ணான்ட்ஸ் (கிறித்துவர்)

44)   2012 - நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் - 1. ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்லால் (பனியா), 2. விஷய் தார்தா (பனியா), 3. சுபோத்காந்த் சகாய் (காயஸ்தா)

45) ஹிமாச்சல பிரதேச சொத்து குவிப்பு வழக்கு - வீரபத்ர சிங்க் (ராஜ்புத்)

46) கர்நாடக நில ஊழல் - 1. பி.எஸ்.எடியூரப்பா (லிங்காயத்), 2. பி.எஸ். எடியூரப்பா மகன்-மருமகன் (லிங்காயத்) 3. ஜிண்டால் (பனியா)

இங்கே குறிப்பிட்டுள்ள 46 ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் சுமார் 100 பேர். அதில் பிற்படுத்தப்பட்டோர் - 16, தாழ்த்தப்பட்டோர் - 12, பழங்குடிப் பிரிவினர் - 8, முஸ்லிம் - 4, கிறித்துவர்கள் - 6. பார்ப்பனர் மற்றும் உயர் ஜாதியினர் - 56 பேர். ஆகவே 56 சதவிகித ஊழலில் சிக்கியுள்ள பார்ப்பன உயர்ஜாதிக்காரர்களை உற்று நோக்காமல், இதர பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் ஊழல் புரிபவர்கள் என்ற அஜீஸ் நந்தியின் கூற்று மிகுந்த வேதனைக்குரியது. தவறான ஒன்றாகும். ஊழலுக்கு ஜாதியுமில்லை, மதமு மில்லை. அது தனி மனிதர்களின் செயல் பாடுகளைப் பொருத்துத்தான் உள்ளது.

நன்றி : ‘தேசிய முரசு’ ஏட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன் எழுதிய கட்டுரை

Pin It