மருத்துவர் ராமதாசை விடுதலை செய்யக் கோரி நாடு முழுதும் அரசுப் பேருந்துகள் தீக்கிரையாக்கப்படுவது வன்மையான கண்ட னத்துக்கு உரியது. தமிழகம் முழுதும் 5 நாட்களில் 513 பேருந்துகள் தீ வைப்புக்கும் கல்வீச்சுக்கும் உள்ளாகியுள்ளன. மருத்துவர் ‘பெரிய அய்யா’ கைதாவதற்கு முன் அளித்த பேட்டியில், மரக் காணத்தில் தலித் மக்களே தங்கள் வீடுகளைக் கொளுத்திக் கொண்டு பா.ம.கவினர் மீது பழி போட்டு வருவதாகக் கூறியுள்ளார். ‘சின்ன அய்யா’வும் இதே கருத்தை வழி மொழிந் துள்ளார். பேருந்துகளை எரிப்பதுகூட விடுதலை சிறுத்தைகள் தானாம். இராமதாஸ் கைது செய் வதற்கு நாடு முழுதும் எதிர்ப்பு கொந்தளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகளே வெளிப்படுத்த விரும்புகிறார்களா, என்ன! இப்படியா அபாண்டமாக பொய் கூறுவது?

பேருந்துகள் ஓட முடியாமல் முடக்கப்படு வதால் பொது மக்கள் கடும்பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். இதனால் பா.ம.க. மக்களின் வெறுப்புக்குள்ளாவதை அக்கட்சித் தலைமை உணர்ந்து தொண்டர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தொல்பொருள் துறை கட்டுப்பாட் டிலுள்ள மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் உச்சியில் வன்னியக் கொடி ஏற்றியது, தங்கள் கட்சியினர்தான் என்பதை ‘சின்ன அய்யா’ ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளார். இதையும் விடுதலை சிறுத்தைகள் தான் செய்தார்கள் என்று பழி போடாமல் விட்டார்களே!

‘பெரிய அய்யா’ சிறையில் படிப்பதற்கு காந்தியார் நூல்களை எடுத்துச் சென்றதாக ஒரு செய்தி கூறுகிறது. அவர் காந்தியார் நூல்களை உடன் எடுத்துச் சென்றது படிப்பதற்காகவா? அல்லது காந்தியாரின் ‘அகிம்சை’ கருத்து களையும் சிறைபடுத்துவதற்காகவா என்பது நமக்குப் புரியவில்லை.

ஜாதி அடிப்படையில் நடக்கும் வன்முறைகள் மனிதநேயத்தை தொலைத்துவிடும்; மக்கள் நலனையும் புதைத்து விடும்; வேண்டாம்; இந்த ஆபத்தான விளையாட்டுகள் என்று சமுதாயக் கவலையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்!

“கருமுட்டை தானம் செய்ய பெண் தேவை”

‘தினத்தந்தி’ (மே 4) நாளேட்டில் ‘கரு முட்டை தானம் செய்ய பெண் தேவை’ என்று ஒரு விளம்பரம் வெளி வந்துள்ளது.

“குழந்தை இல்லாத தம்பதிக்கு கருமுட்டை தானம் செய்ய 30 வயதுக்குக் கீழ் ஒன்றோ, இரண்டோ குழந்தைகளை பெற்ற ஆரோக் கியமான பெண் தேவை. தகுதிக்கேற்ப நல்ல சன்மானம் வழங்கப்படும்” என்று அந்த விளம்பரம் கூறுகிறது. தொடர்பு எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஜாதியை மீறி நடக்கும் திருமணம் என்றால் சாட்டையை சுழற்றும் வெறியர்கள்

-               ‘அக்னியில் பிறந்தவர்கள்’ என்று வீரம் பேசுபவர்கள்

இந்த விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு என்ன பதிலை கூறுவார்கள்? ‘கரு மூட்டை’ வழங்கும் பெண்ணுக்கும் ஜாதி பார்க்க வேண்டும்; இல்லா விட்டால், கையை வெட்டுவோம் என்று முழங்குவார்களா?

Pin It